Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – தங்க முட்டை
பேராசை பெரும் அழிவைத் தரும்

தங்க முட்டை
காட்சி-01
விவசாயிகோழி:VOICE OVER…
VOICE OVER: முன்னொரு காலத்தில் நடந்த சம்பவம்… ஓர் ஊரில்… ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான்… அவன் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தான்… அவன் மிகவும் கஷ்டப் பட்டு உழைத்தான்… அதன் மூலம் கிடைத்த வருமானம் அவன் தேவைகளுக்கு போதுமானதாக இருந்தது…
VOICE OVER: ஒரு நாள் மாலை வேலையிலிருந்து வீடு திரும்பிய அவனுக்கு மிகவும் பசித்தது..
விவசாயி: இன்னைக்கு ராத்திரி என்ன சமைக்கிறது…
VOICE OVER: அதே நேரம் அவனது குடிசை வாசலில்… ஒரு கோழி கூவும் சத்தத்தை அவன் கேட்டான்…
விவசாயி: ஆங்… அந்த கோழி எனக்கு நல்ல விருந்தா இருக்கும்னு நினைக்கறேன்…
VOICE OVER: சிறிது நேர முயற்சிக்கு பின் விவசாயி அந்த கோழியை பிடித்து விட்டான்…
VOICE OVER: அந்த கோழியை சமைப்பதற்காக கொல்ல முயற்சித்தபோது… அது பேச ஆரம்பித்தது…
கோழி: விவசாயி… என்னை கொன்னுடாத… நான் நான் உனக்கு நிறைய உதவி செய்வேன்…
விவசாயி: என்ன இது… இந்த கோழி நல்லாவே பேசுதே… ம்.. சரி… அப்படின்னா நான் உன்னை கொல்ல மாட்டேன்… ஆனா நீ எந்த விதத்துல எப்படி எனக்கு உதவி செய்வேன்னு சொல்லு…
கோழி: நீ என்னை கொல்லாம உயிரோட விட்டேன்னா… நான் தினமும் உனக்கு… தங்கத்தாலான ஒரு முட்டையை தருவேன்…
விவசாயி: தங்க முட்டையா… அதுவும் தினமுமா… ஆனா இந்த விஷயத்துல நான் எப்படி உன்னை நம்பறது… ஒரு வேளை நீ என்னை ஏமாத்திட்டின்னா…
கோழி: என்மேல நம்பிக்கை வையி… நாளைக்கு மட்டும் நான் தங்க முட்டையை தரலைன்னா… நீ… நீ என்ன கொன்னுடலாம்…
விவசாயி: சரி நாளைக்கு வரைக்கும் உனக்காக நான்…காத்துக்கிட்டு இருக்கேன்… ஆங்….
VOICE OVER: விவசாயி அந்த கோழியுடன் குடிசைக்குள் சென்று, அதனை ஒரு கூண்டில் அடைத்து வைத்தான்…
VOICE OVER: அடுத்த நாள் காலை எழுந்ததும்… அவன் கோழிக் கூண்டின் அருகில் சென்று… அது கூறிய படி தங்க முட்டையை இட்டுள்ளதா என்று பார்த்தான்…
விவசாயி: ஆங்… என்ன இது… ஆச்சர்யமா இருக்கு… உண்மையிலேயே இது தங்கமுட்டைதான்…
VOICE OVER: அவன் அந்த முட்டையை எடுத்துகொண்டு, நகரத்திற்கு சென்று அதை விற்க முயன்றான்…
VOICE OVER: அவன் சாலை நடுவே நின்று கொண்டு… நன்றாக கத்தி விற்க ஆரம்பித்தான்…
விவசாயி: இது அற்புதமான தங்கமுட்டை… வாங்கிக்கங்க…. இது ஒரு அதிசயமான தங்கமுட்டை… வாங்கிக்கங்க…
விவசாயி: ல.ல.லா… ல.ல…லா… ஆங்…
ஒருபெண்: என்னது.. உண்மையாவா…. இது தங்க முட்டை தானா…
விவசாயி: நிஜமாவே இது ஒரு தங்கமுட்டைதான்…
VOICE OVER: இதைக் கேட்டு அந்த முட்டையைப் பார்க்க அங்கு பெரிய கூட்டம் கூடியது… அதைப் பார்த்து ஆச்சரியப் பட்டனர்…
ஒருவர் எனக்கு இந்த முட்டை வேணும்பா…
மற்றொருவர்: இல்ல எனக்கு தான் வேணும்…
ஒருவர் எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்… இதை எனக்கே குடுத்துடுங்க..
