Moral Stories - Tamil
ஆத்திசூடி கதைகள் – அறம் செய விரும்பு – 1
தேவையானவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய்… அப்படின்னு வாழ்க்கைக்கு தேவையான எல்லா விஷயங்களையும் சொல்லியிருக்காங்க

அறம் செய விரும்பு – 1
காட்சி-1
அப்பா,அம்மா, பூஜா,தேஜா…
பூஜா & தேஜா: பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவைநான்கும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா
அம்மா: பூஜா, தேஜா… சாமிகும்பிட்டாச்சுன்னா சீக்கிரம் வாங்கம்மா… டிபன் சாப்பிடணும்… ஸ்கூலுக்கு போக நேரம் ஆச்சு இல்ல…
பூஜா: இதோ வந்திட்டோம்மா… வாடா தேஜா…
பூஜா & தேஜா: குட்மார்னிங் டாடி…
அப்பா: வெரி குட்மார்னிங்…
பூஜா & தேஜா: குட்மார்னிங் மா…
அம்மா: குட்மார்னிங்…
பூஜா: குட்மார்னிங்… இன்னிக்கு என்னம்மா டிஃபன்…
அம்மா: தோசை தான… ம்… சாரி பூஜா… இன்னிக்கு உன் தம்பிக்கு புடிச்ச இட்லி செஞ்சிட்டேன்… நாளைக்கு உனக்கு பிடிச்ச தோசை… ஓகேவா… கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கடா…
பூஜா: பரவால்லமா… இட்லி தான் காலையில நல்ல உணவுன்னு… எங்க மிஸ் சொன்னாங்க… நான் பழக்கப் படுத்திக்கறேன்…
அம்மா: நல்ல பொண்ணு…
தேஜா: அம்மா, இனிமே பூஜா அக்காவும்… என்னை மாதிரி இட்லி சாப்பிட்டு ஸ்ட்ராங்கா குண்டா ஆயிடுவாங்க இல்லம்மா…
பூஜா: போடா… நான் ஐஸ்வர்யாராய் மாதிரி ஒல்லியாதான் இருப்பேன்….
தேஜா: அப்போ அம்மா குஷ்பூ இட்லி செஞ்சா சாப்பிட மாட்டியா…
மூவரும்: ஹ…ஹ..ஹ..
அம்மா: பூஜா.. இந்த பால்பாக்கெட்ட, வழக்கம்போல புள்ளையார் கோவில் அர்ச்சகர்கிட்ட, குடுத்துட்டு ஸ்கூலுக்கு போங்க…
பூஜா: ஓகே… மா…
தேஜா: அபிஷேகத்துக்காமா…
அம்மா: ஆமாண்டா கண்ணா… என் குழந்தைங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்னு… வேண்டிகிட்டு இருக்கேன்…
பூஜா & தேஜா: பாய்…மா… சீ யூ….
அம்மா: என்னங்க… நம்ம குழந்தைங்க ரெண்டுபேரும் ரொம்ப நல்ல பிள்ளைங்க இல்ல…
அப்பா: எல்லாம் அம்மா சரியா இருந்தா குடும்பமே சரியா இருக்கும் அம்சவேணி…
அம்மா: ஆங்… ஏன் நீங்க மட்டும் என்னவாம்…
அப்பா: விளையாட்டுக்கு கூட நீ என்ன விட்டுக் குடுக்க மாட்டியே… அது தான் என் அம்சவேணி…. ஹ..ஹ..ஹ..
