Connect with us

Moral Stories - Tamil

ஆத்திசூடி கதைகள் – ஒப்புரவு ஒழுகு – 1

பெரியவங்க சொல்படி நேர்மையா நடக்கணும்னு… அதுல வந்திருக்கே… உங்க பாராட்டே எனக்கு பெரிய பரிசு சார்… தேங்க்யூ சார்… நான் வர்றேன்

ஆத்திசூடி கதைகள் – ஒப்புரவு ஒழுகு – 1 PR048 10

ஒப்புரவு ஒழுகு – 1

காட்சி-01

ஆசிரியர், பூஜா,செல்வம்,கிஷோர் தோழி, மாணவர்கள்…

தோழி: ஹேய் இன்னைக்கு என்னடி லஞ்ச் கொண்டுவந்த…

பூஜா: லெமன் ரைஸ்…

தோழி: ம்… நீயாவது லெமன்ரைஸ்… நான் வேகமா ஆசையா வந்து லஞ்ச் பாக்ஸை திறந்து பார்த்தா… உள்ள ஒண்ணுமே இல்ல…

ஆசிரியர்: நேர்மை… எங்க சொல்லுங்க…

மாணவன் 1: போடா பூஜா யார் வழிக்கும் வரமாட்டா…

Advertisement

ஆசிரியர்: ம்… சைலன்ஸ்… எல்லாரும் பாடத்தை கவனிங்க… நேர்மை… நேர்மைன்னா என்ன அர்த்தம்… யாருக்குத் தெரியும்… கையை தூக்குங்க..

செல்வம்: எனக்குத் தெரியும் சார்…

ஆசிரியர்: அட… பரவாயில்லயே.. எல்லாருக்கும் தெரியுதே…நம்ம வகுப்புல உள்ள செல்வம் கூட இல்ல புத்திசாலியா மாறிட்டான்.. எங்க செல்வம் சொல்லு.. நேர்மைன்னா என்ன…

செல்வம்: அது வந்து சார்… கருப்புமை… நீலமை.. அதுபோல நேர்மை சார்… ஃபேன்ஸி ஸ்டோர்ல கிடைக்குது சார்… சின்ன பாட்டில் அஞ்சு ரூபா… பெரிய பாட்டில் பதினஞ்சு ரூபா…

மாணவர்கள்: ஹ..ஹ. ஹ…

ஆசிரியர்: சைலன்ஸ்… சைலன்ஸ்… இவ்ளோ புத்திசாலியான பையன என் இத்தனை வருஷ சர்வீஸ்ல பார்த்ததே இல்லை.. உட்கார்… மிக தவறான விடை.. பூஜா நீ சொல்லு…

பூஜா: நம் பெரியோர்கள்… வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில நல்ல வழிமுறைகளை கூறியிருக்கின்றனர்.. அதில் மிக முக்கியமான ஒன்று நேர்மை சார்…

ஆசிரியர்: குட்… மிக சரியான விடை சொன்ன பூஜாவுக்கு எல்லாரும் ஒரு தடவை கைதட்டுங்க..

Advertisement

ஆசிரியர்: நான் இப்ப ஒரு ஆத்திச்சூடியை எழுதப் போறேன்… எல்லாரும் நோட்டு பேனாவை வைச்சிருங்க… ரெடியா வைச்சிருக்கீங்களா…

மாணவர்கள்: ஆங்.. வைச்சிருக்கோம் சார்…

ஆசிரியர்: காணோமா.. வீட்டில இருந்து கொண்டுவந்தியா இல்லையா..

பூஜா: கொண்டுவந்தேன் சார்… இப்போ காணோம்..

கிஷோர்: சார் செல்வம் தான் பூஜாவோட பேனாவை எடுத்து பைக்குள்ள போட்டுகிட்டான்..

ஆசிரியர்: செல்வம் எழுந்திரு.. பேனாவை எடுத்தியா…

செல்வம்: என் பக்கம் இருந்திச்சி சார்… அதான் சார் எடுத்தேன்..

ஆசிரியர்: செல்வம்… நேர்மைன்னு பாடம் நடந்த்தும் போதே இந்த மாதிரி செய்யறியே… வெக்கமா இல்லை… போ.. கிளாஸுக்கு வெளியில நில்லு..

