Connect with us

Moral Stories - Tamil

ஆத்திசூடி கதைகள் – எண் எழுத்து இகழேல்-1

அடடா… ஏம்ப்பா செல்வம்… பதிணோறு ரெண்டு… இருபத்திரண்டு… முப்பதுல இருபத்திரண்டு போனா… மீதி எட்டு ரூபா தானப்பா வரும்… இப்படி ரெண்டு ரூபாவை வாங்கிட்டு வந்திருக்கியே.. வாய்ப்பாடு படிச்சாதான எண் எழுத்து இகழேல் அப்படின்னு ஔவையார் ஆத்திச்சூடியில சொல்லி இருக்காங்க… கணக்கு சரியா படிக்கலைன்னா பணவிஷயத்துல நம்மள எல்லாரும் ஏமாத்திடுவாங்கப்பா

ஆத்திசூடி கதைகள் – எண் எழுத்து இகழேல்-1 PR048 07

காட்சி-1

செல்வம், செல்வம் அம்மா, செல்வம் அப்பா, பூஜா அம்மா…

செல்வம் அப்பா: எனக்கொரு மகன் இருக்கான்.. அவன் என்னைய போலவே இருக்கான்…

ம்.. என்னடா மகனே படிக்கிறியா…

செல்வம்: ஆமாப்பா… வாய்ப்பாடு… அம்மா தான் படிக்க சொன்னாங்க…

செல்வம் அப்பா: ஆங்… நம்ம பையனா… பொறுப்பா உக்கார்ந்து வாய்ப்பாடு படிச்சிகிட்டு இருக்கான்…

செல்வம் அம்மா: ம்… நான் தான்… பதினாறு வரைக்கும் வாய்ப்பாடு தலைகீழா ஒப்பிக்கணும்னு சொல்லியிருக்கேன்.. இல்லைன்னா அவனுக்கு சாப்பாடே கிடையாது..

செல்வம் அப்பா: ஓ.. அதான் புஸ்தகத்தை தலைகீழா வைச்சி படிச்சிகிட்டு இருக்கானா…

Advertisement

செல்வம் அம்மா: ஆங்… என்னது… தலைகீழாவா வைச்சிகிட்டு இருக்கான்… தா.. வர்றேன் இரு…

செல்வம்: இல்லம்மா… சரியாதாம்மா படிக்கறேன்…

செல்வம் அப்பா: ஏய்… வெளியில திண்ணையில உட்கார்றேன்… இஞ்சி டீ போட்டு எடுத்துகிட்டு வா..

செல்வம்: மா. எனக்கும் ஸ்ட்ராங் டீ… சர்க்கரை ஜாஸ்தி…

செல்வம்அம்மா: ஆங்… உதை படுவ… நீ படிக்கிற அழகுக்கு உனக்கு ஸ்ட்ராங் டீ வேற கேக்குதோ…

செல்வம் அப்பா: டேய்… கணக்கு டெஸ்ட்ல எத்தனைடா மார்க்கு…

செல்வம்: அந்த டீச்சருக்கு என்னைக் கண்டா புடிக்காது போலப்பா… அதனால தெரியாத கணக்கா கேட்டுட்டாங்க.. அதான்… அதான்…

முட்டை போட்டாங்கப்பா…

Advertisement

செல்வம் அப்பா: ஆங்… சத்துணவுல தான் முட்டை போடுவாங்க… இப்ப கணக்குலயும் போடறாங்களா… நானும் உன்னைய மாதிரி இருந்தப்ப… இப்படி தான்… எனக்கு கூட கணக்கே வராது… பத்து மார்க்கு… இருபது மார்க்கு… இவ்ளோ தான் வாங்குவேன்…

