Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – கோழிகள்
மென்மையான, வேற வழியில்லாதவங்கள நாம குறைச்சி மதிப்பிடக்கூடாது அவங்க நம்மளை விட.. அதிர்ஷ்ட சாலிகளா இருப்பாங்க

கோழிகள்
காட்சி-1
VOICE OVER: குண்டு கோழிகள், ஒல்லி கோழிகள்…
VOICE OVER: முன்னொரு காலத்தில் ஒரு வயல்வெளியில் கோழிகள் நிறைந்திருந்தன… அதில் சில பருத்தும்… சில மெலிந்தும் காணப் பட்டன… எப்பொழுதும் பருத்தக் கோழிகள்… மெலிந்த கோழிகளை பரிகாசம் செய்து வந்தன…
குண்டு கோழி 1: ஹ..ஹ… ஹ… அந்த ஒல்லியான கோழிகளை பாருங்களேன்…
குண்டு கோழி 2: ஹ..ஹ… ஹ… அதுங்ககிட்ட உணவு இல்லை… அதுங்களுக்கு உடம்பு சரியில்லை… ரொம்ப சோர்வா இருக்கு… ஹ..ஹ… ஹ…
குண்டு கோழி 1: என் மாளிகையில நடக்குற விருந்துக்காக நான் போறேன்… நீயும் கட்டாயம் வந்துடணும் என்ன…
குண்டு கோழி 2: சரி… ஆனா இந்த அசிங்கமான மெலிஞ்ச கோழிகளை மட்டும் கூப்பிட்டுடாத.. ஹ..ஹ… ஹ…
குண்டு கோழி 1: நிச்சயமா இல்லை… நான் அவங்களை அழைக்கவே மாட்டேன்… விருந்து நமக்கு மட்டும் தான்… குண்டான ஆரோக்கியமான கோழிகளுக்கு மட்டும் தான்… ஹ..ஹ… ஹ…
ஒல்லி கோழி 1: ஆங்… இன்னைக்கு நீ என்ன செய்யப் போற…
ஒல்லி கோழி 2: ஒண்ணும் இல்ல… இப்போ விருந்து நடந்துகிட்டு இருக்கு… உனக்குத் தெரியாதா… அவங்க நம்மளை கூப்பிடவே இல்ல…
ஒல்லி கோழி 1: நீ ஏன் இப்படி எல்லாம் யோசிக்கற…
ஒல்லி கோழி 2: நம்ம உருவத்தால தான் நம்மளை கூப்பிடல… தெரியுமா… நாம ரொம்ப மெலிஞ்சி இருக்கோமாம்…
ஹ..ஹ… ஹ…
குண்டு கோழி 1: ம்.. எனக்கு இந்த பாட்டு ரொம்ப புடிச்சிருக்கு…
குண்டு கோழி 2: ஆனால் அங்கு இருந்த சமையற்காரர்களின் திட்டமோ வேறாக இருந்தது…
ஹ..ஹ… ஹ…
VOICE OVER: திடீரென சமையற்காரர் வருகிறார்… அந்த இரண்டு கோழிகளை நோக்கி… விரலை நீட்டுகிறார்…
இரு குண்டு கோழிகளு ம்.. இல்ல.. வேண்டாம்.. இல்ல.. விட்டுடுங்க… விட்டுடுங்க…
குண்டு கோழி 1: நாம மட்டும் ஒல்லியா இருந்திருந்தா…
குண்டு கோழி 2: எனக்கும் தான்…
VOICE OVER: மென்மையான, வேற வழியில்லாதவங்கள நாம குறைச்சி மதிப்பிடக்கூடாது… அவங்க நம்மளை விட.. அதிர்ஷ்ட சாலிகளா இருப்பாங்க… குழந்தைகளே, அதனால யாரையும் காயப் படுத்தாதீங்க… நல்லா புரிஞ்சிக்கங்க…