Moral Stories - Tamil
ஜாதகக் கதைகள் – பறவைகளின் புதிய அரசன்
தற்பெருமை தாழ்வையே தரும் எனவே தற்பெருமையை விட்டு விடுங்கள் தற்பெருமை இருந்தால் உங்களை யாருக்கும் பிடிக்காது இந்த கதையின் நீதி என்னவென்றால்… அகங்காரம் அழிவையே தரும்…

மரம்கொத்தி, ஆமை, மான், வேடன், VOICEOVER…
VOICEOVER: முன்பொரு காலத்தில்… பறவைகளின் காடு… கொடுவாள் மூக்கன் என்ற பறவையால் ஆளப் பட்டது… மற்றவருடைய சம்மதம் பெறாமலேயே… தன்னை காட்டின் அரசனாக அறிவித்துக் கொண்டது..
VOICEOVER: மிகவும் கொடிய நியாயமற்ற முறையில்… ஆட்சி செய்தது… காரணம் இல்லாமல் குற்றம் செய்யாத சிறு பறவைகளை திட்டித் தீர்த்தது…
VOICEOVER: எனவே எல்லா பறவைகளும் இதனை விரும்பாமல்.. ஒரு புதிய அரசனை தேர்வு செய்ய எண்ணின…
VOICEOVER: ஒருநாள் கொடுவாள் மூக்கன் அறியாத வண்ணம்.… ரகசியமான கூட்டம் ஏற்பாடாகியது.. பல பறவையினங்கள் கூடின… தங்களது பிரச்சினைகளை அவை விவாதித்தனர்… ஒருவரும் அரசனாக கொடுவாள் மூக்கனை விரும்பவில்லை… கொடுமைகளை செய்ததால் வெறுத்து ஒதுக்கின… பெயர்கள் பல ஆலோசிக்கப் பட்டு… இறுதியாக ஒரு வானம்பாடியை அரசனாக்கத் தீர்மானம் செய்தன…
VOICEOVER: எல்லா பறவைகளுமே… வானம்பாடியின் கனிவுடன் மரியாதை தரும் குணத்தைப் போற்றின… வானம்பாடியும் அவற்றை ஏற்று சம்மதித்தது… ஆனால் இதில் ஒரு சிக்கல் இருந்தது…
VOICEOVER: இந்த செய்தியை எவ்வாறு கொடுவாள் மூக்கனிடம் சொல்வது… யார் அந்த செய்தியை கொண்டு சென்றாலும்… கொல்லப் படுவது நிச்சயம்…
ஆந்தை: இந்த சிக்கலைப் பற்றிய கவலையை விடுங்கள்… நான் ஒரு திட்டம் போட்டு உள்ளேன்… எனது திட்டத்தை நிறைவேற்ற… எனக்கு மரம்கொத்தியாரின் உதவி தேவைப் படுகிறது… நீங்கள் என்னை நம்பினால் இதை செயல் படுத்த இயலும்…
VOICEOVER: எல்லா பறவைகளும் அதை ஏற்றுக் கொண்டன… மரம்கொத்தியும் உதவுவதாக வாக்களித்தது… ஆந்தை மரங்கொத்தியை அழைத்துக் கொண்டு… ஒரு வலுவான மரத்தின் கிளையைக் காட்டி…
ஆந்தை: இதனை மெல்ல அலகால் கொத்திவிடு….. கடைசியாக ஓரிரு கொத்தில் கிளை விழக்கூடிய நேரத்தில்… கொத்துவதை நிறுத்தி வை..
