Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – நேர்மையான மரம்வெட்டி
நேர்மை தான் அனைத்திலும் உயர்ந்தது

நேர்மையான மரம்வெட்டி
காட்சி-1
VOICE OVER: ஒரு அழகான ஊரில், ஒரு மரம்வெட்டி வாழ்ந்து வந்தான்… அவன் மிகவும் ஏழை.. ஆனாலும் மிகவும் நேர்மையானவன்… அவன் தினமும், மரம் வெட்டுவதற்காக காட்டிற்கு சென்றான்
VOICE OVER: ஒருநாள் அவன் ஒரு மரத்தின் கிளையை வெட்டுவதற்காக.. அம்மரத்தின் மீது ஏறினான்… அந்த மரம் ஒரு நதிக்கரையில் அமைந்திருந்தது… மற்றும் அதன் கிளை நதிக்கு மேற்புறமாக வளர்ந்திருந்தது…
VOICE OVER: அதை வெட்டும் போது திடீரென்று அவனது கோடாரி நதிக்குள் விழுந்துவிட்டது…
மரம்வெட்டி: அடக் கடவுளே…
கோடாரி நதிக்குள் விழுந்து விட்டதே… இந்த நதி மிகவும் ஆழம்… என் கோடாரி கிடைக்கப் போவதில்லை… நா ன் என்ன செய்வேன்…
மரம்வெட்டி: எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லையே…
எனது குடும்பத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறேன் என்றே தெரியவில்லையே… ம்…ம்…
VOICE OVER: மரம்வெட்டி என்ன செய்வதென தெரியாமல், நதியையே பார்த்துக் கொண்டிருந்தான்…
திடீரென்று அந்த நதிக்குள்ளிருந்து ஒரு தேவதை வெளியே வந்தாள்…
மரம்வெட்டி: நீங்க யாரு…
தேவதை: நான் இந்த நதியின் தேவதை… உன்னுடைய புலம்பலைக் கேட்டு… வெளியே வந்தேன்… உனக்கு என்ன ஆயிற்று…
மரம்வெட்டி நான் ஒரு மரவெட்டி… எனது கோடாரி இந்த நதிக்குள் விழுந்துவிட்டது…
தேவதை: கவலைப்படாதே… நான் கொண்டுவந்து தருகிறேன்…
VOICE OVER: அந்த தேவதை நதிக்குள் சென்று… ஒரு வெள்ளிக் கோடாரியுடன் வெளியே வந்தாள்… தேவதை: இது தான் உன்னுடைய கோடாரியா…
VOICE OVER: மரவெட்டி யோசிக்க ஆரம்பித்தான்… இந்த வெள்ளியிலான கோடாரியை விற்றால்… தன் குடும்பத்திற்கு நிறைய செலவளிக்கலாம் என்று எண்ணினான்… ஆனால் அது அவனுடைய கோடாரி அல்ல…
மரம்வெட்டி: இல்ல என்னுடைய கோடாரிக்கு மரக்கைப்பிடி இருக்கும்…
தேவதை: அப்படியா… நான் சென்று அதைக் கொண்டுவருகிறேன்…
VOICE OVER: தேவதை நதிக்குள் சென்று… மற்றொரு கோடாரியைக் கொண்டுவந்தாள்…
தேவதை: இது உன் கோடாரியா என்று பார்…
மரம்வெட்டி: இல்ல.. இது தங்கக் கோடாரி… என்னுடைய கோடாரியை விட… அதிக விலை உயர்ந்தது…
தேவதை: சரி நான் மீண்டும் ஒரு முறை நதிக்குள் செல்கிறேன்…
VOICE OVER: இந்த முறை நதிக்குள் சென்ற தேவதை… மரம் வெட்டியினுடைய உண்மையான கோடாரியைக் கொண்டுவந்தாள்..
மரம்வெட்டி ஆஹா… இது தான் என் கோடாரி… எந்த சந்தேகமும் இல்லை… இது தான் என் கோடாரி… இது தான் என் கோடாரி… ஆஹா… ஹ.. ஹ.. ஹ..
தேவதை: இது உன்னுடைய கோடாரி தான்… ஆனால் நீ மற்ற இரண்டு கோடாரிகளையும் எடுத்துக் கொள்ளலாம்..
இவை நதியின் சார்பாக உனக்கு அளிக்கப் படும் பரிசு… ஏனென்றால் நீ மிகவும் நேர்மையானவன்…
மரம்வெட்டி: ஆஹா.. மிக்க நன்றி… உங்களுடைய உதவியை நான் மறக்கவே மாட்டேன்…
VOICE OVER: அன்று இரவு மரம்வெட்டி தன்னுடைய மூன்று கோடாரிகளையும் வீட்டுக்கு எடுத்துச் சென்றான்…
மரம்வெட்டி: எனக்கு ரொம்ப சந்தோஷம்… என்னுடைய குடும்பத்துக்கு தேவையான எல்லா தேவைகளையும் நான் பூர்த்தி செய்வேன்…
VOICE OVER: அன்பான குழந்தைகளே… இந்த கதையிலிருந்து நீங்க என்ன தெரிஞ்சிகிட்டீங்க… நேர்மை தான் அனைத்திலும் உயர்ந்தது…