Connect with us

Moral Stories - Tamil

ஈசோப்பின் கட்டுக்கதைகள் – கழுகும், ஆமையும்

நாம இருக்கற இடத்தை சந்தோஷமா ஏத்துகிட்டோம்னா நமக்கு வாழ்க்கையில எந்த பிரச்சினையும் வராது குழந்தைகளே.

ஈசோப்பின் கட்டுக்கதைகள் – கழுகும், ஆமையும் PR047 13

கழுகும், ஆமையும்

காட்சி-1

கழுகு, ஆமை, VOICE OVER…

கழுகு: நீ என்ன யோசிச்சிகிட்டு இருக்க…

ஆமை: உன்னை மாதிரியே எனக்கும் பறக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு…

கழுகு: ஏன் ஆமையே… நீ பறக்கணும்னு நினைக்கற…

ஆமை: நான் நடந்து நடந்து எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு… ஒரு சோம்பேறியை விட நான் ரொம்ப மோசமா நடக்கறேன்..

கழுகு: நான் உன்கிட்ட கேட்டதுக்கு நீ இன்னும் என்கிட்ட பதில் சொல்லவே இல்ல ஆமையே…

Advertisement

ஆமை: ஆ.. இப்ப நான் சொன்னதுதான் உண்மையான பதில்… நான் பறக்க ஆசைப் படறதுக்கு காரணம்… அது தான்…

கழுகு: நீ தரையில நடக்க விருப்பப் படல… ஆனா நீ ரொம்ப சோர்வா இருக்கற… ஏன் பறக்கணுங்கறதுக்கு உண்மையான காரணத்தை என்கிட்ட சொல்லவே இல்லையே ஏன்…

ஆமை: இல்ல இல்ல… என்னால நடக்க முடியலங்கறது தான் காரணம்…

கழுகு: இல்ல… மறுபடியும் முயற்சி செய்…

ஆமை: ஆங்… எனக்கு இந்த பூமியில நடக்கப் புடிக்கலை… அதனால தான் எனக்குப் பறக்க ஆசையா இருக்கு… நான் ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போறதுக்கு… எனக்கு ரொம்ப நேரமாயிடுது… அதுக்குள்ள நான் சோர்வடைஞ்சிடறேன்… இப்ப உனக்கு புரிஞ்சுதா… நான் ஏன் பறக்க ஆசைப் படறேன்னு… இதான் நான் பறக்க ஆசைப் படறதுக்குக் காரணம்…

கழுகு: நான் மறுபடியும் கேக்கறேன்… நீ ஏன் பறக்கணும்னு ஆசைப்படற… அதுக்கு பதில் சொல்லு…

ஆமை: ம்.. நான் சுதந்திரமா வாழ விரும்பறேன்… அந்த சுதந்திரம் பறந்து திரிஞ்சா தான் எனக்கு வரும்னு தோணுது… வானத்துல நட்சத்திரங்களையெல்லாம் எனக்கு பாக்கணும்னு ஆசை… நானும் உன்னை மாதிரியே வானத்துல சுத்தி சுத்தி வரணும்னு விரும்பறேன்… இந்த ஆசையை உன்னால தான் நிறைவேத்த முடியும்னு நான் நினைக்கறேன்… ஓ…

ஆமை: ப்ளீஸ்… நான் ஒரே ஒரு நிமிஷமாவது பறக்கணும்… அதனால தயவுசெஞ்சி நீ எனக்கு பறக்கக் கத்துக் குடுக்கறியா

Advertisement

கழுகு: என்ன மாதிரி உனக்கு இறக்கைங்க இல்லை.. அதனால பறக்க முடியாது…

ஆமை: நான் உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்… என்ன சொல்ற… கத்து தர்றியா…

கழுகு: ம்… அப்படின்னா நீ எனக்கு எவ்வளவு பணம் தருவே..

