Connect with us

Moral Stories - Tamil

ஆத்திசூடி கதைகள் – ஈவது விளக்கேல் – 1

நாம ஒருத்தருக்கு செய்யற உதவிய நிறுத்தாம செய்யறோம்னா, ஆண்டவன் நம்மளை நல்லா வச்சிருக்காருன்னு

ஆத்திசூடி கதைகள் – ஈவது விளக்கேல் – 1 PR048 04

ஈவது விளக்கேல் – 1

காட்சி-1

மாரியப்பன், மனைவி

மாரி. மனைவி: இதோ பாருய்யா… இப்படியே வியாபாரத்துக்கு போகாம… வூட்டுல குந்திகிட்டு இருந்தா… பொழப்பு நடக்குமா… ஞானவேல் ஐயா ரொம்ப நல்லவரு… அவராண்ட போயி… விஷயத்தை சொல்லி, ஒரு மூட்டை அரிசி வியாபரத்துக்கு, கேட்டு தான் பாரேன்யா…

மாரியப்பன்: ஏய்… இந்த அஞ்சு வருஷத்துல, ஒரு தடவை கூட நான் பாக்கி வைச்சது இல்லை… அது தான் சங்கடமாயிருக்கு… குடுப்பாரா புள்ளை… ஐய்ய… கேட்டு தான் பாரேன்னு சொல்றேன் இல்ல…

 

ஈவது விளக்கேல் – 2

காட்சி-2

Advertisement

அப்பா,அம்மா, பூஜா,மாரியப்பன்

அப்பா: இங்க பாரு மாரியப்பா… நான் சொன்னா சொன்னது தான்… இத்தனை நாள் பேச்சு மாறாம, காலையில வாங்குன அரிசி மூட்டைக்கு… சாயந்திரம் பணம் குடுத்த… இப்ப என்ன ஆச்சு… நான் என்ன வட்டிக்கா குடுக்கறேன்…

மாரியப்பன்: அப்படி உங்களை சொல்லுவேனா ஐயா… ரோட்டுல திரிஞ்சிகிட்டு இருந்த என்னை… ஒரு மூட்டை அரிசியை குடுத்து… சைக்கிள்ல கொண்டு போயி சில்லறை வியாபாரம் பண்ணி பொழைச்சிக்கோன்னு வழிகாட்டுன தெய்வமாச்சே நீங்க…

அப்பா: நான் மனுஷன் தான்யா… தெய்வம் இல்ல.. பணத்தை கொடுத்துட்டு மூட்டையை எடுத்துட்டு போ…

மாரியப்பன்: ஐயா… பொஞ்சாதி கடைக்கு போயிட்டு வர்ற வழியில… மழைத்தண்ணி வழுக்கி கீழ விழுந்துட்டா ஐயா… கை உடைஞ்சி மாவு கட்டு போட்டிருக்கேன்.. உங்களுக்கு குடுக்க வேண்டிய பணம்… செலவழிஞ்சி போச்சுய்யா… இந்த ஒரு தடவை குடுத்தீங்கன்னா… தினமும் பழைய பாக்கியையும், கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கொடுத்திடறேன் ஐயா..

அப்பா: ம்… அதெல்லாம் முடியாது… ஒரு வாரமா என்ன பொய் சொல்லலாம்னு யோசனை பண்ணிட்டு இருந்தியா…

பூஜா: அப்பா கொஞ்சம் உள்ள வர்றீங்களா…

அப்பா: என்னம்மா…

Advertisement

பூஜா: வாங்கப்பா…

பூஜா: அப்பா… இந்த பூச்செடி தினமும் நிறைய பூக்கள் தரும்… ஆனா இப்ப அதுக்கு நோய் வந்ததால… பூக்கறதே இல்லை… இருந்தாலும் அதுக்கு மருந்து அடிச்சி… தண்ணி ஊத்தறோம் இல்லையாப்பா… அப்பா: ஆமா..

பூஜா: இத்தனை நாள் மாரியப்பனுக்கு உதவி செஞ்சிகிட்டு இருந்தீங்க… இப்ப அவருக்கு ஒரு கஷ்டம்… இந்த நேரத்துல உதவியை நிறுத்தினா.. பாவம்பா அவரு…

அப்பா: என்னப் பண்ணனுங்கற மா…

பூஜா: ஒரு மூட்டை அரிசி குடுத்துடுங்கப்பா…

அப்பா: அப்படியா…சரி… நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.. வா..

அப்பா: சரி மாரியப்பா.. இனிமே பணத்தை ஒழுங்கா குடுத்துடு.. என்ன…

மாரியப்பன்: ரொம்ப… நன்றிங்க ஐயா…

Advertisement

அப்பா: குடோனுக்கு போயி நான் சொன்னேன்னு ஒரு மூட்டை அரிசி வாங்கிக்கோ… இந்தா… ஆயிரம் ரூபா பணம்… பொஞ்சாதி மருந்து செலவுக்கு வைச்சிக்கோ…

மாரியப்பன்: வேண்டாங்கய்யா… கடன் வேண்டாம்…

அப்பா: அட.. கடன் இல்லப்பா… சும்மா வச்சிக்கோ…

மாரியப்பன்: ஐயா… நீங்க புள்ளை குட்டியோட.. நல்லா இருக்கணும்யா…

அம்மா: ம்.. என்ன அப்பாவுக்கே பொண்ணு புத்தி சொன்ன மாதிரி இருக்கு…

பூஜா: அப்படி எல்லாம் சொல்லாதம்மா… ஆத்திச்சூடி புத்தகத்தை எனக்கு வாங்கிக் கொடுத்ததே அப்பா தான…

ஈவது விளக்கேல்… பிறருக்கு உதவுவதை நிறுத்தி விடக்கூடாது… அப்படின்னு அதுல ஔவையார் சொல்லி இருக்காங்க இல்ல…

அப்பா: அம்சவேணி… சின்னப் பிள்ளைங்களுக்கு நாம நல்ல விஷயங்களை கத்துக் குடுத்துட்டா… நாம தடம் மாறுனாலும் அவங்க விடமாட்டாங்க…

Advertisement

அம்மா: ஏங்க நாம ஒருத்தருக்கு செய்யற உதவிய நிறுத்தாம செய்யறோம்னா, ஆண்டவன் நம்மளை நல்லா வச்சிருக்காருன்னு தான அர்த்தம்…

பூஜா: அப்பா அம்மா எங்கயோ போயிட்டாங்க…

அப்பா: ஹ..ஹ..ஹ..ஹ… என் கூட பழகுறா இல்ல..