Connect with us

Moral Stories - Tamil

ஆத்திசூடி கதைகள் – ஐயமிட்டு உண் – 1

ஒவ்வொரு மனுஷங்க உள்ளேயும்… நாம கடவுளை பாக்கணும்.. அப்போ கடவுளுக்கு படைச்சிட்டு தான நாம சாப்பிடணும்

ஐயமிட்டு உண் – 1

காட்சி-1

அப்பா,அம்மா, பூஜா,தேஜா…

அப்பா: ரெட்டு போடப்போறேன்… நான் இப்போ குழந்தைகளா..

தேஜா: அப்பா.. அப்பா…அப்பா… எனக்கு ஃபேவரா இருக்குப்பா… நான் போடறேன்… விட்டுக்குடுத்துடுப்பா ப்ளீஸ்…

பூஜா: ஆங்… விடாதப்பா… கேம்ஸ் ல எல்லாம் விட்டுக்குடுக்கக் கூடாது… நீயே ரெட்டு போடுப்பா…

அம்மா: என்னங்க… சாப்பாடு ரெடி… வாங்க எல்லாரும்… சாப்பிடலாம்…

தேஜா: பாவம்… அம்மாவே டெய்லி சமைக்கிறாங்க…

Advertisement

அப்பா: நானும் சமைப்பேன்… யாரு சாப்பிடறது…

அனைவரும்: ஹ..ஹ..ஹ…

பூஜா: ஏம்ப்பா… பத்து நாளைக்கு சேர்த்து சாப்பிடற மாதிரி இருந்தா.. எல்லா அம்மாக்களுக்கும் வேலை குறையும் இல்ல…

அப்பா: நீ படிச்சி பெரிய விஞ்ஞானி ஆன பிறகு.. அப்படி ஒரு மாத்திரை கண்டுபிடிச்சிரு…

அனைவரும்: ஹ..ஹ..ஹ…

தேஜா: அப்பா நாம செய்யறதுலயே ரொம்ப நல்ல காரியம் எதுப்பா…

அப்பா: பசின்னு வீடு தேடி வந்தவங்களுக்கு சாப்பாடு போடறது தாம்மா… ஏன்னா அதுல தான் போதுன்னு சொல்லுவோம்…

அம்மா: சரி…சரி… பூஜாவுக்கு புடிச்ச சாம்பார் சாதம் பண்ணியிருக்கேன்… எல்லாரும் சாப்பிட வாங்க… ஆறிடப் போகுது…

Advertisement

அப்பா: அம்மாவுக்கு நாம செய்யற ஒரே உதவி… அவ கூப்பிடற நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடப் போறது தான்… வாங்க…

தேஜா: ம்.. சாம்பார் சாதம் நல்ல வாசனை.. செம்ம டேஸ்ட்டும்மா…

அப்பா: ம்… உங்கம்மாவுக்கு கல்யாணம் ஆகிவந்த புதுசுல… சூப்பரா இந்த மாதிரி தான் ஒரு சாம்பார் சாதம் செஞ்சி அசத்தினா… நான் என்ன செஞ்சேன் கேளு…

அம்மா: ஹ..ஹ.. அன்னிக்கு சாயந்திரமே கடைக்கு கூட்டிட்டு போயி… ஒரு பவுன் முத்து மோதிரம் வாங்கிப் போட்டாரு…

பூஜா: அப்படியாப்பா…

அப்பா: ஆமாம்… ஹ.. ஹ.. எனக்கு வெக்கமாயிருக்கு…

தேஜா: அப்பா… ஆம்பளைங்க வெக்கப் படக்கூடாது…

அம்மா: நான் எது நல்லதா செஞ்சாலும் உங்கப்பா உடனே பாராட்டிடுவாரு… நல்லா இல்லைன்னா சத்தமே போடாம ஒதுக்கி வைச்சிட்டு எழுந்து போயிடுவாரு…

Advertisement

பூஜா: உனக்கு நல்ல புருஷனா எங்கப்பா கிடைச்சிருக்காரும்மா… செல்வத்தோட அப்பா, அவங்கம்மாவ நேத்திக்கு சோறு சரியா வேகலைன்னு அடிச்சிருக்காரும்மா… மஹா மோசம்…

அம்மா: பூஜா… மத்தவங்க வீட்டு விஷயத்துல தலையிடக்கூடாதுன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்…

பூஜா: சாரிம்மா… இனிமே பேசமாட்டேன்மா…

அம்மா: ஓகே… ஓகே… சரி.. இன்னும் கொஞ்சம் காய் போட்டுக்கோ…

தேஜா: அப்பா.. சாம்பார் சாதத்துக்கு அரிசி உங்க கடையில தான் செய்யறாங்களா…

அப்பா: நான் வியாபாரிம்மா…. கிராமங்கள்ல இருக்கற விவசாயிதான்… சேத்துலயும், சகதியிலயும் இறங்கி கஷ்டப் பட்டு… இந்த அரிசியை உற்பத்திப் பண்றான்…

பூஜா: விவசாயிகள் இல்லாத உலகம்… கரெண்ட் இல்லாத கம்ப்யூட்டர் மாதிரின்னு… எங்க மிஸ் சொன்னாங்க…

பிச்சைக்காரன்: அம்மா… பசிக்குதும்மா… ஏதாவது சாப்பிடக் குடுங்கம்மா தாயே…

Advertisement

அம்மா: இப்பதான் சாப்பாடு நடக்குது.. அப்புறமா வாப்பா…

அப்பா: அம்சவேணி அப்படி சொல்லாத… பசின்னு யாராவது வந்தா… நியாயமா அவங்களுக்கு போட்டுட்டு தான் நாம சாப்பிடணும்… உன் கைவண்ணம் சாம்பார் சாதம்.. கொஞ்சம் அவனுக்கும் கொண்டு போய் குடேன்…

அம்மா: சரிங்க..

பிச்சைக்காரன்: அம்மா… பசிக்குதும்மா… ஏதாவது சாப்பிடக் குடுங்கம்மா தாயே…

பூஜா: ஐயம் இட்டு உண்… ஔவைப்பாட்டி சொன்னது… இல்லியாப்பா…

அப்பா: ஆமாம்மா… ஒவ்வொரு மனுஷங்க உள்ளேயும்… நாம கடவுளை பாக்கணும்.. அப்போ கடவுளுக்கு படைச்சிட்டு தான நாம சாப்பிடணும்…

தேஜா: சாம்பார்சாதம் ருசியா இருக்குன்னு நாமே நிறைய சாப்பிட்டுட்டா அப்புறம் வயித்தவலி வந்திடும் இல்லியாப்பா…

அப்பா: அடப்பாருடா… இவனோட புது கண்டுபிடிப்பை…

Advertisement

அனைவரும்: ஹ..ஹ..ஹ..