Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – எறும்பும், புறாவும்
ஒரு நல்ல செயல் மற்றொரு நல்ல செயலுக்கு வழி வகுக்கிறது… நாம நல்லதையே நினைச்சி… நல்லதையே செய்வோம்

எறும்பும், புறாவும்
காட்சி-1
எறும்பு, புறா, VOICE OVER…
VOICE OVER: வெயில் காலத்தில் ஒருநாள்… ஒர் எறும்பு குளிர்ந்த சுவையான நதிநீரைக் குடித்து… தன் தாகத்தை தனித்துக் கொள்ள நதிக்கரைக்கு சென்றது…
எறும்பு: ஆ… எனக்கு ரொம்ப தாகமா இருக்கு… தண்ணி குடிக்கறதுக்காக நான் அங்க போயே ஆகணும்… ஆனால் பாதி வழியில் சென்று கொண்டிருந்த எறும்பு… தடுமாறி ஓடிக் கொண்டிருந்த நதியில் விழுந்து விட்டது…
எறும்பு: ஆ… ஆ… காப்பாத்துங்க… காப்பாத்துங்க…
காப்பாத்துங்க… காப்பாத்துங்க…
எறும்பு: காப்பாத்துங்க… காப்பாத்துங்க…
நான் மூழ்கிகிட்டே இருக்கேன்… நதியோட நீரோட்டத்தை என்னால சமாளிக்க முடியலை…
எறும்பு: காப்பாத்துங்க… யாராவது வந்து காப்பாத்துங்க…
VOICE OVER: எறும்பு ஆபத்தில் சிக்கி இருப்பதை ஒரு புறா பார்த்தது…
புறா: ஓ.. கடவுளே… எறும்பு ஆபத்துல மாட்டியிருக்கு…
எறும்பு: காப்பாத்துங்க… காப்பாத்துங்க…காப்பாத்துங்க…
VOICE OVER: வேகமாக யோசித்த புறா… எரும்பின் அருகில் நதியில் சில இலைகளை போட்டது..
எறும்பு: காப்பாத்துங்க… காப்பாத்துங்க… காப்பாத்துங்க…
புறா: இலைங்க மேல ஏறிக்கோ எறும்பே…
புறா: அப்படிதான் எறும்பே… பாதுகாப்பா உட்கார்ந்துக்கோ…
VOICE OVER: இலையின் மீது ஜாக்கிரதையாக ஏறிய எறும்பு பத்திரமாக நதிக்கரையை வந்தடைந்தது..
VOICE OVER: இதற்கிடையில் ஒரு வேட்டைக்காரன்… அங்கு வந்தான்… அங்கிருந்த புறாவை பார்த்து விட்டான்…
வேட்டைக்காரன் மிகத் துள்ளியமான குறி… ரொம்ப அழகான புறாவா இருக்கே… நான் இங்க இருக்கறதை அந்த புறா கவனிக்கவே இல்லை…
அதனால அந்த புறாவை சீக்கிரமே என் வலையில சிக்க வைச்சிடுவேன்…
VOICE OVER: அப்பொழுது நதிக்கரையை வந்தடைந்த எறும்பு… புறாவைப் பிடிப்பதற்காக மரத்தின் பின்னே ஒளிந்திருந்த வேட்டைக் காரனை பார்த்து விட்டது…
எறும்பு: ஓ என்னுடைய உயிர்தோழன் புறா ஆபத்துல சிக்கி இருக்கான்… அவனை நான் காப்பாத்தியே ஆகணும்… ஆ… ஆ…
ஆ… என்னால வலி தாங்கமுடியலை… ஆ…
VOICE OVER: வேட்டைக்காரனுடைய சத்தத்தைக் கேட்ட புறா… உடனே மரத்தின் மெலிருந்த பாதுகாப்பான கிளைக்கு பறந்து சென்றது…
புறா: ரொம்ப நன்றி நண்பா… நீ மட்டும் சரியான நேரத்துல வரலைன்னா… நான் இறந்தே போயிருப்பேன்… ரொம்ப நன்றி… உனக்கு ரொம்ப ரொம்ப நன்றி நண்பா…
எறும்பு: ஹ.. ஹ… உனக்கும் என்னுடைய நன்றி நண்பா… நீ என்னோட உயிரைக் காப்பாத்துன… நான் என்னால முடிஞ்ச உதவியை செஞ்சி உன்னோட உயிரை காப்பாத்துனேன்…
VOICE OVER: நன்மை செய்தால் நன்மை விளையும்… குழந்தைகளே… ஒரு நல்ல செயல் மற்றொரு நல்ல செயலுக்கு வழி வகுக்கிறது… நாம நல்லதையே நினைச்சி… நல்லதையே செய்வோம்…