Connect with us

Moral Stories - Tamil

ஈசோப்பின் கட்டுக்கதைகள் – நரியும், ஆடும்

ஒரு செயலை செய்யறதுக்கு முன்னாடி… ஒருமுறைக்கு பலமுறை நல்லா யோசிச்சி செய்யணும்

நரியும், ஆடும்

காட்சி-1

குள்ளநரி, ஆடு, VOICE OVER…

VOICE OVER: அது நல்ல வெயில் காலம்… ஒருநாள் ஒரு குள்ள நரி காட்டிற்குள் சென்று கொண்டிருந்தது…

VOICE OVER: அப்பொழுது அது ஒரு கிணற்றைக் கண்டது… அதனுள் எட்டிப் பார்க்க நினைத்த குள்ள நரி… தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது…

குள்ளநரி: ஆ… அ… அட இந்த கிணறு.. ரொம்ப ஆழமா இருக்கே… நான் எப்படி வெளிய போறதுன்னே தெரியலையே… இவ்வளவு உயரத்துல என்னால எம்பி குதிக்க முடியாது… எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும்… ஆனா… இவ்ளோ தண்ணி தேவையில்ல…

VOICE OVER: அதே சமயம் தாகத்துடன் இருந்த ஆடு ஒன்று அந்த பக்கமாக சென்று கொண்டிருந்தது… கிணற்றுக்குள் இருந்து சத்தம் வருவதை அது கேட்டது…

ஆடு: அட கீழே என்ன செஞ்சிகிட்டு இருக்க குள்ளநரி…

Advertisement

எதையாவது தொலைச்சிட்டியா…

குள்ளநரி: இல்லை… என் அருமை நண்பா… எனக்கு ரொம்ப தாகமா இருந்தது… அதான் இங்க தண்ணி குடிக்கலாம்னு வந்தேன்… இந்த தண்ணியை குடிச்சா ரொம்ப உற்சாகமா இருக்கு… நீயே கீழே வந்து சோதிச்சி தான் பாரேன்…

VOICE OVER: உடனே அந்த ஆடு கிணற்றுக்குள் குதித்தது…

ஆடு: நீ சொன்னது சரிதான்.. இந்த தண்ணி சுவையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்குது.. ஆனா நாம இங்க இருந்து எப்படி வெளியில போறது…

குள்ளநரி: என்ன செய்யறது… கிணத்தோட மேல் பாகம் ரொம்ப உயரமா இருக்கு… நீ மட்டும் நின்ன படி இருந்தா… நான் உன் முதுகு மேல ஏறி… வெளியே போயிடுவேன்… நான் வெளியேறுனதுக்கப்புறம்.. நீ இந்த கிணத்தை விட்டு வெளியே வர்றதுக்கு… நான் மேல இருந்து உனக்கு… எப்படியாவது உதவி பண்ணுவேன்…

VOICE OVER: ஆடு நின்றபடி இருக்க.. குள்ளநரி அதன் மீது ஏறி வெளியே வந்து விட்டது…

பிறகு கீழே குனிந்து ஆட்டைப் பார்த்து…

குள்ளநரி: உதவி செஞ்சதுக்கு மிக்க நன்றி நண்பா… மீண்டும் சந்திக்கலாம்…

Advertisement

ஆடு: ம்.. ஆ… என்னோட அருமை நண்பா… தயவு செஞ்சு சொல்றதை கேளு… நீ என்னை விட்டுட்டு போயிடாத… நான் எப்படி வெளியே வருவேன்…

குள்ளநரி: இதை கிணத்துக்குள்ள இறங்கறதுக்கு முன்னாடி… யோசிச்சி இருந்திருக்கணும்… ஏன்.. உனக்கு அந்த பழமொழி ஞாபகம் இல்லையா… குதிப்பதற்கு முன் ஒருமுறை… நன்றாக யோசி… அதுபடி தான் நானும் நடந்துகிட்டேன்…

VOICE OVER: இப்படிக் கூறிய அந்த குள்ளநரி… ஓடி விட்டது…

VOICE OVER: குழந்தைகளே… இதுல இருந்து நாம என்ன தெரிஞ்சிக்கணும்னா ஒரு செயலை செய்யறதுக்கு முன்னாடி… ஒருமுறைக்கு பலமுறை நல்லா யோசிச்சி செய்யணும்…

Continue Reading
Advertisement