Advertisement

பூஜா: தேங்ஸ் கிஷோர்… ஒப்புரவு ஒழுகு -2 காட்சி-02 பூஜா,செல்வம்,

பூஜா: செல்வம் நில்லு…

செல்வம்: என்ன… இப்ப சந்தோஷம் தான…

பூஜா: சாரிடா செல்வம்.. நீ பேனா எடுத்ததை நானும் பார்த்தேன்… ஆனா அந்த கிஷோர் தான் சொல்லிட்டான்… சாரிடா…

செல்வம்: போ… போ… இந்த க்ளாஸுக்கு வெளியில நிக்கறதெல்லாம் ஐயாவுக்கு ஜுஜுபி..

பூஜா: உள்ள நிறைய பணம் இருக்கு.. விசிட்டிங் கார்டு எல்லாம் இருக்கு… இதை நான் போய் போலீஸ் ஸ்டேஷன்ல ஹேண்ட் ஓவர் பண்ணிட வேண்டியது தான்…

 

ஒப்புரவு ஒழுகு – 3

Advertisement

காட்சி-3 பூஜா,இன்ஸ்பெக்டர்,சரவணன்

பூஜா: சார்… இந்த பர்ஸ் ரோட்டுல கிடந்தது சார்… ப்ளீஸ்.. இதை யாருதுன்னு விசாரிச்சி குடுத்திடறீங்களா…

இன்ஸ்பெக்டர்: ஆங்… வெரிகுட்மா… உக்காருமா… உள்ள விசிட்டிங் கார்டு இருக்கு இல்ல… ம்… கொண்டா…

இன்ஸ்பெக்டர்: ஹலோ… ஆங்… நீங்க எதாவது பர்ஸை மிஸ் பண்ணிட்டிங்களா.. ஹலோ சார்.. உங்க பர்ஸ் போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கு… நான் இன்ஸ்பெக்டர் தான் பேசறேன்… ம்.. பெருமாள் கோவில் தெரு ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிட்டு போங்க..

சரவணன்: ஓ..மை காட்… தேங்க்யூ இன்ஸ்பெக்டர்… நான் இப்பவே வர்றேன்…

சரவணன்: வணக்கம் இன்ஸ்பெக்டர்… என் பேரு சரவணன்… பர்ஸை வாங்க வந்தேன்… இன்ஸ்பெக்டர்: பர்ஸில எத்தனை பணம் வைச்சிருந்தீங்க…

சரவணன்: ஃபிஃப்டீன் தவுசண்ட் சார்… ஏடிஎம் ல டிராப் பண்ணிட்டு பேண்ட் பாக்கெட்டுல வச்சிருந்தேன்… வண்டியில வரும்போது எப்படியோ தவறி கீழ விழுந்துடுச்சி சார்…

சரவணன்: ரொம்ப தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்… ஒரு மாச சம்பளம்… பையனுக்கு இதில தான் ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு இருந்தேன்.. தொலைஞ்சி போயிடுச்சின்னு தெரிஞ்சஉடனே ரொம்ப அப்செட் ஆயிட்டேன் சார்… நீங்க தெய்வம் மாதிரி கண்டுபிடிச்சி குடுத்திருக்கீங்க.. தேங்க்யூ இன்ஸ்பெக்டர்…

Advertisement

இன்ஸ்பெக்டர்: நீங்க தேங்க்ஸ் சொல்லவேண்டியது எனக்கு இல்ல மிஸ்டர். இந்த பொண்ணுக்கு தான்… இவதான் ரோட்டுல கிடந்த உங்க பர்ஸை எடுத்து இங்க கொண்டு வந்து கொடுத்தா…

சரவணன்: மா… நீ சின்னப் பொண்ணா இருந்தாலும் உனக்கு எத்தனை உயர்ந்த குணம்… உன் நேர்மையை பாராட்டி… என் சின்ன பரிசு… வாங்கிக்கம்மா…

பூஜா: வேண்டாம் சார்… ஒப்புரவு ஒழுகுன்னு ஆத்திச்சூடியில படிச்சிருக்கேன்… பெரியவங்க சொல்படி நேர்மையா நடக்கணும்னு… அதுல வந்திருக்கே… உங்க பாராட்டே எனக்கு பெரிய பரிசு சார்… தேங்க்யூ சார்… நான் வர்றேன்..