Moral Stories - Tamil
ஆத்திசூடி கதைகள் – இயல்வது கரவேல் – 1
நம்மால் இயன்ற உதவிகளை செய்யாமல் இருக்கக் கூடாது

இயல்வது கரவேல் – 1
காட்சி-1
அப்பா,அம்மா, பூஜா,தேஜா…
தேஜா: அப்பா இப்படி டெய்லி எக்ஸைஸ் பண்ணா உடம்பு ஸ்ட்ராங்கா ஆகுமாப்பா…
அப்பா: கண்டிப்பாடா… நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்… இப்படி தினமும் உடற்பயிற்சி செஞ்சா… உடம்புக்கு எந்த நோயும் வராது… மிலிடரி ஜவான் மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கலாம்…
பூஜா: அப்பா… ஜவான்னு நீங்க சொன்ன உடனே தான்… ஞாபகத்துக்கு வருதுப்பா… இன்னிக்கு கொடிநாள்… எங்க ஸ்கூல் சார்பா… ரோட்டுல உண்டியல் எடுத்துட்டு போய் கொடியை குடுத்துட்டு, காசு சேர்க்கப் போறேன்பா…
அப்பா: ரோட்டுல போறீங்களா… பாத்து போம்மா…. கவனமா போங்க என்ன…
அம்மா: இந்தா பூஜா… நூறு ரூபா… நம்ம குடும்பத்துக்காக கொடி வாங்கிட்டு வா…
பூஜா: தேங்க்யூமா…
அப்பா: ம்… நான் நினைச்சேன்.. நீ செஞ்சிட்ட…
அம்மா: அதான் அம்சவேணி….
இயல்வது கரவேல் – 2
காட்சி-2
தலைமை ஆசிரியர், மாணவர்கள்..
தலைமை ஆசிரியர்: மாணவர்களே… நமது நாட்டைக் காக்கும் போர் வீரர்களின் நலனுக்காக… இந்த கொடிநாள் கொண்டாடப் படுகிறது… வழக்கம் போல இந்த வருஷமும்… கொடி நாள் வசூல்ல…
நம்ம பள்ளிக்கூடம் தான் முதல் இடம் வகிக்கணும்.. ஒரு உண்டியலுக்கு ரெண்டு பேரா சென்று, பொதுமக்கள்கிட்ட… வசூல் செஞ்சிட்டு வாங்க… என்ன செய்வீங்களா…
மாணவர்கள்: செய்வோம் சார்…
இயல்வது கரவேல் – 3
காட்சி-3
பூஜா,தேஜா.செல்வம், ஆள் 1, 2
பூஜா: செல்வம் நாம எல்லாம் சேர்ந்து ஒண்ணா போலாமா…
செல்வம்: வேணாம்… வேணாம்.. நீ இப்படி போ.. நாங்க அப்படி போறோம்..ஏன்… எங்க வசூல்ல பங்கு போடலாம்னு பாக்கறியா நீ… பூஜா: சரி… சரி… தேஜா… நீ வாடா…
செல்வம்: என்னாடா.. இது பிச்சைக்காரன் மாதிரி உண்டியலை கையில குடுத்துட்டு அனுப்பிச்சிட்டாங்க… ஸ்கூல்லயே விட்டா ஜாலியா இருக்கலாம்னு பாத்தா…
செல்வம்: செம போருடா…
ஆள் 1: சார்.. காசு போட்டுட்டு கொடியை வாங்கிட்டு போங்க சார்…
செல்வம்: கொடியா… எந்த அரசியல் கட்சிக் கொடி… இல்லைன்னா…
ஆள் 1: யாருக்குத் தெரியும்… ஹெட்மாஸ்டர் விக்க சொன்னாரு.. விக்கறோம்.. இஷ்டம் இருந்தா போடுங்க… இல்லைன்னா…
செல்வம்: நடையை கட்டுங்க… வாடா… தேறாத கேஸ்டா இது…
ஆள் 1 : ம்… தேறாத கேஸா… சின்னப் பசங்களுக்கு வாயப் பாரு… கலெக்ஷன் பண்ணி ஏப்பம் விடுறதுக்காகவே அலையறானுங்க… போங்கடா..
பூஜா: சார்… கொடி நாள் சார்… கொடி வாங்கிக்கோங்க சார்…
ஆள்: ம்.. எதுக்கும்மா இந்த கொடியை விக்கறீங்க…
பூஜா: முன்னால் இராணுவ வீரர்களுக்காகவும்.. போர்ல வீரமரணம் அடைஞ்ச ஜவான்களின் குடும்ப நலனுக்காகவும்… வருஷத்துக்கு ஒருதடவை… டிசம்பர் ஏழாம் தேதி… கொடிநாளை அரசாங்கமே கொண்டாடுது சார்… இதுல வசூல் ஆகிற பணம்… நம்ம நாட்டை பாதுகாக்கற வீரர்களோட நலனுக்காக… செலவு செய்யறாங்க சார்…
ஆள் 2: வெரிகுட்… வெரிகுட்…நல்ல ஸ்டூடண்ட்ஸ் இந்தாம்மா… நூறு ரூபா…
பூஜா: தேங்க்யூ சார்…
தேஜா: சார் கொடியை குத்திக்கோங்க சார்…
ஆள் 2: ஓ… தேங்க்யூ… தேங்க்யூ…
இயல்வது கரவேல் – 4
காட்சி-04
அப்பா,அம்மா, பூஜா,தேஜா…
டிவி அறிவிப்பாளர்: இந்த கொடிநாள் வசூலில் திருவள்ளுவர் உயர்நிலைப் பள்ளி சாதனை படைத்தது… பூஜா தேஜா இருவரும் சேர்ந்து,
எழுபத்து மூன்றாயிரத்து நானூறு ரூபாய் வசூல் செய்து.. முதலிடம்… சிறிய வயதில் பெரிய சாதனை என… பள்ளிக் கல்வி இயக்குநர் பாராட்டு… இது பற்றி மாணவி பூஜா… நம் மாணவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்
டிவியில் பூஜா: இயல்வது கரவேல்… நம்மால் இயன்ற உதவிகளை செய்யாமல் இருக்கக் கூடாது… அப்படின்னு ஆத்திச்சூடி புத்தகத்துல பலமுறை படிச்சிருக்கேன்…
பெத்தவங்க சொல்படியும், என் ஆசிரியர்கள் சொல்படியும்… நடந்ததால தான் எனக்கு இந்த பெருமை கிடைச்சிருக்கு… என் தம்பி தேஜா கூட ரொம்ப ஹெல்ப் பண்ணான்..
அம்மா: என்னங்க அழறீங்க…
அப்பா: அழழடி… நல்ல பிள்ளைங்களை பெத்தவனோட ஆனந்த கண்ணீர்…
அம்மா: ஆங்… நீங்களா பெத்தீங்க..
தேஜா: ஏம்ப்பா… ஆம்பளைங்க குழந்தை பெத்துக்க முடியாதாப்பா…
அப்பா: முடியாதுடா…. அதனாலதான் அவங்க நம்ம வர்க்கத்தை இந்த பாடு படுத்தறாங்க..
அனைவரும்: ஹ..ஹா… ஹா…