Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – இரு பசி கொண்ட நாய்கள்
எந்த வேலையை செஞ்சாலும்… அதை நம்மளால செய்ய முடியுமா… இல்ல பாதுகாப்பானதான்னு யோசிச்சி தான் செய்யணும்

இரு பசி கொண்ட நாய்கள்
காட்சி-1
VOICE OVER, நாய்-1,நாய்-2
நாய்-1: உனக்கு அந்த சத்தம் கேட்குதா.
நாய்-2: ம்… எனக்கு எந்த சத்தமும் கேக்கலை…
நாய்-1: ஏய்… இந்த சத்தம் எப்படி வருகிறது…
நாய்-2: ம்.. எந்த சத்தம்…
நாய்-1: டேய்… நன்றாக கேள்…
எதுவும் கேட்கவில்லை என்று மட்டும் என்னிடம் சொல்லாதே…
நாய்-2: ம்.. அதுவா… எனக்கும் கேட்குது… என்னோட வயித்துல இருந்து தான் அது வருது… எனக்கு பசிக்குது.. மேற்கொண்டு எதுவும் கேட்காத…
நாய்-1: ஏய்… நீ செஞ்ச வேலையை பாரு…
நாய்-2: நானே எடுத்துட்டு வர்றேன்…
நாய்-2: இங்க பாரு இங்க ஒரு எலும்பு இருக்கு…
நாய்-1: என்ன… நிஜமாவா சொல்ற… தண்ணியில விழுந்த பந்து எப்படி எலும்பா மாறிடுச்சின்னு சொல்ற…
நாய்-2: உண்மையை தான் சொல்றேன்…
இது எலும்பே தான்…
நாய்-1: ஆம்.. இது நெஜம் தான்… தண்ணியில விழுந்த பந்து எலும்பா மாறுன உடனே எனக்கு சாப்பிடணும் போல தோணுது…
நாய்-2: வா… அதை வெளியே எடுப்போம்… எனக்கும் ரொம்ப பசிக்குது…
நாய்-1: எப்படி… எப்படி இதை வெளியே எடுக்க முடியும்…
நாய்-2: என்ன கொஞ்சம் யோசிக்க விடு…
நாய்-2: ம்.. தெரிஞ்சிடுச்சி… இந்த குளத்துல உள்ள தண்ணி எல்லாத்தையும்… நானே குடிச்சிடறேன்… அதுக்கப்புறம் இந்த எலும்பு எனக்கு தான் சொந்தம்…
அதாவது நமக்கு கிடைச்சிடும்…
நாய்-1: அதே தான் நானும் சொல்றேன்…
நாய்-2: ஆங்… இதுக்கு மேல என்னால கொஞ்சம் கூட குடிக்க முடியாது…
நாய்-1: நிறுத்தாத குடிச்சிகிட்டே இரு…
நாய்-2: இன்னும்… இன்னும் எவ்ளோ தான் குடிக்கறது…
நாய்-1: இன்னும் நிறைய குடி…
நாய்-2: இப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல…
என்ன மன்னிச்சிடு… இது ரொம்ப ஈசியான விஷயம்னு நினைச்சேன்… ஆனா பாதுகாப்பானதா இல்ல…
VOICE OVER: இங்க பாருங்க குழந்தைகளே… எந்த வேலையை செஞ்சாலும்… அதை நம்மளால செய்ய முடியுமா… இல்ல பாதுகாப்பானதான்னு யோசிச்சி தான் செய்யணும்…