Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – நரியும் திராட்சைப்பழங்களும்
சிலர் தனக்கு கிடைக்காதவற்றை… தவிர்க்க நினைத்தாலும் முடிவதில்லை… சிலருக்கு விரும்பியது… கிடைக்காத போது… மனம் மறுத்தாலும், கண்கள் கண்டு கொண்டு தான் இருக்கின்றன

நரியும் திராட்சைப்பழங்களும்
காட்சி-1
VOICE OVER,நரி
VOICE OVER: முன்னொரு காலத்தில் ஒரு அகம்பாவம் பிடித்த குள்ளநரி ஒன்று வாழ்ந்து வந்தது… ஒருநாள் அது பக்கத்து கிராமத்திலிருந்து… தன் சொந்தக்காரரை பார்க்கப் புறப்பட்டது…
நரி: இன்னைக்கு நாள் நல்லா இருக்கு…
VOICE OVER: குள்ளநரி சென்று கொண்டே இருந்தது… சிறிது நேரத்திற்கு பிறகு அது மிகவும் களைப்புற்றது.. அதற்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது…
நரி: ஓ… நல்ல வெயிலு… நான் ரொம்ப களைப்படைஞ்சிட்டேன்… குடிக்கறதுக்கு தண்ணி கிடைச்சா நல்லா இருக்கும்…
VOICE OVER: நடந்து கொண்டே இருந்தது… தாகம் அதிகமானதே தவிரகுறையவில்லை…எனக்கு தாகத்தோட பசியும் எடுக்குது… எங்கிட்ட சாப்பிட எதுவுமே இல்லையே…
நரி: ஆங்… இந்த இடத்துலயும் சாப்பிட எதுவும் கிடைக்கல.. நான் இன்னும் ரொம்பதூரம் நடந்து போகணும் போல இருக்கு…
நரி: ஓ… நான் பேசாம வீட்டுலயே இருந்திருக்கலாம்…
VOICE OVER: அப்பொழுது அது மேலே பார்த்தது… அங்கு நன்கு பழுத்த திராட்சை தோட்டத்தை அது கண்டது…
நரி: ம்… இந்த பழுத்த திராட்சையில இரசம் நிறையா இருக்கும்னு நினைக்கறேன்… ரொம்ப சுவையா இருக்கும்னு எதிர்பார்க்கறேன்…
நரி: ஆஹா… அந்த கொத்து தான்.. ரொம்ப அழகா நிறையா திராட்சைங்களோட இருக்குது…
நரி: ம்… எனக்கு சாப்பிட கொஞ்சம் திராட்சைங்க கெடைச்சா நல்லது… இதை சாப்பிட்டா பசி அடங்கும்…
VOICE OVER: குள்ளநரி திராட்சை கொத்தை பிடிக்க முயற்சி செய்தது.… அது உயர எழும்பி குதித்தது… ஆனால் அதற்கு எட்ட வில்லை… அடுத்தமுறை தன்னால் முடிந்த மட்டும்…அது உயர எழும்பி குதித்தது…
VOICE OVER: ம்.. மறுபடியும் தோல்வி அடைந்தது… திராட்சை கொத்து மிக உயரத்தில்… அதனால் தொடக்கூட முடியாத உயரத்தில் இருந்தது…
நரி: ம்… நான் யோசிக்கறேன்… ம்… இல்ல இல்ல.. இல்ல.. நான் யோசிக்கறேன்.. இந்த திராட்சைங்க பழுக்கவே இல்லன்னு… எனக்கு தெரியும்…
VOICE OVER: ஆனாலும் திராட்சை கொத்தையே பார்த்துக் கொண்டிருந்தது…
நரி: ஒருவேளை நான் கனவு காணுறேனா…
இது நிஜம் இல்ல…ம்… நான்.. நான் இந்த திராட்சைங்களை பார்க்கவே மாட்டேன்… அது கசக்கும்… பார்க்க பழுத்து ரசம் இருக்கற மாதிரி தெரிஞ்சாலும்… இதெல்லாம் கசப்பானது.. தான்…
VOICE OVER: குள்ள நரி அந்த இடத்தை விட்டு செல்ல நினைத்தது… ஆனாலும் அதன் பார்வை மட்டும் திராட்சையை விட்டு விலக வில்லை…
நரி: ம்.. ம்.. இந்த திராட்சை… ரொம்ப கசக்கும்… ஆங்… உண்மையிலயே ரொம்ப கசக்கும்… அந்த பழம் இனிக்காது… நிச்சயமா அந்த பழம் இனிக்கவே இனிக்காது…
நரி: அட… இது மேல நாம ஏன் ஆசைப்படணும்… இதை நாம சாப்பிடவே கூடாது… ம்…
நரி: ஹ… ஹ… குள்ளநரி சென்றுவிட்டது… தான் கூறியது பொய் என்றாலும்… அதனால் வேறு என்ன செய்து விட முடியும்… இது போல் கூறி தான் அதனால் சமாளிக்க முடியும்..
VOICE OVER: அன்பான குழந்தைகளே… இந்த கதையில இருந்து நீங்க என்ன தெரிஞ்சிக்கிட்டீங்க… சிலர் தனக்கு கிடைக்காதவற்றை… தவிர்க்க நினைத்தாலும் முடிவதில்லை… சிலருக்கு விரும்பியது… கிடைக்காத போது… மனம் மறுத்தாலும், கண்கள் கண்டு கொண்டு தான் இருக்கின்றன…