Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – வடதிசை காற்றும் சூரியனும்
கருணையும், மென்மையுமான நடத்தை தான்… வெற்றியை கொடுக்கும் ஆனால்… வேகமான பலாத்காரமான செயல்… தோல்வியே தரும்

வடதிசை காற்றும் சூரியனும்
காட்சி-1
காற்று, சூரியன், வழிப்போக்கன், VOICE OVER…
VOICE OVER: ஒரு சமயம் வடக்கு திசை காற்றுக்கும் சூரியனுக்கும் இடையில்… தங்களுக்குள் பலசாலி யார் என்று… கடும் போட்டி நிலவியது.
காற்று: நான் உன்னை விட மிகப்பெரிய பலசாலி…
சூரியன்: நீ சொல்றது உண்மையில்ல… நான் தான் எல்லாரையும் விட பலசாலின்னு எல்லாருக்கும் தெரியும்…
காற்று: நீ பொய் சொல்கிறாய்… நான் தான் பலசாலி…
சூரியன்: அப்படி சாதாரணமா சொல்லாத நண்பா… என்னோட சூடான கதிர்கள் உன்னுடைய குளிர்ந்த காற்றை விட… ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்தது…
காற்று: ஆ… அப்படியானால் சரி… நமக்குள் ஒரு பரிட்சை வைத்துப் பார்ப்போம்…
அங்கு பார் ஒரு வழிப்போக்கன் செல்கிறான்… அவனுடைய ஆடைகளை அவனே கழட்டிப் போட வேண்டும்… அப்படி யார் செய்கிறார்களோ… அவர்களே மிகப் பெரிய பலசாலி…
சூரியன்: சரிசரி… நான் இந்த போட்டியில் நிச்சயம் ஜெயிப்பேன்… வேண்டுமென்றால் நீ மோதிப் பார்…
சூரியன்: போட்டியின் துவக்கத்தில் முதலில் நீ சென்று… அவனது கோட்டைக் கழட்டுவதற்கு நீ முயற்சி செய்து பார்…
VOICE OVER: உடனே வடதிசைக் காற்று, அந்த வழிப்போக்கன் மீது, தன் குளிர்ந்த காற்றை… வீசியது…
VOICE OVER: காற்றின் முதல் அலை பட்ட உடனேயே… அவனுடைய கழுத்தை சுற்றியிருந்த துண்டு விழுந்து விட்டது… ஆனால் அவன் உடனே அதை எடுத்து நன்கு இறுக்கிக் கட்டிக் கொண்டான்..
வழிப்போக்கன்: அடக்கடவுளே… ஏன் இப்படி அநியாயத்துக்கு குளிருது… உ..ஊ…. என்னோட கோட்டோட பட்டனை எல்லாம் கரெக்டா பூட்டிக்கணும்… உ..ஊ…
இப்படி ஜில்லுன்னு அடிக்கற காத்தை நான் இதுவரைக்கும் பாத்ததே இல்லை… ஊ… இந்த மோசமான குளிர் காத்து…ஆ…. என் கோட்டை கிழிக்காம விடாது போல இருக்கே… இப்ப நான் என்ன செய்வேன்… ஊ… ஊ…
VOICE OVER: காற்று எவ்வளவு வேகமாக வீசியதோ… அதை விட அதிகமாக அவன் கோட்டை இறுக்கிக் கட்டிக் கொண்டான்…
காற்று: வடதிசைக் காற்று மிகக்கோபமாக… அவனுடைய கோட்டை மோதிப் பார்த்தது… ஆனால் அனைத்து முயற்சிகளும் வீணாகிப் போனது..
காற்று: நான் முயற்சி செய்து பார்த்தேன்.. என்னால் முடியவில்லை… நான் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்… இப்போது உன்னுடைய முறை… நீயே முயற்சி செய்து பார்… தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்… நீ முயற்சி செய்து பார்…
VOICE OVER: அப்பொழுது சூரியன் ஒன்றும் பேசவில்லை… மேகத்திலிருந்து வெளியே வந்து… அந்த வழிப்போக்கனைப் பார்த்து… வேகமாக சிரித்தது… கீழே இருந்த வழிப்போக்கனின் மீது… தன்னுடைய கதிர்களை வீச ஆரம்பித்தது…
வழிப்போக்கன்: இது எவ்வளவு சுகமா இருக்கு பாத்தீங்களா…
VOICE OVER: சூரியன் ஒளிர்ந்து… வெப்பம் அதிகமாகியது…
வழிப்போக்கன்: இப்ப வெப்பம் அதிகமா இருக்கே…
VOICE OVER: நேரம் செல்ல செல்ல நண்பகல் நேரம் வந்தது…
வழிப்போக்கன்: இது என்ன ரொம்ப அதிசயமா இருக்கு…. இப்ப சூரியன் சுட்டெரிக்கறதுனால… நாம கோட்டு போட வேண்டிய அவசியமே இல்ல…
VOICE OVER: வழிப்போக்கன் சந்தோஷமாக கோட்டைக் கழட்டுகிறான்…
காற்று: உண்மைதான்… சூரியனே உன்னுடைய மிகப்பெரிய… சக்தியை நிரூபித்து விட்டாய்…. வெற்றி உனதே…
VOICE OVER: குழந்தைகளே… இங்க பாருங்க… கருணையும், மென்மையுமான நடத்தை தான்… வெற்றியை கொடுக்கும்… ஆனால்… வேகமான பலாத்காரமான செயல்… தோல்வியே தரும்…