VOICEOVER: மரம்கொத்தியிடம் அறிவுறுத்திய ஆந்தை… கொடுவாள் மூக்கனிடம் சென்றது…
ஆந்தை: மரம்கொத்தியிடம் அறிவுறுத்திய ஆந்தை… கொடுவாள் மூக்கனிடம் சென்றது…
VOICEOVER: எல்லாப் பறவைகளையும் காணாமல் தவித்த கொடுவாள் மூக்கன்… ஆந்தையைக் கண்டதும்… கொடுவாள்மூக்கன்: இன்று எல்லோரும் எங்கே போனார்கள்… என்னை கவனிக்க ஒருவரும் இங்கு இல்லையே.. ஆந்தை: அரசே… உங்கள் திறமையை வலிமையைக் காட்ட… எல்லா பறவைகளும் விரும்புகின்றன… ஒருமரக்கிளையை நீங்கள் கொத்தி வீழ்த்தினால்… உங்களை பலமும் சக்தியும் கொண்டவர்களாக ஏற்பார்களாம்… நீங்கள் தவறினால்… யார் அந்த செயலை செய்பவரோ… அவரே அரசராக்கப் படுவார்…
VOICEOVER: கொடுவாள் மூக்கன் தற்பெருமையோடு தன்னையே பார்த்துக் கொண்டது…
கொடுவாள்மூக்கன்: மரக்கிளையை வீழ்த்துமளவுக்கு பலசாலி நான்… போட்டி நடக்கும் களத்துக்கு என்னை அழைத்து செல்… மரக்கிளையை நான் வீழ்த்துகின்றேன்…
ஆந்தை: ஆகட்டும் அரசே…
VOICEOVER: ஆந்தை கொடுவாள் மூக்கனை போட்டி நடக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றது…
காட்டிலுள்ள எல்லா பறவைகளும் அங்கு தான் காத்திருந்தன…
ஆந்தை பலமான ஒரு கிளையை காட்டி…
ஆந்தை: அரசே… இது போட்டிக்காக நீங்கள் வீழ்த்த வேண்டிய கிளை…
VOICEOVER: கொடுவாள் மூக்கன் தான் நிச்சயம் வெல்வோம் என்ற எண்ணத்துடன், தன் அலகால் மரத்தைக் கொத்தத் தொடங்கியது…
நீண்டநேரம் ஆகியும் ஒரு சிறுஅளவு கூட சேதம் செய்ய முடியாமல்… சோர்வடைந்தது…
ஆந்தை: அரசே உங்களுக்கான காலக்கெடு முடிந்தது… உங்களால் இயல வில்லை…
அடுத்த போட்டியாளர்… வானம்பாடி… அது உடைத்து எறியுமானால் அரசராவது நிச்சயம்…
கொடுவாள்மூக்கன்: என்னால் முடியாத ஒன்றை, இந்த சிறிய பாடும் பறவை செய்துவிட முடியுமா என்ன… VOICEOVER: ஆந்தை வழிகாட்ட… வானம்பாடி… மரங்கொத்தியால் துளைக்கப் பட்ட… வேறொரு மரக்கிளையை அடைந்தது… ஒருமுறை கொத்தவேண்டியது தான் பாக்கி… வானம்பாடி தனது அலகால் இரண்டு முறைக் கொத்த.. மரக்கிளை முறிந்து கீழே விழுந்தது…
VOICEOVER: எல்லோரும் வானம்பாடியே எங்கள் அரசன் என்று முழக்கமிட்டபடியே கூவினார்கள்…
VOICEOVER: கொடுவாள் மூக்கனோ வெட்கித் தலைகுனிந்து… காட்டைவிட்டு வெகுதூரம் சென்றது… மீண்டும் தன் அது முகத்தைக் காட்டவே இல்லை… கனிவும் பெருந்தன்மையும் கொண்ட வானம்பாடி… தன்னை அரசனாக்கியதற்காக நன்றி சொன்னது… தனிப் பட்ட முறையில் ஆந்தைக்கும் மரங்கொத்திக்கும் நன்றி சொன்னது…
VOICEOVER: எல்லாப் பறவைகளையும் அரசனாய் நன்கு ஆண்டது…
VOICEOVER: குழந்தைகளே தவறு எங்கே என்று புரிகிறதா… தற்பெருமை தாழ்வையே தரும்… எனவே தற்பெருமையை விட்டு விடுங்கள்… தற்பெருமை இருந்தால் உங்களை யாருக்கும் பிடிக்காது… இந்த கதையின் நீதி என்னவென்றால்… அகங்காரம் அழிவையே தரும்…