விவசாயி: கவலைப் படாதீங்க… இதை உங்களுக்கே தந்திடறேன்… நாளைக்கு இதே மாதிரி இன்னொரு முட்டை கொண்டு வர்றேன்.. எல்லாரும் தயாரா இருங்க…
VOICE OVER: விவசாயி அந்த தங்க முட்டையை விற்று… நல்ல லாபம் சம்பாதித்தான்…
VOICE OVER: அடுத்த நாள் காலை எழுந்ததும்… மறுபடியும் அவன் மற்றொரு முட்டை இட்டு இருக்கிறதா என்று பார்க்கப் போனான்…
விவசாயி: ஆஹா… அற்புதம்… இன்னொரு தங்க முட்டை… இப்பொழுதே இதையும் விற்று விட வேண்டும்… ம்… ஹ…ஹ..ஹ…
VOICE OVER: மற்றும் ஒருமுறை அவன் நகரத்திற்கு சென்று… தங்க முட்டையை விற்றான்…
விவசாயி: அதிசயமான தங்கமுட்டை… வாங்கிக்கங்க..
ஒருவன் ம்…. சரி சொல்லு… இந்த முட்டையை நானே வாங்கிக்கறேன்…
VOICE OVER: நாளுக்கு நாள் அவனுக்கு தங்கமுட்டைகளை கொடுத்துக் கொண்டே இருந்தது…
VOICE OVER: கோழி கொடுத்த தங்க முட்டைகளினால் அவனிடம் பணம் சேர்ந்து கொண்டே இருந்தது… ஒவ்வொரு நாளும்…
VOICE OVER: நாளுக்கு நாள் நான் பெரிய பணக்காரனாயிகிட்டே போறேன்… இந்த நகரத்துலயே நான் தான் பெரிய பணக்காரன்… ஒரு மனுஷனுக்கு என்னென்ன தேவையோ.. அது எல்லாமே என்கிட்ட இருக்கு… ஆங்…
VOICE OVER: இதைப் பற்றி… அவன் யோசித்தான்… யோசித்தான்… யோசித்துக் கொண்டே இருந்தான்… எனக்கு இன்னும் நிறைய பணம் வேணும்… தினமும் ஒவ்வொரு முட்டையா எடுத்துட்டுப் போறதுல எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு… அந்த கோழியை கொன்னு அதுக்குள்ள இருக்கற எல்லா முட்டைகளையும் நான் எடுக்கப் போறேன்…
VOICE OVER: அவன் அதைக் கொன்று… அதன் வயிற்றை திறந்து பார்த்தான்…
VOICE OVER: ஆனால் அவனுக்கு எதுவுமே கிடைக்கவில்லை… ஏமாற்றம் தான் மிஞ்சியது…
விவசாயி: ஆ… என்ன இது… தங்க முட்டையே இல்ல… ஆங்… இதுக்குள்ள இருக்கற தங்கப்புதையலை காணோம்…
விவசாயி: ஆ… இப்ப என்கிட்ட கோழியும் இல்ல… கோழியை கொன்னு நிறைய முட்டை எடுக்கலாம்னு கனவு கண்டேன்… இப்ப எதுவுமே இல்லாம போயிடுச்சி…
VOICE OVER: இந்த கதையில இருந்து நாம ஒரு விஷயத்தை தெரிஞ்சிகிட்டோம்… அது என்னன்னா குழந்தைகளே… பேராசை பெரும் அழிவைத் தரும்…