ஆமை: ம்… நான் உனக்கு நூறு தங்க காசுகள் தர்றேன்…

கழுகு: ம் சரி… அப்படின்னா… உன்னோட வேண்டுகோளை ஏத்துக்கறேன்…

ஆமை: தேங்க் யூ…

கழுகு: நான் உன்னோட காலைப் பிடிச்சிக்கறேன்… நீ பயப்படாம இரு சரியா…

ஆமை: அ… ஆ… வேணாம்… வேணாம்…

Advertisement

ஆமை: ஆ..ஹா… ரொம்ப ஜாலியா இருக்குது… இந்த மாதிரி பறக்கதான் நான் ஆசைப் பட்டேன்… இந்த மாதிரி சந்தோஷத்தை நான் எப்பவும் அனுபவிச்சதில்லை…

கழுகு: நீ சந்தோஷ படறதைப் பாத்து நானும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்குறேன்…

ஆமை: நன்றி நண்பா… நன்றி… நீ எனக்கு செஞ்ச இந்த உதவியை நான் எப்பவும் மறக்கமாட்டேன்…

கழுகு: சரி… நாம இப்ப கீழ இறங்குறதுக்கான நேரம் வந்திடுச்சி…

ஆமை: வேணாம்… வேணாம்… இங்க இறக்கி விட்டுடாத… ஆமைங்க இருக்கற இடமா பாத்து என்னை இறக்கி விடு…ஆங்…. நான் அவங்களை சந்திக்க விரும்பறேன்..

கழுகு: நீ.. நீ… அவங்களை சந்திக்கணும்னு ஏன் நினைக்கற… பொழுது போக்குக்காக மேல பறக்கணும்னு தான நினைச்ச…

ஆமை: ஆமா… அவங்க என்மேல பொறாமை கொண்டவங்க… அதனால தான் அங்க போயி என்னை இறக்கிவிட சொல்றேன்…

கழுகு: உம்மேல அவங்க பொறாமைப் படறாங்களா? அவங்க உன்னோட நண்பர்கள்.. உண்மையான நண்பர்கள் பொறாமைப் பட மாட்டாங்க…

Advertisement

ஆமை: ஆனா அவங்களுக்கு மத்தியில நான் வித்தியாசமானவன் இல்லியா…

கழுகு: இது போல தேவையில்லாத பேச்செல்லாம் பேசாத ஆமையே…

ஆமை: ஆங்… நான் சொல்றது உண்மை… அவங்க என்மேல பொறாமைப் படுவாங்க… எனக்கு சமமா அவங்களால பறக்க முடியாது இல்லையா…

கழுகு: ஆமையே நீ பேசறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல… நான் உன்னையும், உன்னோட பேச்சையும் வெறுக்கறேன்..

கழுகு: சரி… இனி நீயே பறந்துக்க…

ஆமை: வேணாம் விட்டுடாத… நான் பணம் தர்றேன்னு சொன்னேன் இல்ல…

கழுகு: எனக்கு பணத்தை பத்தியெல்லாம் கவலையே இல்ல…உன்னால முடிஞ்சா… நீயும் வானத்துல பறக்க முடியும்னு அவங்களுக்கு காட்டு…சரி நான் கிளம்புறேன்… உனக்கு என்னோட வாழ்த்துக்கள்…

வாழ்த்துக்கள்…ஆமையே… வாழ்த்துக்கள்…

Advertisement

ஆமை: நண்பன்1: உனக்கு அதிக காயம் பட்டிருக்கற மாதிரி தெரியுது…

ஆமை: ஆமா அடி பட்டிருக்குது.. நல்லவேளை.. என் முதுகுல உள்ள ஓடு என் உசிரையே காப்பாத்திடுச்சி…

ஆமை: நண்பன்2 உன்ன நினைச்சி நான் ரொம்பவே வருத்தப் படறேன்… பூமியில உன்னால மெதுவாத்தான் நடக்க முடியும்… அப்படி இருக்கும் போது வானத்துல நீ எப்படி பறந்த…

ஆமை: நான் என்னன்னு சொல்லுவேன்… ஆனா இன்னிக்கு ஒரு நல்ல பாடத்தைக் கத்துகிட்டேன்… நாம இருக்கற இடத்துல சந்தோஷமா வாழணுங்கறது தான் புத்திசாலித் தனம்னு புரிஞ்சிகிட்டேன்…

VOICE OVER… நாம இருக்கற இடத்தை சந்தோஷமா ஏத்துகிட்டோம்னா… நமக்கு வாழ்க்கையில எந்த பிரச்சினையும் வராது குழந்தைகளே..

Continue Reading
Advertisement