Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – ஓக் மரமும், நாணலும்
கர்வத்தை விட பணிவே உயர்ந்தது

ஓக் மரமும், நாணலும்
காட்சி-1
VOICE OVER,ஓக் மரம், நாணல் 1,2,3
VOICE OVER: இலையுதிர்காலத்தில் ஒரு நாள்… பெரும்புயல் வீசியது… இடி இடித்தது.. புயல் என வீசிய காற்று… காட்டையும், அங்கிருந்த நீர் வீழ்ச்சியையும் மிகவும் பயமுறுத்தியது…
ஓக் மரம்: நான் தான் இந்த காட்டின் ராஜா… இங்கே இருப்பவர்களை விட நான் தான் மிகவும் உயரமானவன்… அத்துடன் வலிமையானவனும் கூட… இந்த பெரும் காற்று, புயல் எல்லாவற்றையும் என்னால் எதிர்த்து நிற்க முடியும்… காரணம் நான் பெரியவன்…
நாணலகள்: நாங்க மென்மையானவங்க… சக்தி இல்லாதவங்க… நாங்க இந்த புயலை எதிர்த்து சண்டை எல்லாம் போட மாட்டோம்… தலை குனிஞ்சி அதற்கேத்த மாதிரி அசைஞ்சி கொடுப்போம்…
VOICE OVER: புயல் வலுத்துக் கொண்டே போனது.. பயங்கரமான காற்று மேலும் அதிக வேகத்தோடு வீசியது ஒரு சுழற்காற்றைப் போல…
ஓக் மரம்: நான் எல்லாவற்றையும் விட மிகப்பெரிய பலசாலி… நான் தலை குனிய மாட்டேன்… இந்த பயங்கரமான காற்றை என்னால் எதிர் கொள்ள முடியும்…
VOICE OVER: அப்பொழுது திடீரென பெரும் சத்தத்துடன் உடைந்த அந்த மரம்… காற்றோடு அசைந்து கொண்டிருந்த புற்களின் அருகில் இருந்த நீர்வீழ்ச்சியில் விழுந்தது…
ஓக் மரம்: ஆ…. ஆ…
நாணல்- 1: ஓ.. அடக்கடவுளே… காட்டு ராஜா இப்படி ஒரு கொம்பு போல விழுந்து கிடக்கிறாரே… இந்த பயங்கரமான புயலோட பலம் அவரை வீழ்த்திடுச்சி…
ஓக் மரம்: இப்பொழுது நான் விழுந்து உடைந்து விட்டேன்… எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது… என்ன… என்ன செய்வது… ஒன்றும் எனக்கு புரியவில்லை…
நாணல்- 1: நீ ரொம்பவும் கர்வம் புடிச்சவன் தெரியுமா…
நாணல்- 2: பலமா வீசுன காத்தோட நீ ஏன் சண்டை போட்ட… இப்ப பாரு நீ எங்க காலடியில விழுந்து கிடக்குற…
நாணல்- 3: எங்களுக்குத் தெரியும்… இவ்வளவு பலம் வாய்ந்த காத்தை எங்களால நிச்சயமா எதுத்து நிக்கவே முடியாது..
நாணல்- 1: அதனால தான் நாங்க அடிக்கற சின்ன காத்துக்கு கூட பணிவோட தலையை குனிஞ்சிக்கறோம்… அதனால தான் நாங்க எப்பவுமே தலை நிமிர்ந்து நிக்கறோம்…
VOICE OVER: உடைவதை விட தலை குனிவதே சிறந்தது… இப்ப புரிஞ்சதா குழந்தைகளே…
VOICE OVER: கர்வத்தை விட பணிவே உயர்ந்தது… உங்களுக்கு புரிஞ்சதில்ல… ஆங்…