Moral Stories - Tamil
ஜாதகக் கதைகள் – கிராமத்து எலியும், நகரத்து எலியும்
இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழுங்கள் பேராசை கொள்ள வேண்டாம் இந்த கதையின் நீதி என்னவென்றால் நிறைவான மனதுடன் வளமாக வாழ்வோம்

கிராமத்து எலியும், நகரத்து எலியும்
காட்சி-1 கிராமத்து எலி, நகரத்து எலி, VOICEOVER…
VOICEOVER: முன்பொருமுறை ஒரு சிறு கிராமத்தில்… எலி ஒன்று வசித்தது… பசுமையான வயல்களுக்கிடையே… தனது குடிசையில் சௌகர்யமாக வாழ்ந்து வந்தது… நல்ல கோதுமைகளும், சோளங்களும் உண்டு… அனுபவித்தது…
VOICEOVER: பல மைல்களுக்கு அப்பால் நகரத்தில்… அதன் ஒன்று விட்ட சகோதரன் ஒன்று… வசதியான வீட்டில் சிறு பொந்தில் வசித்து வந்தது…
VOICEOVER: ஒரு நாள் நகரத்து சகோதர எலி… தன்னைப்பார்க்க… கிராமத்துக்கு வருவதைக் கேட்டு மகிழ்வுடன் காத்து இருந்தது…
VOICEOVER: மறுநாள் காலை… நகரத்து எலி.. கிராமத்துக்கு வந்து சேர்ந்தது…
நகரத்து எலி: சகோதரனே… நீண்டகாலத்திற்கு பின்… சந்திக்கிறோம்…
கிராமத்து எலி: வாருங்கள்… காண்பதில் எனக்கு மகிழ்ச்சி தான்…
VOICEOVER: கிராமத்து எலி… நகரத்தானை… தனது வீட்டிற்குள் வழி நடத்திச் சென்றது…
VOICEOVER: அன்று உணவு உண்ணும் வேளையில்… உணவு மேஜையில் பார்லியும்… சில தானியங்களுமே உணவாகக் காணப்பட்டது… வேறொன்றும் கிராமத்தில் இல்லை…
நகரத்து எலி: உண்மையில் உனக்கு வாழத்தெரிய வில்லை… நான் வாழ்வதைப் பார்க்க வேண்டும் நீ… நான் உண்ண எல்லா வகைகளிலும்… என் வீட்டில் வசதி உண்டு… ஒரு முறை என்னுடன் வா… உனக்கு நகரத்து வாழ்க்கை அப்போது புரியும்…
VOICEOVER: கிராமத்து எலியும் அதன் அழைப்பை மகிழ்வுடன் ஏற்று… நகரத்திற்குள் சென்றது…
VOICEOVER: உடனேமுதலில் தன்னுடன் சமையலறைக்கு அழைத்துச் சென்றது நகரத்து எலி… அங்கு தாழ்வான அறைகளில்… ஜாடிகளின் அருகில்… காகிதத்தால் ஆன சர்க்கரைப் பையை… இருவரும் கண்டு மகிழ்ந்தனர்… இருவரும் ஒரு துளையை இட்டு இஷ்டம் போல் உண்ணத் தொடங்கினர்…
கிராமத்து எலி: இது போல் சுவையை கண்டதே இல்லை வாழ்க்கையில்
VOICEOVER: என்று எண்ணியது… கிராமத்து எலி… அப்போது தான் அது நினைத்தது… நகரத்து எலி… எவ்வளவு அதிர்ஷ்டம் வாய்ந்தவன் என்று..… நகரத்து எலி: ஓடு
VOICEOVER: சொன்னது நகரத்து எலி… எந்த துளை வழியாக உள்ளே நுழைந்தார்களோ… அது வழியாக வெளியேறினர்… கிராமத்து எலிக்கோ உடல் முழுவதும் நடுக்கம்…
கிராமத்து எலி: இதை என்னால் தாங்க முடியவில்லை… மீண்டும் அந்த உள்ளறைக்குள் செல்வோமா…
நகரத்து எலி: இல்லை வேறொரு அறைக்குள் கூட்டிச் செல்கிறேன்… அங்கே நிச்சயம் சிறப்பானது கிடைக்கும்…
VOICEOVER: நகரத்து எலி.. தனது வீட்டின் மற்றொரு அறைக்குள்… அழைத்துச் சென்றது… அடுக்கான தாழ்வறைகளில்… ஜாடிகளில் வெண்ணையும்… பாலாடைக்கட்டி பைகளும்… சிதறியும், சிந்தியும் காணப்பட்டது… பக்குவமான இறைச்சி வகைகளும்… பழுத்த ஆப்பிள்களும்… பெரும் பீப்பாய்களில் காணப்பட்டது…
VOICEOVER: இதன் வாசனை கிராமத்து எலியின் மூக்கை துளைத்தது… தலைக்கேறியது…. இங்கும் அங்கும் ஓடி பாலாடைக் கட்டி கொஞ்சம்… வெண்ணெய் கொஞ்சம்… என்று தின்னத் துவங்கியது… உயர்ந்த மணமுள்ள பாலாடைக் கட்டி… ஒன்று மூலையில் வைக்கப்பட்டுள்ளதையும் கவனிக்கத் தவறவில்லை…. தன் பல்லால் அதை கடித்து எடுக்க முயன்ற போது…
நகரத்து எலி: நிறுத்து நிறுத்து அது… எலிப்பொறி…
VOICEOVER: கிராமத்து எலி பயத்துடன் நின்றது…
கிராமத்து எலி: என்ன பொறியிது…
நகரத்து எலி: இது நமக்காக வைக்கப் பட்டது… தொட்ட மாத்திரத்தில் தலைமேல் தாக்கி… நீ மரணமடைவாய்… ஜாக்கிரதை…
VOICEOVER: பொறியையும், பாலாடைக் கட்டியையும் மாறி மாறி பார்த்த கிராமத்து எலி… நகரத்து எலியின் முகத்தையே பார்த்தது… பின்பு…
கிராமத்து எலி: என்னை மன்னித்துக் கொள்… நான் வீடு திரும்ப எண்ணுகிறேன்… எனது வீட்டிலுள்ள பார்லி மற்றும் தானியங்களில்… பயமில்லாமல் சுகமாக உண்ணவே விரும்புகின்றேன்… இங்கு சர்க்கரையும், பாலாடைக்கட்டிகளும்… மரணபயத்தைத் தருகின்றன… போதும்…
VOICEOVER: கிராமத்து எலி… தனது வீட்டுக்கே சென்று திருப்தியுடன் வாழத் தொடங்கியது…
VOICEOVER: இந்த கதைமூலம்… என்ன சொல்கிறார்கள் புரிகிறதா குழந்தைகளே… இருப்பதைக் கொண்டு… திருப்தியுடன் வாழுங்கள்… பேராசை கொள்ள வேண்டாம்… இந்த கதையின் நீதி என்னவென்றால்… நிறைவான மனதுடன்… வளமாக வாழ்வோம்…