அறம் செய விரும்பு – 2
காட்சி-2
அப்பா,அம்மா, பூஜா,தேஜா… பூஜா: ஆன்ட்டி…ஆன்ட்டி…
செல்வம் அம்மா: யாரு.. பூஜாவா…
பூஜா: ஆமா ஆன்ட்டி… செல்வம் ஸ்கூலுக்கு கிளம்பிட்டானா…
செல்வம் அம்மா: ஆங்.. அவன் உங்க மாதிரி நேரத்துக்கு எந்திரிச்சி… குளிச்சி… ஸ்கூலுக்கு கிளம்பற பையனா அவன்… எருமை மாதிரி எட்டு மணிக்கு எழுந்து…
இப்ப தான் குளிக்கப் போயிருக்கிறான்… பைப்புல தண்ணி கூட நின்னு போச்சு… பாத்ரூம்குள்ள கிணத்துல விழுந்த காக்கா மாதிரி முழிச்சிகிட்டு நிக்கறான்…
அவன் இப்ப எங்க வரப்போறான்… நீங்க போங்க… செல்வம்… டேய் என்ன தாண்டா நீ பாத்ரூம்ல பண்ணிகிட்டு இருக்க…
அறம் செய விரும்பு – 3
காட்சி-3
பிச்சைக்கார அம்மா, பூஜா,தேஜா…
பிச்சைக்கார அம்மா: அம்மா… தாயி…. அம்மா… தாயி… அந்த பாலை எனக்கு குடும்மா… குழந்தை ரெண்டு நாளா பட்டினிம்மா.. பாலுக்கு அழுவுதும்மா…
பூஜா: ஐயோ பாவம்… குழந்தைக்கு ரொம்ப பசிக்குதா…இந்தாம்மா… இந்த பாலை வச்சிக்க…
தேஜா: அக்கா வேண்டாம்.. கோயிலுக்கு அம்மா குடுக்க சொல்லியிருக்காங்க இல்ல… சாமி கோவிச்சிக்கும்…
பூஜா: நாம எல்லாருமே சாமியோட குழந்தைங்க தான்னு அம்மா சொல்லி இருக்காங்க… அழற இந்த குழந்தைக்கு பால் குடுத்தா சாமி கோபப் படாதுடா…
அறம் செய விரும்பு – 4
காட்சி-4
அப்பா,அம்மா, பூஜா,தேஜா…
அப்பா: வீணா கோபப்படாத… குழந்தைங்க ஸ்கூல்ல இருந்து வர்ற நேரம் தான்… நிதானமா விசாரிப்போம்…
அம்மா: நில்லுங்க… பால் பாக்கெட் கோவிலுக்கு வரலைன்னு அர்ச்சகர் போன் பண்ணாரு… என்ன செஞ்சிங்க அதை…
தேஜா: நான் வேண்டான்னு தாம்மா சொன்னேன்… பூஜா தான்…
அம்மா: பூஜாவா… ஏய் என்னடி பண்ண…
பூஜா: இல்லம்மா… ரெண்டு நாளா பால் இல்லாம பசியோட இருந்த ஒரு குழந்தைக்கு… குடுத்திட்டேன் மா… தப்பாம்மா…
அப்பா: அம்ச வேணி… நான் சொல்லல… நம்ம குழந்தைங்க தப்பே பண்ணாதுன்னு…
பூஜா: சாரிம்மா…
அம்மா: சேச்சே…. இப்ப தான் உண்மையிலேயே… சாமிக்கு அபிஷேகம் பண்ணுன புண்ணியம் நமக்கு கிடைச்சிருக்கு…
தேஜா: அம்மா… கண்ணு தெரியாத ஒருத்தருக்கும் இன்னைக்கு உதவி செஞ்சோம்மா….
அம்மா: அப்படியா… உங்களுக்கு என்ன பரிசு குடுக்கறதுன்னே எனக்கு தெரியலையே…
பூஜா: வேண்டாம்மா… நல்ல காரியங்கள் செய்யும் போது… எதையும் எதிர் பார்க்கக் கூடாது… அப்பதான் நமக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்னு அப்பா சொல்லியிருக்காரு இல்ல…
அப்பா: நான் எங்கம்மா சொன்னேன்…
தேஜா: ஔவையார் தான் ஆத்திச்சூடியில அறம்செயவிரும்பு …. தேவையானவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய்… அப்படின்னு வாழ்க்கைக்கு தேவையான எல்லா விஷயங்களையும் சொல்லியிருக்காங்க…
அதான் நம்ம வீட்டுக்கு… ஔவை இல்லம்னு பேரு வச்சிங்களாப்பா… அப்பா: ஆமாண்டா கண்ணா… ஹ..ஹ.ஹ