Connect with us

Moral Stories - Tamil

ஆத்திசூடி கதைகள் – உடையது விளம்பேல்-1

உடையது விளம்பேல்… அப்படின்னா நம்மகிட்ட அவ்வளவு பொருள் இருக்கு… இவ்வளவு பொருள் இருக்குன்னு ஜம்பம் அடிச்சிக்கக் கூடாது.. அப்படி அடிச்சா அந்த பொருள் இல்லாதவங்களுக்கு மனசு வருத்தப் படும்

ஆத்திசூடி கதைகள் – உடையது விளம்பேல்-1 PR048 05

உடையது விளம்பேல்-1

காட்சி-01

அப்பா,அம்மா, பூஜா,தேஜா…

தேஜா: ஃபார்ட்டிசிக்ஸ்..

ஃபார்ட்டிசெவன்…

ஃபார்ட்டிஎய்ட்…

ஃபார்ட்டி நைன்…

ஃபிஃப்டி…

Advertisement

ஏய் பூஜா… ஃபிஃப்டி முடிஞ்சிடுச்சி இல்ல… ப்ளீஸ்… நான் கொஞ்சம் விளையாடறேனே…

பூஜா: தேஜா… இதெல்லாம் பெண்கள் விளையாடற விளையாட்டு… நீ விளையாடக் கூடாது…

தேஜா: அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. ஸ்கிப்பிங் ஒரு நல்ல எக்ஸர்சைஸ்… யார் வேணும்னாலும் ஆடலாம்னு எங்க மாஸ்டர் சொல்லியிருக்காரு…

பூஜா: அப்படியா… அப்பசரி வா.. ரெண்டுபேரும் சேர்ந்தே ஆடலாம்..

பூஜா & தேஜா: ஒன்…

டூ…

த்ரீ…

ஃபோர்…

Advertisement

பிச்சை எடுப்பவன்: ஐயா… அம்மா… ஏதாவது பழைய துணி இருந்தா குடுங்கம்மா… இருக்கறது எல்லாம் கிழிஞ்சி போச்சிம்மா…

பிச்சை எடுப்பவன்: ஐயா… அம்மா… ஏதாவது பழைய துணி இருந்தா குடுங்கம்மா… இருக்கறது எல்லாம் கிழிஞ்சி போச்சிம்மா…

தேஜா: என்னது… உங்கிட்ட சட்டை, டிராயரே இல்லையா…

பிச்சை எடுப்பவன்: இருந்தது ஒண்ணே ஒண்ணு தான்… அதுவும் கிழிஞ்சி போச்சி…

தேஜா: என்கிட்ட ட்வென்டி டிரஸ் இருக்கு தெரியுமா… சிங்கப்பூர்ல இருந்து எங்க மாமா ஃபோர் டிரஸ் அனுப்பியிருக்காரு… அதை நான் அப்படியே வைச்சிருக்கேனே…

அப்பா: தேஜா… உதவின்னு கேட்டு வந்தவங்ககிட்ட இப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா…

தேஜா: ஏம்ப்பா பேசுனா என்ன ஆகும்…

அப்பா: தப்பும்மா… அப்புறம் அவங்களுக்கு உன்னை மாதிரி நிறைய டிரஸ் இல்லைன்னு வருத்தம் வரும் இல்லையா… தேஜா: சாரிப்பா… தெரியாம சொல்லிட்டேன்.. இனிமே சொல்ல மாட்டேன்பா…

Advertisement

அப்பா: ஓகே.. ஓகே… உங்க அம்மாவை கூப்பிடு… அம்சவேணி…

அம்மா: ம்… இந்தாங்க… இந்த பையனுக்கு இதை குடுத்துடுங்க…

அப்பா: என்னம்மா இது… நான் சொல்லவே இல்ல… கையில டிரஸ்ஸோட வர்றயே…

அம்மா: என்னங்க இது… இத்தனை வருஷமா உங்க கூட இருக்கேன்… நீங்க என்ன நினைப்பீங்கன்னு எனக்கு தெரியாதா…

அப்பா: தேஜா இந்த டிரஸ்ஸ அந்த பையனுக்கு குடுறா…

பிச்சை எடுப்பவன்: ரொம்ப தேங்ஸ்ங்க.. தேஜா: அப்பா… நான் அப்படி பேசுனது அந்த பையனுக்கு வருத்தமா இருந்திருக்குமாப்பா…

அப்பா: கண்டிப்பா… வருத்தம் மட்டும் இல்ல… பொறாமையா கூட இருந்திருக்கும்… அதைவிட ஆபத்து ஒண்ணு நடந்திருக்கு தெரியுமா…

பூஜா: அது என்னப்பா… சொல்லுங்க…

Advertisement

j போன வருஷம்.. என் நண்பன் ஒருத்தன் ராமசாமின்னு… அவனும் நானும் ஒரு பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டு இருந்தோம்… ராமசாமி ஒரு சரியான அலட்டல் பேர்வழி…

தேஜா: அலட்டலா… அப்படின்னா என்னப்பா…

அப்பா: அப்படின்னா தன்கிட்ட எல்லா பொருளும் இருக்குன்னு… பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லிகிட்டே இருப்பான்…

