Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – விவசாயி, அவர்மகன் மற்றும் அவர் கழுதை
நம்மகிட்ட இருந்து மத்தவங்க எதிர்பார்க்கறதை நம்மாள… எப்பவும் செஞ்சிகிட்டு இருக்க முடியாது.. நாம எப்பவும் எல்லாரையும் சந்தோஷப் படுத்த முடியாது… ஏன்னா எப்பவும் யாராவது நம்மகிட்ட எதையாவது எதிர்பார்த்துகிட்டே இருப்பாங்க

விவசாயி, அவர்மகன் மற்றும் அவர் கழுதை
காட்சி-1
விவசாயிமகன்VOICE OVER…
விவசாயி: மகனே நம்ம கழுதைக்கு, நீ சாப்பாடு எதாவது குடுத்தியா.
மகன்: ஆங்… குடுத்திட்டேன்பா… ஆமா… இவ்ளோ காலையில நாம எங்க போறோம்…
விவசாயி: நாம நகரத்துக்கு போயி சில பொருட்கள் எல்லாம் வாங்கணும்… சரி… வா… சீக்கிரமா வா… நேரமாயிடுச்சி…
ஆள் 1: குட்மார்னிங்… ஹ…ஹ… ஹ… எப்படி இருக்கீங்க… ஆமா.. இவ்வளவு காலையில எங்க கிளம்பிட்டீங்க…
விவசாயி: நாங்க நகரத்துக்கு போயிட்டு இருக்கோம்…
ஆள் 1: நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா… நீங்க சவாரி செய்யறதுக்கு ஒரு கழுதை இருக்கும் போது ஏன் நடந்து போகணும்… நீங்க அந்த கழுதை மேல ஏறி சவாரி செய்யலாமே…
மகன்: ஆமாப்பா… இவரு சொல்றது சரிதான… நாம அந்த கழுதை மேலயே போயிடலாம்பா…
விவசாயி: உன்னோட அறிவுக்கு ரொம்ப நன்றி… நமக்கு நேரமாயிடுச்சி… நாம சீக்கிரம் கிளம்பலாம்… சரி… நாம கிளம்பலாம்… நீ நம்ம கழுதை மேல ஏறி உட்கார்ந்துக்கோ மகனே…
மகன்: நீங்க கழுதை மேல ஏறி வாங்கப்பா… நான் உங்க பின்னாடி நடந்தே வர்றேன்…
விவசாயி: ம்.. நல்லா இருக்கீங்களாம்மா… ஹ. ஹ.. உங்களுக்கு எங்களுடைய வணக்கங்கள் அம்மா… ஹ.ஹ.ஹ…
பெண் நான் நல்லா இருக்கேன்… ஆங்… நான் வீணா உங்க விஷயத்துல மூக்கை நுழைக்கறேனேன்னு நினைக்காதீங்க… ஆனா பாவம்… அவனோ ஒரு சின்னப் பையன்.. அவன் நடந்து வர்றான்… ஆனா நல்ல பலசாலியான நீங்க… கழுதை மேல உட்கார்ந்துட்டு வர்றீங்க… ஏன்…
மகன்: இவங்க சரியாத்தான் சொல்றாங்க… நீங்க ஏன்பா இதை யோசிக்காம விட்டுட்டீங்க..
