Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – தாகம் உள்ள காகம்
நமக்கு தேவை தேடுதலைத் தூண்டுகிறது

தாகம் உள்ள காகம்
காட்சி-01
VOICE OVER: ஒரு நாள் கடுமையாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது.… அப்பொழுது ஒரு காகம் மிகுந்த தாகத்தோடு இருந்தது… தண்ணீருக்காக அது இங்கும் அங்கும் தேடித்தேடி அலைந்தது… ஆனால் பாவம்.. அதற்கு எங்குமே தண்ணீர் கிடைக்க வில்லை…
காகம்: அட… என்ன இவ்வளவு சூடாக இருக்கிறது… மிகவும் தாகமாக வேறு இருக்கிறது… என்னால் கத்தக் கூட முடியவில்லை… நாக்கு வறண்டு விட்டது… கா.. கா..
கா…
காகம்: அங்கே என்ன இருக்கிறது… கிடைத்து விட்டது… எனக்கு தண்ணீர் கிடைத்து விட்டது… சந்தோஷமாக இருக்கிறது…
VOICE OVER: அது மிகவும் மகிழ்ச்சியுடன் சென்று பானைக்குள் எட்டிப் பார்த்தது..
மிகுந்த சந்தோஷம் அடைந்தது.. ஏனென்றால் அதில் சிறிதளவு தண்ணீர் இருந்தது… அது தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்தது..
VOICE OVER: ஆனால் தண்ணீர் சிறிதளவே இருந்ததால்.. பானையின் அடிப்பாகம் வரை அதனால் எட்டி குடிக்க முடியவில்லை… மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது..
ஆனால் பாவம்… அதற்கு தண்ணீர் எட்டவே இல்லை…
காகம்: கா.. கா.. இதென்ன… என் அலகு பானையின் அடி வரை எட்டமாட்டேங்குதே.. இந்த பானை எனக்கு மிகவும் தொல்லைக் கொடுக்கிறது… அடச்சே… இந்த பானையை யார் இப்படிச் செய்தது.. நான் தாகத்தால் செத்தே போய்விடுவேன் போலிருக்கிறதே…
VOICE OVER அந்த பானையை காகம் உருட்டிவிட முயற்சி செய்தது… அப்படி செய்தால் பானை உருண்டு உள்ளே இருக்கும் தண்ணீர் கீழே விழும்…
ஆனால் அப்படி செய்வதற்கு காகத்திற்கு போதிய சக்தி இல்லை…
VOICE OVER: இருப்பினும் சிறிதுநேரம் தன் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருந்தது…
காகம்: ஆ.. என்ன செய்வது… ஆஹா.. எனக்கு ஒரு நல்ல யோசனை கிடைத்து விட்டது…
VOICE OVER: காகம் அந்த பானைக்குள் கற்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டது…
காகம்: ஒன்று…
இரண்டு…
மூன்று…
நான்கு…
VOICE OVER: மேலும் அதிகமான கற்களை.. போட்டு அந்த பானையை நிரப்பியது…
சிறிது சிறிதாக தண்ணீர் மேலே வரத் தொடங்கியது…
காகம்: நூற்றி அறுபத்தி எட்டு…
காகம்: ஆஹா… தண்ணீர் வந்து விட்டது…
எனக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடித்துக் கொள்வேன்…
VOICE OVER: மேலே வந்த தண்ணீரை காகம் குடித்து… தாகத்தைப் போக்கியது…
காகம் ஆஹா இந்த தண்ணீர் சுவையாக உள்ளது…
காகம் இனி நான் கா.. கா.. என்று நன்றாக கத்துவேன்…
கா… கா… கா… கா…
VOICE OVER: குழந்தைகளே.. இந்த கதையில இருந்து.. நாம என்ன தெரிஞ்சிகிட்டோம்… நமக்கு தேவை தேடுதலைத் தூண்டுகிறது..