Connect with us

Moral Stories - Tamil

ஈசோப்பின் கட்டுக்கதைகள் – வால் அறுந்த நரி

எப்பவும் தந்திரமும், பசப்பும் நிறைஞ்ச வார்த்தைகளை நாம நம்பக் கூடாது… இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்

ஈசோப்பின் கட்டுக்கதைகள் – வால் அறுந்த நரி PR047 17

நரியும் காகமும்

காட்சி-1

நரி, காகம், VOICE OVER…  

VOICE OVER: ஒருநாள் ஒரு நரி வெளியே கிளம்பி சென்று கொண்டிருந்தது… அப்பொழுது அது, ஒரு காகம் கீழே இறங்கி, ஒரு வெண்ணைத் துண்டை தன் அலகால் எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தது… அதன் பிறகு அந்த காகம் பறந்து.. ஒரு உயரமான மரத்தின் கிளை ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டது…

நரி: ம்.. இந்த வெண்ணைத் துண்டு ரொம்ப சுவையா இருக்கும் போல இருக்கே… எனக்கு அதை சாப்பிடணும் போல இருக்கு… நான் ஒரு நரி… அதை சாப்பிடற தகுதி எனக்கு இருக்கு… ரொம்ப சாமார்த்தியமா இனிக்க பேசுற திறமை… எனக்கு இருக்கு… கூடிய சீக்கிரமே அதை நான் சாப்பிடுவேன்…

VOICE OVER: நரி மரத்தின் அருகில் செல்கிறது…

நரி: வணக்கம்… என்ன காகமே… நீ எப்படி இருக்கே…

VOICE OVER: வாய்க்குள் உணவை வைத்துக் கொண்டு… பேசக்கூடாது என்று ஏற்கனவே பாடம் படித்திருந்த காகம் அமைதியாக இருந்தது… நரி மரத்தின் அடியில் வந்து அமர்ந்த போதும்… அதனால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை…

Advertisement

நரி: இன்னைக்கு நீ எப்படி இருக்க தெரியுமா… பாக்க அழகா இருக்க…

நரி: ஹ.ஹ. ஹ… சரி சொல்லு… உன்கிட்ட எதும் ரகசியத்தை மறைச்சி வைச்சிருக்கியா…

நரி: ஆமா நான் உன்கிட்ட ஒண்ணு கேக்கறேன்… அட… உன்னுடைய இறகு பார்க்க பளபளப்பா இருக்கேன் அது எப்படி… அதோட உன் கண்களும்… ம்… வைரம் போல ஜொலிஜொலிக்குதே…

VOICE OVER: வாயில் வெண்ணை துண்டை வைத்திருந்த காரணத்தினால்… காகம் பதில் சொல்ல வில்லை…

நரி: ஹ.ஹ.ஹ…. பாக்க அழகா இருக்குற நீ பாட்டு பாடினால்… இன்னும் எவ்வளவு நல்லா இருக்கும்… உன்னை எல்லோரும் பறவைகளோட ராணின்னு சொல்லுவாங்க… ஹ.ஹ.ஹ…

VOICE OVER: நரியின் சாதூரியமான பேச்சுக்களைக் கேட்ட காகம்… பறவைகளின் ராணியாக தன்னை நினைத்துக் கொண்டது… உடனே அது தன் வாயைத் திறந்து… பாடத்துவங்கியது…

காகம்: கா..கா..

VOICE OVER: ஆனால் காகம் தன் வாயைத் திறந்த உடன்… வாயிலிருந்த வெண்ணைத் துண்டு… கீழே மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த நரியின் வாயில் விழுந்தது…

Advertisement

நரி: ம்… நான் நினைத்தது நடந்தது… வெண்ணையும் கிடைத்தது… அப்போது நரி மரத்தின் மீது சலிப்புடன் அமர்ந்திருந்த காகத்தைப் பார்த்தது…

காகம்: கா… கா.. கடவுளே… வெண்ணைத் துண்டு கீழ விழுந்திடுச்சே… அதையும் அது திருடிடுச்சே…

காகம்: கா… கா.. கா..

நரி: நிச்சயமா இல்ல… இது எல்லாமே தந்திரம் தான்… முட்டாள் காகமே… மரத்து மேல உக்கார்ந்திருக்கிற உனக்கு… ஆறுதல் கிடைச்சுது… கீழ இருக்குற எனக்கு… ம்… வெண்ணை கிடைச்சுது… ம்… என்ன சுவை தெரியுமா.. …ம்..

VOICE OVER: குழந்தைகளே… எப்பவும் தந்திரமும், பசப்பும் நிறைஞ்ச வார்த்தைகளை நாம நம்பக் கூடாது… இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்… ம்…

Continue Reading
Advertisement