Moral Stories - Tamil
ஈசோப்பின் கட்டுக்கதைகள் – நரியும், கழுதையும்
நம்மளோட உதவி பயனுள்ளதா இருக்கணும்… குழந்தைகளே இப்படி தேவை இல்லாதவங்களுக்குப் பண்ணா… இதான் நடக்கும்

நரியும், கழுதையும்
காட்சி-1
நரி, கழுதை, VOICE OVER..
VOICE OVER: முன்னொரு காலத்தில் ஒரு கழுதை வாழ்ந்து வந்தது… திடீரென அது கூர்மையான முற்களின் மேல், தெரியாமல் காலை வைத்து விட்டது…
கழுதை: ஆ.. ஆ… எனக்கு வலிக்குது… ம்.. இல்ல… வலிக்கல… இருந்தாலும் அழணும் போல இருக்கு… ஆ.. இல்ல அழமாட்டேன்.. ஆ.. வலிக்குது.. ஆ… ஆ… ஆ…
VOICE OVER: கழுதை அழ ஆரம்பித்தது… நன்றாக சத்தம் போட்டு அழ ஆரம்பித்தது…
கழுதை: எனக்கு பயங்கரமா வலிக்குது… ஆ…ஆ… ஆ..
வலிதாங்க முடியல… இப்ப என்ன பண்றது… ஆ.. ஆ…
VOICE OVER: அழுதபடியே காலை தரையில் வைத்துப் பார்த்தது… ஆனால் முள் குத்தியதால் அதனால் நடக்கவே முடியவில்லை.. நேரம் கடந்து சென்றது… அப்பொழுது ஒரு நரி வந்தது…
கழுதை: ம்.. ஆ… நரியே என்னை காப்பாத்து… எனக்கு பயங்கரமா வலிக்குது…கால்ல முள்ளு குத்திடுச்சி… இப்ப நான் என்ன பண்றது…
ம்… ஆ… ஆ… வலிக்குது…
VOICE OVER: சில நிமிடங்கள் கழித்து அது நரியிடம் பேசுவது என முடிவெடுத்தது…
கழுதை: ஆ.. ஊ…. ஆ… வலிக்குது நரி… ஆ.. ஆ… ஆ…
நரி: என்ன நண்பா… உனக்கு என்ன ஆயிற்று.. ஆங்…
கழுதை: ஆ… ஊ…ஆ..அ… நரியே எனக்கு பயங்கரமா வலிக்குது… என் கால்ல முள்ளு இருக்கு… உன்னோட பெரிய பற்களால…என் கால்ல இருக்கற முள்ளை எடுத்துடு… எனக்கு உதவி பண்ணு… எனக்கு பயங்கரமா வலிக்குது.. ஆ.. ஆ.
ஊ… ஊ… என்னால உனக்கு உதவி செய்ய முடியும்னு நினைக்கறியா.. ஆ..ஆ..
உண்மையாத் தான் சொல்றேன்… நான் இறக்கறதுக்கு முன்னாடி என் கால்ல இருக்கற முள்ளை எடுத்துடு… அதுக்கு அப்புறமா நீ என்னை சாப்பிடலாம்…
நரி: ஊ.. ஆனா… உன்மேல குத்தியிருக்கற முள்ளை நான் எடுத்த பின்னாடி.. நீ ஏன் சாகணும்… நீ ஏன் சாகணும் சொல்லு… ஊ….
கழுதை: ஏன்னா… என்னோட உடம்பு சரியில்லை.. ஊ…. ஊ…. நீ என்ன செய்யனும்னு நினைக்கறியோ இப்பவே செஞ்சிடு…
நரி: ஊ… ஊ… சரி… சரி… என் கூரிய பல்லால அந்த முள்ளை நான் எடுத்திடறேன்…
கழுதை: அப்படின்னா ரொம்ப வலிக்குமா…
நரி: பயப்படாத… உன் காலை நல்லா நீட்டு… நான் முள்ளை எடுக்க வசதியா இருக்கும்…
கழுதை: ஆங்… இந்த முள்ளை எடுத்த உடனே… இவனை நல்லா உதைக்க வேண்டியது தான்…
நரி: நான் உன் கால்ல இருந்த முள்ளை எடுத்துட்டேன்… ஊ… இப்ப உனக்கு வலி இல்லையே… ஊ… ஊ…
VOICE OVER: கழுதை தன்னுடைய முழு பலத்தை பிரயோகித்து… மிகவும் வேகமாக அந்த நரியை எட்டி உதைத்தது.. நரியின் பற்கள் உடைந்தன… இதற்குள் கழுதையும் ஓடி விட்டது..
நரி: ஊ… ஊ.. ஐயோ.. அடக்கடவுளே… நான் அவனுக்கு… அவனுக்கு உதவி செய்யப் போயி… என் பல்லெல்லாம் கொட்டிக்கிச்சே… இனிமே நான் என்ன செய்யப் போறேன்… சாப்பிடறதுக்கு பல்லு கூட இல்லையே… ஊ… ஊ….
VOICE OVER: நம்மளோட உதவி பயனுள்ளதா இருக்கணும்… குழந்தைகளே இப்படி தேவை இல்லாதவங்களுக்குப் பண்ணா… இதான் நடக்கும்…