Connect with us

Moral Stories - Tamil

ஈசோப்பின் கட்டுக்கதைகள் – நரியும் பூனையும்

நூற்றுக்கணக்கான வழிகளை விட… ஒரே ஒரு வழிதான் சிறந்தது

ஈசோப்பின் கட்டுக்கதைகள் – நரியும் பூனையும் PR047 07

நரியும் பூனையும்

காட்சி-1

நரி,பூனை, VOICE OVER…

VOICE OVER: ஒரு நாள் நரியும் பூனையும் நடந்து சென்றன… அப்போது நரி தனது புத்திசாலித்தனத்தைப் பற்றி பெருமை பேசிக்கொண்டிருந்தது…

நரி: நான் எந்த சூழ்நிலைக்கும் தயாராதான் இருக்கேன்… என்னுடைய எதிரி என்னை பிடிக்க நினைச்சாலும், உடனே அவன்கிட்ட இருந்து தப்பிக்க நான் நெறைய வழிமுறைகளை வச்சிருக்கேன்… தெரியுமா..

பூனை: மியாவ்… எனக்கு பயமா இருக்கு… என்கிட்ட ஒரு வழிதான் இருக்கு… இப்பவும் அந்த வழிய வச்சிதான் நான் தப்பிச்சி போவேன்…

நரி: ஹ.. ஹ… ஹ… ஒரே ஒரு வழியா… எவ்வளவு முட்டாள் தனம்… ஆனா என்கிட்ட நூற்றுக்கணக்கான வழிகள் இருக்கு தெரியுமா… ஆங்…

நான் என்ன யோசிக்கிறேன்னா.. எப்பவும் தப்பிக்கிறதுக்கு…

Advertisement

பூனை: ம்.. மியாவ்.. ஒரு வழி தெரிஞ்சா தான்… நல்லதுன்னு நினைக்கிறேன்… நிறைய வழிமுறைகளை தெரிஞ்சிவச்சிகிட்டு, அதுல எதை கடைபிடிக்கறதுன்னு, நாம யோசிக்கறதுக்குள்ள… ஒருவேளை ஆபத்துல மாட்டிக்கிட்டோம்னா..

நரி: உளராத… நீ ஒண்ணை நல்லா புரிஞ்சிக்கணும்… என் அளவுக்கு நீ ஒண்ணும் சாமர்த்தியசாலி இல்ல…

VOICE OVER: அதன்பிறகு வழியில் எதிர்பட்ட நாய்கள்… அதனைப் பார்த்து குறைக்க ஆரம்பித்தன… அப்போது அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி… உச்சாணிக் கிளையில் ஒளிந்து கொண்ட பூனை சொன்னது…

பூனை: மியாவ்… இது தான் எனக்கு தெரிஞ்ச வழி… உனக்கு தெரிஞ்ச வழி முறையில.. எதையாவது தேர்ந்தெடு… இல்லைன்னா நீ கொல்லப் படுவ…

நரி: சரி… சரி நீ அமைதியா இரு..

ம்…ம்.. இங்க இருந்து ஓடிப் போயி பக்கத்துல இருக்குற புதர்ல மறைஞ்சிக்கலாமா… இல்ல பள்ளத்துல மறைஞ்சிக்கலாமா…

ம்… நான் என்ன பண்றது…

பூனை: அடக்கடவுளே எல்லாம் ஒட்டு மொத்தமா வருதே…ம்.. இப்ப நான் என்ன செய்வேன்…

Advertisement

மியாவ்…மியாவ்…

நரி: ம்.. ம்… பள்ளத்துல ஒளிஞ்சுக்கணும்னா இந்த பக்கம் தான் போகணும்…

VOICE OVER: சமவெளியில் ஓடிய நரி… பள்ளத்தை தேட ஆரம்பித்தது… பூனைம் … அட.. இல்ல..இல்ல.. இது ரொம்ப சின்னதா இருக்கு… என்னால ஆழமான குழியில இறங்க முடியாது..

நரி: ம்… அட இந்த குழி ரொம்ப ரொம்ப பெருசா இருக்கே… இந்த குழியில நாம இறங்குனா நாய்களும் பின்னாலயே இறங்கிடும்.. நாம அந்த பக்கம் போய் பாக்கலாம்…

பூனை: மியாவ்…மியாவ்…

VOICE OVER: ஆனால் அதற்குள் அதிக நேரம் ஆகிவிட்டது… நரி நேரத்தை வீணாக்க ஆரம்பித்தது.. அதிக யோசனைக்கு உட்பட்டதால்… அதனால் சரியாக தேர்ந்தெடுக்க முடியவில்லை…

பூனை: மியாவ்…

பூனை: நாய்கள் அதனை பிடித்துக் கொன்றன…

Advertisement

VOICE OVER: அப்பொழுது வருத்தம் கொண்ட பூனை… கீழே பார்த்து சொன்னது…

பூனை: நூற்றுக்கணக்கான வழிகள்ல ஒண்ணை தேர்ந்தெடுக்கறதை விட… ஒரே ஒரு பாதுகாப்பான வழிதான்… ரொம்ப சிறந்தது…

VOICE OVER: குழந்தைகளே… இதுல இருந்து என்ன தெரிஞ்சிகிட்டீங்க… நூற்றுக்கணக்கான வழிகளை விட… ஒரே ஒரு வழிதான் சிறந்தது…

Continue Reading
Advertisement