Moral Stories - Tamil
ஆத்திசூடி கதைகள் – ஆறுவது சினம் – 1
இனிமேலாவது எதுக்கு எடுத்தாலும் கோவப்படாம இரு

ஆறுவது சினம் – 1
காட்சி-1
செல்வம் அம்மா, செல்வம்…
செல்வம் அம்மா: என்னாடா… எந்நேரமும் டிவி பார்த்துகிட்டு இருக்க… படிக்க தேவையில்ல…
செல்வம்: நீ எந்நேரமும் சீரியல் பாக்கறியே… நான் எதுனாச்சும் சொல்றேனா…
செல்வம் அம்மா: ஆங்… பல்ல உடைச்சிடுவேன் பார்த்துக்கோ… பக்கத்து ஊட்டுல போய் பாரு… அந்த குழந்தைங்க தேஜாவும், பூஜாவும்… என்னாமா படிக்கறாங்கன்னு…
செல்வம்: ஆ… ஊன்னா அவங்களை என்னோட ஜாய்ன் பண்ணி பேசாதம்மா…
செல்வம் அம்மா: ஏய்… ஏய்….என்னாடா… என்னடா ரிமோட் எல்லாம் தூக்கி அடிக்கற நீ.. ஆங்…. இதோ பாரு…உன்னை என்னாப் பண்றேன் பாரு நானு… குச்சி எடு… குச்சி எடு…
செல்வம்: மா.. மா.. அடிக்காதமா… ஐயோ அம்மா… என்னம்மா நீ… மா… வலிக்குதும்மா… மா அடிக்காதம்மா… என்னம்மா…
மா.. மா.. அடிக்காதமா… ஐயோ அம்மா… என்னம்மா நீ… மா… வலிக்குதும்மா… மா அடிக்காதம்மா…
ஆறுவது சினம் – 2
காட்சி-2
அப்பா, பூஜா, தேஜா…
செல்வம் குரல்: மா.. மா.. அடிக்காதமா… ஐயோ அம்மா… என்னம்மா நீ… மா… வலிக்குதும்மா… மா அடிக்காதம்மா… என்னம்மா…
அப்பா: பக்கத்து வீட்டு செல்வம், படிக்காம, அவங்க அம்மாகிட்ட அடிவாங்கறான் போல இருக்கு…
தேஜா: அப்பா எங்களை நீங்க அடிக்க மாட்டீங்க தான…
அப்பா: நல்ல பிள்ளைங்களை யாராவது அடிப்பாங்களாம்மா…
பூஜா: குழந்தைங்கள அடிக்கக் கூடாது… இல்லையாப்பா…
அப்பா: ஆமாம்மா அது அவங்க மனநிலையை பாதிக்கும்… எந்த விஷயமா இருந்தாலும் அன்பா புரியும் படி எடுத்து சொல்லி திருத்தணும்…
பூஜா& தேஜா: எங்க அப்பா நல்ல அப்பா…
அப்பா: எம்பிள்ளைங்களும் நல்ல பிள்ளைங்க…
ஆறுவது சினம் – 3
காட்சி-3
செல்வம் அம்மா,பூஜா, தேஜா, செல்வம்…
பூஜா: ஆன்ட்டி.. ஆன்ட்டி..
செல்வம் அம்மா: மா… பூஜா… நேத்துல இருந்து இந்த செல்வம் ஒண்ணுமே தின்ன மாட்டேங்கறான்மா… கோவமாவே கிடக்கிறான்… கொஞ்சமாவது எதாவது சாப்பிட்டு போக சொல்லும்மா…
பூஜா: அம்மா சொல்றாங்க இல்ல செல்வம்… சாப்பிட்டுட்டு வாயேன்…
செல்வம்: எனக்கு யாரும் புத்தி சொல்ல தேவையில்ல…
செல்வம் அம்மா: டேய் என்னாடா… இந்த சின்ன வயசுல… உனக்கு இவ்ளோ கோவம் வருது…
ஆறுவது சினம் – 4
காட்சி-4
ஆசிரியர், செல்வம், பூஜா, தேஜா…
ஆசிரியர்: உடல் நலம் பேணல்… அப்படின்னா என்ன…. நம்ம உடலை ஆரோக்கியமா வச்சிருந்தா தான்… நம்மளால எந்த வேலையும் செய்ய முடியும்… கமான்… பூஜா… எப்படி இந்த உடம்பை பாதுகாக்கணும்…
பூஜா: குளிச்சி, நகம் வெட்டி, தலைவாரி சுத்தமா வச்சிக்கணும் சார்…
ஆசிரியர்: அப்ப பல்துலக்க வேண்டாமா… விளக்குலன்னா என்னா ஆகும்..
மாணவர்கள்: நாத்தம் அடிக்கும் சார்… யாரும் பக்கத்துல வரமாட்டாங்க…ஹ..ஹ..ஹ…
ஆசிரியர்: சைலண்ட்…. சைலண்ட்… சரி வேற எப்படி இந்த உடம்பை பாதுகாப்பா வைச்சுக்கலாம்… செல்வம்…
செல்வம்: சார்… வந்து… ஆ.. ஆ…
ஆசிரியர்: செல்வம்… செல்வம்… என்னாச்சு உனக்கு… ஏய்.. அவனுக்கு யாராவது தண்ணி குடுங்க உடனே…
பூஜா: சார் இவன் அம்மா மேல கோவிச்சிகிட்டு, நேத்துல இருந்து ஒண்ணுமே சாப்பிடலை சார்…
ஆசிரியர்: அப்படியா… பூஜா… கேன்டீனுக்கு போயி இவனுக்கு எதாவது வாங்கிக் குடும்மா…
பூஜா: வேணாம் சார்… எங்கிட்டயே நிறைய சாப்பாடு இருக்கு…
பூஜா: வா… செல்வம்… முதல்ல சாப்பிடலாம்…
பூஜா: சாப்பிடு செல்வம்… நல்லா சாப்பிடு… நல்லா சாப்பிட்டா தான உடம்பு நல்லா இருக்கும்… ம்.. கொஞ்சம் தண்ணி குடுக்கவா…
பூஜா: இங்க பாரு செல்வம்… கோவப்பட்டா ஒண்ணும் நடக்காது… அது நம்ம உடம்பை தான் பாதிக்கும்.. உங்க அம்மா சாப்பிட சொன்னப்பவே நீ சாப்பிட்டு இருந்தா… க்ளாஸ் ரூம்ல அவமானப் பட்டு இருக்க வேண்டாம் இல்ல..
செல்வம்: ரொம்ப தேங்க்ஸ் பூஜா…
பூஜா: தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு செல்வம்… அதான் ஆத்திச்சூடியில ஔவையார் சொல்லி இருக்காங்க இல்ல… ஆறுவது சினம்னு… இனிமேலாவது எதுக்கு எடுத்தாலும் கோவப்படாம இரு…
செல்வம்: ம்… ம்.. ட்ரை பண்றேன்…