Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – நரியும் கொக்கும்
நல்ல செயல்களை தான் எப்பவும் செய்யணும் தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான்..

நரியும் கொக்கும்
காட்சி-01
நரி, கொக்கு, VOICE OVER…
VOICE OVER: முன்னொரு காலத்தில் நடந்த சம்பவம்… ஒரு குள்ளநரியும் கொக்கும் நல்ல நண்பர்களாக இருந்தனர்… ஒருநாள் குள்ளநரி, கொக்கை தன் வீட்டு விருந்திற்கு அழைத்தது…
நரி: நீ என் வீட்டு விருந்துக்கு வர்றியா
கொக்கு நிச்சயமா அவசியம் உன் வீட்டுக்கு வருவேன்… ஆமா எனக்காக நீ என்ன சமைச்சி கொடுப்ப…
நரி: நான் உனக்கு அத அப்புறமா சொல்றேன்..
கொக்கு சரி… நான் எப்போ எந்த நேரத்துல வரணும்…
நரி: நாளைக்கு ராத்திரி ஏழுமணிக்கு மேல உனக்கு எந்த வேலையும் இல்லையே…
கொக்கு ஹ.. ஹ…எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… சரி.. நாளைக்கு பாக்கலாம்…
நரி: ஆமா நாளைக்கு சந்திப்போம்.. நாளைக்கு நீ மறக்காம வந்திடணும்… என்ன…
கொக்கு கண்டிப்பா வருவேன்…
VOICE OVER: அடுத்த நாளே… கொக்கு குள்ளநரியின் வீட்டை குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றடைந்தது…
நரி: ஹலோ… நீங்க கொஞ்சம் உள்ள வந்து ஓய்வெடுங்க… உங்களுக்கு சாப்பாடு தயாரா இருக்கு…
கொக்கு நண்பா… என்னை விருந்துக்கு கூப்பிட்டியே… நீ எனக்காக என்ன சமைச்சி வச்சிருக்க…
நரி: நான் ரொம்ப அற்புதமான சுவையான சூப்பு தயாரிச்சி வச்சிருக்கேன்… அந்த சூப்பு உனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு நினைக்கறேன்…
VOICE OVER: கொக்கு உணவருந்த அமர்ந்தவுடன் நரி உள்ளே சென்று இரண்டு தட்டையான தட்டுகளை எடுத்து வந்தது… அதில் சூப்பை பரிமாறியது..
கொக்கு: அ.. அ… எ.. என்னால இதை குடிக்க முடியாது… என்னுடைய அலகு ரொம்ப நீளமா இருக்கு…
நரி: என்ன நிஜமாவா… சரி.. உனக்கு தான் மிக நீளமான அலகு இருக்கு இல்ல… அந்த அலகால நீ உறிஞ்சி குடிக்கலாம் இல்ல…
கொக்கு: குடிக்கலாம்.. அ.. அ.. ஆனா.. அ.. பரவாயில்லை.. சரி போகட்டும்.. நீ எனக்கு விருந்து குடுத்தது மாதிரி…நான் உனக்கு விருந்து குடுக்க ஆசைப் படறேன்… கூடிய சீக்கிரமே என் வீட்டு விருந்துக்கு நீ வரணும்… சரியா…z ம்.. கண்டிப்பா.. கண்டிப்பா வருவேன்…
கொக்கு நாளைக்கு ராத்திரியே நீ என் வீட்டுக்கு வரலாமே…
நரி: நான் நிச்சயமா வருவேன்…
VOICE OVER: அன்று இரவு கொக்கு பசியுடனேயே வீட்டுக்கு சென்றது…
அடுத்தநாள் கொக்கின் வீட்டிற்கு சரியான நேரத்திற்கு சென்றது நரி…
கொக்கு: அட.. வா… வா என் உயிர் தோழனே… நீ வர்ற வழிய நான் பார்த்துகிட்டே இருந்தேன்…
நரி: நீ எனக்காக என்ன சமைச்சி வச்சிருக்க…
கொக்கு: நீ என்னுடைய முக்கியமான விருந்தாளி இல்லையா… அதனால உனக்கு பிடிச்ச சூப்பை தயார் பண்ணி வச்சிருக்கேன்… உனக்கு தான் ரொம்ப பிடிக்குமே..
நரி: என்ன நிஜமாவா…
கொக்கு: ஆமா… நிஜமாதான்…
சரி: வா… வந்து உக்காரு… உனக்காக சூப்பு கொண்டுவர்றேன்..
VOICE OVER: குள்ளநரி விக்கித்து போய்விட்டது… ஏனென்றால் கொக்கு மிக உயரமான ஜாடிகளில் சூப்பைக் கொண்டு வந்தது…
ஆனால் நரியினால் வாயை நுழைக்க முடியாத அளவுக்கு மிகவும் குறுகலாக இருந்தது…
நரி: ம்.. பாக்கும்போதே சூப்பு அழகா இருக்கும், ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுது நண்பா… என்னால அந்த குறுகலான ஜாடிக்குள்ள என் வாயை நுழைச்சி குடிக்க முடியாதே…
கொக்கு: அ.. உண்மையாவா… அ… அப்படின்னா ஜாடியோட வெளிப்பகுதியை தான் உன்னால நக்க முடியும்… அப்படித்தான…
நரி: ஆங்… ஆமாம்… சரி பரவாயில்ல..
கொக்கு: என்னோட உயிர் தோழனே… நான் இப்படி சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடு… தினை விதைத்தவன் தினை அறுப்பான்… வினை விதை விதைத்தவன் வினை அறுப்பான்…
VOICE OVER: குழந்தைகளே… நல்ல செயல்களை தான் எப்பவும் செய்யணும்… தினை விதைத்தவன் தினை அறுப்பான்… வினை விதைப்பவன் வினை அறுப்பான்…