விவசாயி: சரி அப்படியே முயற்சி பண்ணி பார்த்திடலாம்…
ஆள் 2: எப்படி இருக்கீங்க… ஹ.ஹ.ஹ… குட்மார்னிங்… ஹ.ஹ.ஹ…
விவசாயி: ம்.. நல்லா இருக்கேன்…
ஆள் 2: எங்க காலத்துல நாங்க எப்படிஎல்லாம் நடந்து போனோம் தெரியும் இல்ல… ஒரு இளமையான வாலிபன்… இப்படி கழுதை மேலயா சவாரி செய்றது… பெத்த அப்பன் நடந்து வர்றான்… புள்ளை கழுதை மேல சவாரி செய்யுது… இது ரொம்ப கேவலமான விஷயம் இல்லையா தம்பி… அடக்கடவுளே என்ன கொடுமைடா இது…
விவசாயி: இப்ப நாம என்ன தான் செய்றது மகனே… எனக்கு ஒண்ணுமே புரியலையே…
மகன்: அவரு சொல்றது சரிதாம்பா… நாம ரெண்டு பேருமே கழுதையில ஏறி சவாரி செய்யலாம்… வந்து கழுதை மேல உக்காருங்கப்பா… வாங்க…
சிறுமி: அட… எவ்வளவு அழகான கழுதை… இது பேர் என்ன…
மகன்: இது பேரு பேஞ்சோ…
சிறுமி: ஓ.. பாவம் பேஞ்சோ… களைப்படைஞ்சிருக்கே… இதோட முகத்தைப் பாருங்க… நீங்க ரெண்டு பேரும் இது மேல ஏறி ஏன் சவாரி செய்றீங்க.. ம்… ப்ச்… பாவம் கழுதை…
விவசாயி: இப்ப நாம என்ன பண்றது…
மகன்: அந்த சின்னப் பொண்ணு சொல்றது ரொம்ப ரொம்ப சரிதாம்பா… இந்த கழுதை இப்போ ரொம்ப களைச்சிபோய் தான் இருக்குன்னு நினைக்கிறேன்… வாங்கப்பா… நாம ரெண்டுபேரும் சேர்ந்து இந்த கழுதையை, தூக்கிகிட்டுப் போலாம்… அப்பதான் இனி யாருமே நம்மளை.. குறை சொல்ல மாட்டாங்க… வாங்க…
விவசாயி: அதான் சரி… யாரு என்ன சொல்றாங்கன்னு பாப்போம்… ம். நம்மளோட நிலைமை என்னன்னு பாத்தியா மகனே…
மகன்: நான் உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லவா அப்பா… எனக்கும் ஒண்ணும் புரியலை… எல்லாரும் அவங்கவங்க சொன்னபடி தான் நாம செஞ்சோம்… அப்படியும் அவங்களை மகிழ்விக்க நம்மளால முடியலை பார்த்திங்களா.. எல்லாரும் நம்மளையே குறை சொல்றாங்கப்பா… அதுவுமில்லாம நம்மளைப் பாத்து சிரிக்கிறாங்கப்பா… ஏன்…
விவசாயி: நான் சொல்றதை கேளு மகனே… இந்த உலகத்தை நீ உன்னோட கண்ணோட்டத்திலேயே எப்பவும் பாரு… ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்லுவாங்க… எல்லா மக்களையும் நம்மளால எப்பவும் திருப்தி படுத்தவே முடியாது… ம்.. ஹூம்..
மகன்: எனக்கு நல்லா புரிஞ்சதுபா… நாம அவங்கள சந்தோஷப்படுத்த பாத்தோம்.. ஆனா அவங்க எல்லாம் நம்மளைப் பார்த்து சிரிக்கிறாங்கப்பா… இனிமே நாம என்ன பண்றதுன்னு சொல்லுங்கப்பா…
விவசாயி: எப்பவும் நீயா யோசிச்சி சொந்தமா ஒரு முடிவுக்கு வா… அப்படி நீ எடுக்கற முடிவுதான்… நல்ல முடிவா இருக்கும்…
மகன்: இனிமே யாருடைய அறிவுரையும் இல்லாம… எனக்கு என்ன செய்யணும்னு நல்லாவே தெரியும்பா… நீங்க பாதி தூரம் வரைக்கும் கழுதை மேல சவாரி செஞ்சிகிட்டு வாங்கப்பா… மீதி தூரத்துக்கு நான் கழுதை மேல சவாரி செஞ்சிட்டு வர்றேன்பா… அப்பப்ப நாம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி… நடந்து போகலாம்… அப்ப இந்த கழுதை பேஞ்சோவுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும்பா… என்னப்பா… நான் சொல்றது சரிதானப்பா…
விவசாயி: சபாஷ் சரியா சொன்ன மகனே… நாம அப்படியே செய்வோம்… வா… பேஞ்சோ… நாம போகலாம்…
மகன்: வா.. போகலாம்… யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைப்பா… லலலால லாலா…
VOICE OVER: நம்மகிட்ட இருந்து மத்தவங்க எதிர்பார்க்கறதை நம்மாள… எப்பவும் செஞ்சிகிட்டு இருக்க முடியாது.. நாம எப்பவும் எல்லாரையும் சந்தோஷப் படுத்த முடியாது… ஏன்னா எப்பவும் யாராவது நம்மகிட்ட எதையாவது எதிர்பார்த்துகிட்டே இருப்பாங்க… குழந்தைகளே மத்தவங்களோட உளரலை நாம கேட்கக் கூடாது… புரிஞ்சிதா…