Connect with us

Moral Stories - Tamil

ஆத்திசூடி கதைகள் – ஊக்கமது கைவிடேல்-1

எந்த சூழ்நிலையிலயும் மன உறுதியை தளர விடவே கூடாதுன்னு … நீ நினைச்சதனாலதான்… ஜுரம் இருந்தும், ஸ்கூலுக்குப் போய் டெஸ்ட்டை நல்ல படியா எழுதிட்டு வந்துட்ட

ஆத்திசூடி கதைகள் – ஊக்கமது கைவிடேல்-1 PR048 06

ஊக்கமது கைவிடேல்-1

காட்சி-1

செல்வம், நண்பன் 1,2…

செல்வம்: இந்தாங்கடா ஸ்வீட்டு… தின்னுங்க…

நண்பன் 1: டேய்.. என்னடா… டெஸ்ட்ல தெரியாம ஃபர்ஸ்ட்ரேங்க் வாங்கிட்டியா… என்ன…

செல்வம்: டேய் என்னடா… நக்கலா… நாளைக்கு தான் டெஸ்டு… தெரியுமில்ல…

நண்பன் 2: அப்ப எதுக்குடா ஸ்வீட்டு…

செல்வம்: ம்… அந்த பூஜாக்கு பயங்கர ஜுரம்… அதனால அநேகமா அது டெஸ்டு எழுத வராது… நீங்க யாராவது முயற்சி பண்ணி ரேங்க் எடுங்கடா…

Advertisement

நண்பன் 1: ஏன் நீ எடுக்கறது…

செல்வம்: சரியான போட்டி இல்லையே… அதனால நான் டெஸ்ட் எழுதுனா எனக்கு தான் கேவலம்..

நண்பன் 1: ம்.. டேய்… இவனுக்கு கணக்கே வராதுடா…ரீல் விடறான் பாரு… ஹ.ஹ..

 

ஊக்கமது கைவிடேல்-2

காட்சி-2

அப்பா, அம்மா, பூஜா,தேஜா, டாக்டர்…

டாக்டர்: ம்.. ம்.. ஓகே.. மிஸ்டர். ஞானவேல்….

Advertisement

அப்பா: டாக்டர்…

டாக்டர்: உங்க பொண்ணுக்கு வைரஸ் காய்ச்சல் வந்திருக்கு… மருந்து தர்றேன்.,.. ஆனா அலையாம ரெண்டுநாள்… ரெஸ்ட்ல இருக்கணும்… அப்பதான் குணமாகும்… பாத்துக்கங்க…

தேஜா: பூஜா இப்ப எப்படி இருக்கு…

பூஜா: அப்படியே தான் இருக்கு… நாளைக்கு எனக்கு மேக்ஸ் டெஸ்ட்டு… என்ன பண்றதுன்னே தெரியலை தேஜா…

தேஜா: டெஸ்ட்டு தான பூஜா… எழுதலைன்னா பரவாயில்லை

பூஜா: நோ.. நோ.. நான் எழுதுவேன்… இல்லேன்னா ரேங்க் போயிடும்…

அம்மா: என்னம்மா இது.. டாக்டர் நகரவே கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இல்ல..

பூஜா: ரேங்க் வாங்கலைன்னா அவமானம் எனக்கு தான்மா…

Advertisement

அப்பா: என்னம்மா பூஜா என்ன சொல்றா…

அம்மா: நாளைக்கு டெஸ்ட்டுக்கு போயே தீருவேன்னு அடம் புடிக்கறாங்க.. . அப்பா: அவ்வளவு தான… போகலாம்மா… போகலாம்… இப்ப நல்லா ரெஸ்ட் எடு… நாளைக்கு பாக்கலாம்…

அப்பா: ம்.. மருந்தெல்லாம் குடிச்சா உன் உடம்பு சரியா போயிடும் இல்லையா…

அப்பா: அம்சா… இங்க வா…

அப்பா: அம்சவேணி… பூஜா மன உறுதியோட இருக்கா… நிச்சயம் டெஸ்ட் எழுதுவா…

அம்மா: என்னங்க சொல்றீங்க…

அப்பா: ஆமாம்மா… மருந்து கால்… மதி முக்கால்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க இல்லையா… மனசுல நம்பிக்கை இருந்தா போதும்… எல்லா காரியத்துலயும் ஜெயிச்சிடலாம்… அவ கண்டிப்பா டெஸ்ட் எழுதுவா… ஊக்கமது கைவிடேல்-3 காட்சி-03 செல்வம், நண்பன் 1,அம்மா, ஆசிரியர்…

செல்வம்: டேய் ஒரு பெரிய ஆஸ்பத்திரியே நடந்து வருது டோய்… அங்கப் பாரு…

Advertisement

நண்பன் 1: போடா… பூஜா யார் வழிக்கும் வரமாட்டா… காய்ச்சலா இருந்தும் டெஸ்ட் எழுத வந்திருக்கா பாரு… அதைப் பாராட்டு

செல்வம்: சரிதான்… நம்மளை தவிர உலகமே திருந்திட்டு வருதுப்பா…

அம்மா: எக்ஸ்க்யூஸ்மி சார்… பூஜாவுக்கு நல்ல ஜுரம் சார்… கொஞ்சம் தனியா உட்கார வைச்சி டெஸ்ட் எழுத வச்சீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் சார்…

ஆசிரியர்: அப்படியா… அந்த கடைசி பெஞ்ச்ல உட்கார வையுங்க…

செல்வம்: போச்சுடா… காப்பி அடிக்கறதுலயும் மண்ணு விழுந்துடுச்சா…

 

ஊக்கமது கைவிடேல்-4

காட்சி-4

Advertisement

அப்பா, அம்மா, பூஜா,தேஜா, டாக்டர்…

அம்மா: என்னங்க இது… ஜுரத்தோட டெஸ்ட் எழுதப் போன நம்ம பொண்ணை இன்னும் காணோம்… இங்க இருக்கற ஸ்கூல்ல இருந்து வர்றதுக்கு இவ்ளோ நேரமா…

அப்பா: அம்சவேணி… சாதாரண நாளா இருந்தா மணி அடிச்ச உடனே ஓடி வந்துடுவாங்க… பொண்ணுக்கு உடம்பு சரியில்ல இல்ல… பாரு… வந்துட்டா பாரு…

அம்மா: அ.. பூஜா…ஐயோ வந்துட்டியாம்மா…

தேஜா: ஒரு ஆட்டோ புடிச்சி வரலான்னா… வேண்டாம் வீடு பக்கத்துல தானன்னு நடந்தே வந்துட்டாம்மா…

அப்பா: என் மக தைரியசாலி.. ஆங்… எப்படிம்மா டெஸ்ட் எழுதி இருக்க..

பூஜா: எல்லா கணக்கும் சரியா செஞ்சிருக்கேன் பா.. கண்டிப்பா நூத்துக்கு நூறு வரும்… அம்மா எனக்கு ஜுரம் சரியா போச்சு.. கவலைப் படாதீங்க…

அம்மா: நான் எதுக்கும்மா கவலைப் படப் போறேன்… ஊக்கமது கைவிடேல்… அப்படின்னு நீ படிச்ச அதே ஆத்திச் சூடிய நானும் தான படிச்சிருக்கேன்…

Advertisement

எந்த சூழ்நிலையிலயும் மன உறுதியை தளர விடவே கூடாதுன்னு … நீ நினைச்சதனாலதான்… ஜுரம் இருந்தும், ஸ்கூலுக்குப் போய் டெஸ்ட்டை நல்ல படியா எழுதிட்டு வந்துட்ட… சமர்த்து…