Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – மரக்குச்சி கட்டு
குழந்தைகளே ஒரு செயலை ஒற்றுமையா செஞ்சோம்னா அது சீக்கிரமா முடிஞ்சிடும்… ஒற்றுமையே பலம்

மரக்குச்சி கட்டு
காட்சி -1
அப்பா, மகன் 1,2,3 & VOICE OVER…
VOICE OVER: ஒரு ஊரில் சாகும் தருவாயில் ஒரு தந்தை… தம் பிள்ளைகளை அழைத்தார்… அவர் வாழ்க்கையின் இறுதிபாடத்தை… தன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க எண்ணினார்…
அப்பா: எங்கிட்ட வாங்க… எங்கிட்ட வாங்க என்னோட அருமை பசங்களா… நான் சாகறதுக்கு முன்னாடி உங்ககிட்ட சில அறிவுரைகள் சொல்ல ஆசைப் படறேன்… என்கிட்ட வாங்க…
அப்பா உங்களைப் பாத்தா சந்தோஷமா இருக்கு..
மகன்கள்: நாங்க இங்க தான் இருக்கோம்ப்பா… சீக்கிரமே பாடத்தைக் கத்துக்க தயாரா இருக்கோம்…
அப்பா: என் அன்பான பசங்களா… உங்களுக்கு நான் சில மரக்குச்சிகளைக் கொடுக்கறேன். இதெல்லாம் நீங்க எடுத்துக்கோங்க…
மகன்: அப்பா… இதை ஏன் நீங்க எங்ககிட்ட கொடுக்கறீங்க… இதை வச்சிகிட்டுநாங்க வீணா என்ன பண்ண போறோம்…
அப்பா: உங்கள்ல யாராவது ஒருத்தர்… இங்க இருக்கற இந்த மரக்குச்சிக் கட்டை… உடைச்சிக் காட்டுங்க… பாப்போம்…
மகன் 1: சரிங்கப்பா… இந்த சுலபமான காரியத்தை… உங்களுக்காக நான் செய்யறேன்..
VOICE OVER: பலசாலியான முதல் மகன்… அந்த கட்டை எடுத்தான்… அந்த உறுதியான கட்டை உடைக்க முயற்சி செய்தான்…
மகன் 1: மன்னிச்சிக்கங்கப்பா… நீங்க என்கிட்ட சொன்னதை… என்னால செய்யமுடியலை… என்னோட முழுபலத்தையும் பயன்படுத்திப் பார்த்துட்டேன்… ஆனாலும் என்னால உடைக்க முடியலை… இது ரொம்ப உறுதியா இருக்குப்பா…
மகன் 2: என்னால முடியும்… அந்த கட்டை என்கிட்டகுடு… நான் பலசாலிதான்… அதை உடைச்சிக் காட்டறேன்…
மகன் 3: அதை உடைக்கற அளவுக்கு பலம் என்கிட்ட தான் இருக்கு… எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்க…
VOICE OVER: மூன்று பிள்ளைகளும் வெட்கித் தலை குனிந்து நின்றனர்.. ஏனென்றால் தங்களது தந்தையின் ஒரு எளிதான சிறிய ஆசையை கூட நிறைவேற்ற முடியாததால்…
அப்பா உங்களோட சொந்த பலத்தை வைச்சி… இந்த கட்டை உடைக்க முடியலை… இப்ப அதை தனித் தனியா பிரியுங்க… பிரிச்சதுக்கு அப்புறம்… ஒவ்வொரு குச்சியா எடுத்து வையுங்க… ஆங்… பிரிச்சி வையுங்க…
VOICE OVER: அவர் கூறியது போலவே… மூன்று பிள்ளைகளும் உடனே செய்தனர்… இப்ப அந்த குச்சிங்க எல்லாத்தையும் உடைங்க…
VOICE OVER: மூவரும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்… குச்சியை தனித்தனியாக எடுத்ததும் அது உடைந்து போனது…
மகன்கள் அட சுலபமா இதை உடைச்சிட்டோமே…
அப்பா நல்லா ஞாபகத்துல வச்சிக்கங்க பசங்களா… இது மாதிரி தான் நீங்க எப்பவும் ஒற்றுமையா இருந்தீங்கன்னா… உங்களை யாரும் ஒண்ணும் செய்ய முடியாது… ஆமா… அதனால நீங்க தனித்தனியா பிரிஞ்சி போகாமா, கடைசி காலம் வரைக்கும்… எப்பவும் ஒற்றுமையா… வாழணும்பா…
VOICE OVER: குழந்தைகளே ஒரு செயலை ஒற்றுமையா செஞ்சோம்னா… அது சீக்கிரமா முடிஞ்சிடும்… ஒற்றுமையே பலம்… இப்ப புரிஞ்சிதா…