Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – வால் அறுந்த நரி
சுயலாபத்துக்காக யார் என்ன பேசுனாலும் அதை நம்பக் கூடாது

வால் அறுந்த நரி
காட்சி-1
VOICE OVER… நரி & நரி-2
VOICE OVER: ஒருநாள் நரி ஒன்று வெளியில் சுற்றி கொண்டு இருந்தது… திடீரென மிகப்பெரிய சத்தத்தைக் கேட்ட நரி… தன்னுடைய பின் பக்கத்தில் வலியை உணர்ந்தது…
நரி: ஆ… ஆ… அடக்கடவுளே… எனக்கு வலிக்குதே… ஆ… ஆ…
VOICE OVER: நரி தன்பின்னே திரும்பிப் பார்த்தது… அதனுடைய வால் ஒரு சுருக்கில் மாட்டிக் கொண்டு இருந்தது… அது தன்னால் முடிந்தவரை முயற்சி செய்து பார்த்தது.. ஆனால் சுருக்கில் அதன் வால் நன்றாக சிக்கி இருந்தது…
VOICE OVER: மீண்டும் மீண்டும் நரி முயற்சி செய்தது… இம்முறை தன் பலத்தை ஒன்று திரட்டி.. வேகமாக இழுத்தது…
நரி: ஆஹா… அவ்வளவுதான்…
ஹ..ஹ.. ஹ… அடக்கடவுளே.. நான் தப்பிச்சிட்டேன்…
VOICE OVER: அப்போது நரி… திரும்பிப் பார்த்தது… அதன் வால் இன்னும் அந்த சுருக்கில் மாட்டி இருந்தது… நரியின் பின்னால் சிறிதளவு மட்டுமே வால் ஒட்டியிருந்தது…
VOICE OVER: ஆ.. என்னுடைய வால்… நிறைய முடி இருக்குற என்னுடைய அழகான வால் இந்த மாதிரி ஆயிடுச்சே… இப்ப நான் என்ன செய்வேன்… ஐயோ என்னுடைய வால்… என் அழகான வால் இல்லாம நான் மத்த நரிங்களை எப்படி பாக்க முடியும்… ஐயோ எனக்கு தலை குனிவா போயிடுச்சே…
VOICE OVER: நரி யோசித்தது… யோசித்துக் கொண்டே இருந்தது… கடைசியில் ஒரு வழியைக் கண்டுபிடித்தது…
அது அனைத்து நரிகளையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டது… அப்பொழுது நரி…
நரி: அ.. நா.. நான் சொல்றதை கேளுங்க… என்னுடைய வாலை நான் வெட்டிகிட்டேன்… அதே மாதிரி நீங்களும் வெட்டிக்குங்க… நான் சொல்ற படி கேளுங்க… அதனால உங்களுக்கு நன்மை தான் ஏற்படும்…
நரி: பாருங்க இந்த நீளமான வால்-னால பயன் கிடையாது… அழிவுதான் ஏற்படும்… அதோட நாய்கள் நம்மள துரத்தும் போது நமக்கு நம்ம வால் பயன் படுதா சொல்லுங்க… நாம எல்லாரும் பேசணுங்கறதுக்காக ஒண்ணு கூடும் போது.. இந்த வால் என்ன செய்யுதுன்னு யாராலயும் சொல்ல முடியுமா.. உங்க கால்ல அதை கட்டி வச்சிருக்கிறீங்களா என்ன… இல்ல அது மேல உக்கார்றீங்களா.. இல்ல மத்தவங்கள வால் மேல காலை தான் வைக்க விடறீங்களா…
சொல்லுங்க… சொல்லுங்க… சொல்லுங்க… பதில் சொல்லுங்க…
நரி: ஆங்… இப்பவும் உங்களுக்கு யோசிக்க நேரம் இருக்கு… வாலுங்கற சிறையில இருந்து வெளியில வாங்க…
வாலில்லாத ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க வந்து என்னோட சேருங்க…
நரி – 2: ஹ…ஹ…ஹ… உனக்கு மட்டும் அழகான வால் இருந்திருந்தா… நீ இப்படி எல்லாம் பேசி இருக்க மாட்ட… ம்.. ம்… ஏன்னா உன் வெட்கத்தை மறைக்கவும்… உன்னுடைய சுயலாபத்துக்காகவும் தான் நீ இப்படி பேசுற…
VOICE OVER: அனைத்து நரிகளும் தங்களுடைய அடர்ந்த வாலை… அந்த நரியின் முன்பாக காட்டி சிரித்தபடியே அங்கிருந்து சென்றனர்..
VOICE OVER: குழந்தைகளே இதிலிருந்து நாம தெரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா… சுயலாபத்துக்காக யார் என்ன பேசுனாலும் அதை நம்பக் கூடாது…