செல்வம்: அப்படியாப்பா…

செல்வம் அப்பா: ஆமா… நம்ம தாத்தா இருக்காரே… அவரு பள்ளிக்கூடத்துல படிக்கும் போது… அவரு வாத்தியாரு ரெண்டும் ரெண்டும் எவ்வளவுடான்னு கேட்டு இருக்காரு… எங்க தாத்தா சொல்றதுக்கே ரெண்டு வருஷம் ஆச்சாம்… தமாஷா சொல்லுவாரு… நம்ம பரம்பரையே அப்படித்தான்… டோண்ட் ஒர்ரி…

செல்வம்: ஆ.. நல்ல அப்பா…

செல்வம் அப்பா: ம்..ஹூம்.. அப்பனும் மகனும் வெட்கங்கெட்டு போயி… கொஞ்சிகிட்டு இருக்கீங்களாக்கும் … இந்தாய்யா… உனக்கு டீ…

செல்வம்: எனக்கு…

செல்வம் அம்மா: ம்.. பால் எல்லாம் தீர்ந்து போச்சு.. போயி ரெண்டு பாக்கெட் பால் வாங்கிட்டு வா… இந்தா பணம்…

 

Advertisement

எண் எழுத்து இகழேல்-2

காட்சி-2

செல்வம், பால் கடைக்காரர்

செல்வம்: ரெண்டு பாக்கெட் பால் குடுங்க சார்…

கடைக்காரர்: ஒரு பாக்கெட் பதினோறு ரூபா தம்பி…

செல்வம்: இந்தாங்க எங்கம்மா முப்பது ரூபா தந்தாங்க சார்…

கடைக்காரர்: ஆங்… இந்தா பால்… ம்.. தம்பி.. உனக்கு நான் எவ்வளவு தரணும்..

செல்வம்: எனக்கு கணக்கு வராது சார்… நீங்களே குடுங்க…

Advertisement

கடைக்காரர்: உனக்கு கணக்கு வராதா.. ம்…

இந்தா ரெண்டு ரூபா… போ…

 

எண் எழுத்து இகழேல்-3

காட்சி-1

செல்வம், செல்வம் அம்மா, செல்வம் அப்பா, பூஜா அம்மா…

செல்வம் அம்மா: ஏன்டா… ஆறாவது படிக்கிறியே… உனக்கு கொஞ்சமாவது அறிவு வேண்டாம்…

செல்வம் அப்பா: சரி விடு… வளர்ந்த பையன்… பால் கடை காரன… நான் கேட்டுக்கறேன்..

Advertisement

செல்வம் அம்மா: ம்…ம்.. இப்படி பரிஞ்சி பேசியே புள்ளையை உருப்படாம பண்ணிட்ட…

பூஜா அம்மா: என்ன சிங்காரி.. பிரச்சினை..

செல்வம் அம்மா: முப்பது ரூபா குடுத்து ரெண்டு பால் பாக்கெட் வாங்கிட்டு வர சொன்னா… மீதி துட்டு ரெண்டு ரூபா வாங்கிட்டு வந்திருக்கான்..

பூஜா அம்மா: அடடா… ஏம்ப்பா செல்வம்… பதிணோறு ரெண்டு… இருபத்திரண்டு… முப்பதுல இருபத்திரண்டு போனா… மீதி எட்டு ரூபா தானப்பா வரும்… இப்படி ரெண்டு ரூபாவை வாங்கிட்டு வந்திருக்கியே.. வாய்ப்பாடு படிச்சாதான…

எண் எழுத்து இகழேல் அப்படின்னு ஔவையார் ஆத்திச்சூடியில சொல்லி இருக்காங்க… கணக்கு சரியா படிக்கலைன்னா பணவிஷயத்துல நம்மள எல்லாரும் ஏமாத்திடுவாங்கப்பா…

செல்வம் அப்பா: மெய்யாலுமா தாயி…

செல்வம் அம்மா: ம்… முதல்ல இந்தாளுக்கு வாய்ப்பாடு சொல்லித்தாம்மா..

Advertisement