Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – கரடியும், இரு நண்பர்களும்
ஆபத்தில் உதவுபனே உண்மையான நண்பன்… ஆபத்துக் காலத்துல உண்மையான நண்பன் யாருன்னு தெரிஞ்சிடும்

கரடியும், இரு நண்பர்களும்
காட்சி-1
ஏலன்: நகரத்துல சில நாடோடிகள் வந்திருக்கிறதா கேள்வி பட்டேன்… அவங்க எதிர்காலத்தைக் கணிச்சி சொல்றாங்களாம்… உண்மையா…
பாப் அப்பா: அதெல்லாம் உண்மை இல்ல…
பாப் வாங்க: போய் அவங்களை பார்ப்போம்..அவங்க எனக்கு என்ன அறிவுரை சொல்றாங்கன்னு கேப்போம்…
பாப் அப்பா: இன்னிக்கு வேண்டாம்… நேரமாயிடுச்சி… இந்த நேரத்துல காட்டுக்குள்ள போறது பாதுகாப்பா இருக்காது…
ஏலன்: கவலைப் படாதீங்க ஐயா… பாபை நான் பார்த்துக்கறேன்…
பாப் அப்பா: நீ பாத்துக்கவேன்னு தெரியும் ஏலன்.. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு…
ஏலன்: பாப் என்னோட ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்… அவனுக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன்…
பாப் அப்பா: சரி எனக்கு உங்க மேல நல்லாவே நம்பிக்கை இருக்கு.. போயிட்டு வாங்க… போயிட்டு பத்திரமா திரும்பி வாங்க… ஹ..ஹ..ஹ..
பாப்: நன்றிப்பா…
ஏலன்: அப்பா ரொம்ப வித்தியாசமானவரு இல்ல பாப்…
பாப்: ம்.. தெரியல… ஆனா மக்கள் அவர்கிட்ட மந்திர சக்தி இருக்கறதா சொல்றாங்க… ஏலன் பாப்… அ.. பாப்… உனக்கு அந்த சத்தம் கேட்டிச்சா…
ஷ்… இது கரடி..
பாப்: அப்பா சரியாதான் சொன்னாரு… இருட்டிடுச்சி இல்ல… காட்டுக்குள்ள போறது பாதுகாப்பு இல்லன்னு சொன்னாரு இல்ல…
ஏலன்: ம்.ஹூம்.. .நமக்கு ஒண்ணும் ஆகாது… நீ கவலைபடாத என்ன.. அதோ.. பாரு கரடி… வழியில குறுக்க நிக்குது… ஆங்.. இல்ல.. இங்க தான் வருது.. ஓடலாம்… ஓடலாம்…
முதல்ல நான் மரத்துல ஏறுறேன்…
பாப்: சரி நான் உதவி செய்யறேன்… நீ என் தோள் மேல ஏறிப் போ…எனக்கு இப்போ உன் கையைக் குடு…
ஏலன்: சீக்கிரம் குடு… அ. அ…
பாப்: இங்க ரெண்டு பேரு ஒளிஞ்சிக்கற அளவுக்கு இடம் இல்ல.. நீ வேற இடத்துக்கு போயி மறைஞ்சுக்கோ…
பாப்: ம்.. அட இப்ப நான் என்ன பண்றது… ஆங்.. உயிரற்ற சடலத்தை கரடி சாப்பிடாதுன்னு அப்பா சொல்ல கேட்டிருக்கேன்.. இப்போ நான் ஒண்ணு பண்றேன்.. தரையில படுத்து இறந்தது மாதிரி நடிக்கப் போறேன்… ம்…
ஏலன்: ஏய்… பாப்… அந்த கரடி உன்னை தாக்கும்னு நான் நினைச்சிகிட்டு இருந்தேன்.. ஆனா… அது உன் காதுல ஏதோ சொல்லிட்டு போச்சே… என்ன சொல்லிச்சு…
பாப்: ஓவ்.. அதுவா.. அது எதிர்காலத்தை சொல்லக் கூடிய கரடி…
ஏலன்: என்ன நிஜமாவா சொல்ற…
பாப்: அ.. ஆமாம்… அது நாடோடிகளோட வந்ததாம்… அது என் உள்ளங்கையை படிச்சது…
ஏலன்: அப்படியா… அது உன்கிட்ட என்ன சொல்லிச்சி…
பாப்: துன்பம் வரும்போது.. உன்னை கைவிடற நண்பனோட நீ எப்பவும்… வெளிய போகாதன்னு எனக்கு அறிவுரை சொல்லிச்சி… எனக்கு ஏத்த அறிவுரைதான் அது…
ஏலன் பாப்… என்ன மன்னிச்சிடு…
VOICE OVER: சரி.. நான் வீட்டுக்குப் போறேன்… வர்றேன்… இந்த கதையில இருந்து உங்களுக்கு என்ன புரிஞ்சது குழந்தைகளே… ஆபத்தில் உதவுபனே உண்மையான நண்பன்… ஆபத்துக் காலத்துல உண்மையான நண்பன் யாருன்னு தெரிஞ்சிடும்…