Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – எறும்பும், வெட்டுக்கிளியும்
வேலை செய்யவேண்டிய நேரத்துல வேலை செய்யணும்… விளையாட வேண்டிய நேரத்துல விளையாடணும்

எறும்பும், வெட்டுக்கிளியும்
காட்சி-1
VOICE OVER: முன்னொரு காலத்தில் நடந்த நிகழ்ச்சி இது.. அது ஒரு நல்ல வெயில் காலம்… ஒரு நாள் சந்தோஷமான வெட்டுக்கிளி ஒன்று… ஆடிப் பாடி, விளையாடிக்கொண்டு திரிந்து கொண்டிருந்தது…
வெட்டுக்கிளி என்ன அற்புதமான நாள்… லா..லா..லா.. லா.. எனக்கு பாடவேண்டும் போல இருக்கிறது…
VOICE OVER: ஹ..ஹ..ஹ.. வெட்டுக்கிளி பாடிக்கொண்டே இருக்கும் போது… ஓர் எறும்பு அதனைக் கடந்து சென்றது..
எறும்பு: நீ விளையாடிகிட்டே இருக்கியே… உனக்கு சலிப்பா இல்லையா…
வெட்டுக்கிளி: யாருக்கு… எனக்கா… ஓ… ஏற்பட்டதே இல்லை…
எறும்பு: சரி… நீ எப்பவாவது வேலை செய்வியா…
வெட்டுக்கிளி: யாரு நானா… இல்லவே இல்லை…
நீயும் என்னுடன் விளையாட வருகிறாயா…
எறும்பு: ம்… இல்ல இல்ல.. எனக்கு வேலை இருக்கு…
வெட்டுக்கிளி: வா… நாம் இருவரும் சேர்ந்து பாடலாம்…
எறும்பு: இல்லை என்னால முடியாது…
ஏன்னா… எனக்கு நிறையா வேலை இருக்கு…
வெட்டுக்கிளி: ம்.. வேலை.. வேலை.. வேலை…
நீ எப்பொழுதும் அதைத் தானே செய்து கொண்டு இருக்கிறாய்…என்னுடன் சேர்ந்து விளையாடுவதற்கும், பாடுவதற்கும் கூடவா உனக்கு நேரம் இல்லாமல் போய் விட்டது…
எறும்பு: இல்ல… ம்… நேரம் இல்ல…நீ ஏன் இவ்வளவு அவசரப் படுகிறாய்…
நான் என்னுடைய வீட்டுக்கு.. சோளத்தையும், சோளக்கதிரையும் எடுத்திட்டு போகணும்..
வெட்டுக்கிளி: எதுக்காக…
எறும்பு: குளிர் காலம் வர்றதுக்கு முன்னால… நான் உணவு சேமிக்கணும்… வெட்டுக்கிளி இந்த வெய்யில் காலம் முடியறதுக்கு முன்னாடியே… குளிர்காலத்தைப் பத்தி யோசிக்க உன்னால எப்படி முடியுது…
எறும்பு: ஏன்னா ரொம்ப சீக்கிரத்துல குளிர்காலம் வரப்போகுது… அப்போ உணவு தேடறது… ரொம்ப சிரமமான காரியமா இருக்கும்…
இங்க பாரு நீயும்… இதே மாதிரி செய்யலாமே…
வெட்டுக்கிளி: இப்பவே குளிர்காலத்தைப் பத்தி நான் கொஞ்சக்கூட கவலைப் படபோறதில்ல… நீ வேணும்னா உன் வேலையைப் போய் பாரு… வேலை… வேலை… வேலை… எனக்கு தெரிஞ்சதெல்லாம், விளையாட்டு, பாட்டு, கூடவே டான்ஸு…
எறும்பு: நான் சொல்றதைக் கேளு… இல்லைன்னா சீக்கிரத்திலேயே சாப்பிடறதுக்கு உங்கிட்ட ஒண்ணுமே இருக்காது…
வெட்டுக்கிளி: இப்பவே எங்கிட்ட நிறைய சாப்பிடறதுக்கு வைச்சிருக்கேன்…
எறும்பு: அப்போ நாளைக்கு சாப்பிட தேவைக்கு நீ என்ன செய்வே..
வெட்டுக்கிளி: நாளைக்கு நடக்கறதப் பத்தி நான் கொஞ்சங்கூட கவலைப்பட மாட்டேன்…
எறும்பு: ஆனா எனக்கு இருக்கு… சரி நான்.. வர்றேன்…
VOICE OVER: இதனைக் கேட்ட எறும்பு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது…
வெட்டுக்கிளி: லா..லா.. லா.. லா… லா..லா.. லா.. லா…
VOICE OVER: எப்போதும் போல் எறும்பு தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தது…
விரைவிலேயே குளிர்காலமும் ஆரம்பித்தது… வயல்களில் இருந்த தானியங்களின் மீது… பனி பெரும் அளவில் படர்ந்தது..
வெட்டுக்கிளி: நான் அந்த எறும்பு சொன்னதை கண்டிப்பா கேட்டு இருக்கணும்… இந்த கடுங்குளிர்ல என்னால வெளையாடவும் முடியாது… பாட்டு கூட பாட முடியாது… எங்கிட்ட சாப்பிடறதுக்கு இப்போதைக்கு எதுவுமே இல்லை… அந்த எறும்பு எனக்கு கண்டிப்பா உதவி செய்யும்…
VOICE OVER: வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்கு சென்றது…
வெட்டுக்கிளி: தயவு செய்து எனக்கு சாப்பிடறதுக்கு எதாச்சும் குடு…
ம்… ரொம்ப குளிரா இருக்கு… எனக்கு ரொம்ப பசிக்குது…
எறும்பு: நான் ஏன் உனக்கு உதவிசெய்யணும்.. வெயில் காலத்துல உணவை சேமிச்சு வைக்காம நீ என்ன செஞ்சிகிட்டு இருந்த…
வெட்டுக்கிளி: நான் ரொம்ப விளையாட்டுத்தனமா இருந்துட்டேன்… ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இருந்துட்டேன்…
எறும்பு: வெயில் காலம் முழுக்க நான் கஷ்டப் பட்டு உழைச்சேன்… நீ என்னை கிண்டல் செஞ்சு ஆடி பாடிகிட்டு இருந்த…
அப்பவே நீ குளிர் காலத்தைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சிருக்கணும்…நீ வேற யார்கிட்டயாவது போய் உதவி கேட்டுக்கோ… என்னால உனக்கு உதவ முடியாது… ம்..
எறும்பு: இங்க பாரு… என்னால எதுவும் செய்ய முடியாது… இங்க உனக்கு எந்தவிதமான வெப்பமும், சாப்பாடும் கிடைக்காது… இங்க இருந்து போ…
VOICE OVER: இப்படி கூறிய எறும்பு, வெட்டுக்கிளியை துரத்தி விட்டு அதன் கதவை இழுத்து மூடிக்கொண்டது…
இங்க பாருங்க… அன்பான குழந்தைகளே.. வேலை செய்யவேண்டிய நேரத்துல வேலை செய்யணும்… விளையாட வேண்டிய நேரத்துல விளையாடணும்…