தேஜா: சொன்னா தப்பா அப்பா.. அப்பா: கேட்காமயே சொல்லுவாம்மா… அன்னிக்கு பஸ் ஸ்டாப்புல நாங்க நின்னுகிட்டு இருந்தப்ப என்ன நடந்தது தெரியுமா…

உடையது விளம்பேல்-2

காட்சி-2

அப்பா,நண்பர் ராமசாமி, திருடன்

Advertisement

அப்பா: ஏம்ப்பா ராமசாமி… பஸ்ஸை ரொம்ப நேரமா காணமே… ஒரு ஷேர் ஆட்டோவுல போயிடலாமா… ஒரே ஏரியா தான போறோம்…

ராமசாமி: ம்… காசு செலவாயிடும்

அப்பா: அட… கையில பணம் இல்லைன்னா நான் தர்றேன் பா…

ராமசாமி: டேய்… யாரைப் பாத்து பணம் இல்லேங்கற… என்கிட்ட இருக்கற இந்த மஞ்சப்பை.. பரதேசி பையின்னு நினைச்சியா… ம்.. இப்ப தான் பேங்க்குல ரெண்டு லட்சம்… ரெண்டுலட்சரூவா எடுத்துகிட்டு வர்றேன்… அத்தனையும் ஆயிரம் ரூபா நோட்டு… அது சரி நீ எங்க ஆயிரம் ரூபா நோட்ட பார்த்து இருக்கப் போற…

அப்பா: ஏ… சரிப்பா…

ராமசாமி: ம்…

அப்பா: உங்கிட்ட பணம் இருக்கறது சரி… அதுக்கு ஏன் இப்படி கத்திப் பேசற… யாராவது கவனிக்கப் போறாங்க…

ராமசாமி: கவனிக்கட்டுமே… எனக்கென்ன பயமா… இது ஒண்ணும் கள்ள நோட்டோ திருட்டு நோட்டோ இல்ல… பூமி வித்து சம்பாதிச்ச பணம்… ஹாட் கேஷ்….

Advertisement

திருடன்: ஐயா… இந்த விலாசம் எங்க இருக்குன்னு பாத்து சொல்றீங்களா…

ராமசாமி: இது… பழநியம்மன் கோவில் தெருன்னு போட்டு இருக்கு… இங்க அந்த மாதிரி கோவில் ஒண்ணும் இருக்கற மாதிரி தெரியலையே… ஞானவேலு… நீ பாரு… உனக்கு ஏதாவது தெரியுமான்னு…

அப்பா: எங்க குடுங்க…

ராமசாமி: ஐயையோ… ஐயையோ… ஐயையோ… ஐயையோ…

என் பணம் போச்சுப்பா… என் பணம் போச்சுப்பா…

என் மஞ்சப்பைய எடுத்துட்டு ஓடறான் புடிப்பா… புடிப்பா…மஞ்சப்பைய எடுத்துகிட்டு ஓடறான்பா… புடிப்பா…ஐயையோஎன் பணம் போச்சிய்யா.. எட்டுலட்சம் போச்சிய்யா..

அப்பா: ஏய் ராமசாமி… ராமசாமி… ராமசாமி: ம்…

அப்பா: வாயை மூடறியா… இந்த வயசுல அவனை துரத்தி புடிக்க முடியுமாப்பா… அப்பவே சொன்னேன்… பொது இடத்துல எங்கிட்ட இத்தனை இருக்குன்னு… அத்தனை இருக்குன்னு டம்பம் அடிச்சிகாதேன்னு… கேட்டியா… சத்தம் போட்டு சொன்ன… அவன் உன் மஞ்சப் பைய புடுங்கி எடுத்துட்டு மோட்டார்சைக்கிள்ல… அவன் தப்பிச்சி போயிட்டான்…

Advertisement

அப்பா: பேசாம போலீஸ் ஸ்டேஷன் போயி ஒரு கம்ப்ளெய்ண்டை குடுத்துட்டு நடந்தே வீடு போய் சேரலாம்…

ராமசாமி: ம்… ம்…

அப்பா: கிடைச்சதுன்னா உன் அதிர்ஷ்டம்…

உடையது விளம்பேல்-3

காட்சி-03

அப்பா, பூஜா,தேஜா…

பூஜா: அப்பா இதை தான் ஔவையார்… உடையது விளம்பேல் அப்படின்னு ஆத்திசூடில சொல்லி இருக்காங்களா அப்பா…

Advertisement

அப்பா: கரெக்ட்ரா… உடையது விளம்பேல்… அப்படின்னா நம்மகிட்ட அவ்வளவு பொருள் இருக்கு… இவ்வளவு பொருள் இருக்குன்னு ஜம்பம் அடிச்சிக்கக் கூடாது..

அப்படி அடிச்சா அந்த பொருள் இல்லாதவங்களுக்கு மனசு வருத்தப் படும்… அதுவுமில்லாம மத்தவங்க அதைப் பத்தி தெரிஞ்சிகிட்டு.. நம்ம பொருளை திருடிட்டு போக வாய்ப்பு இருக்கு இல்லையா…

தேஜா: அப்படியா… நான் இனிமே ஜம்பமே அடிக்க மாட்டேன்பா…