Connect with us

Moral Stories - Tamil

ஜாதகக் கதைகள் – புத்தியுள்ள பெண் ஆடு

துன்பமான நேரங்களில்… தெளிவான சிந்தனையோடு தெளிவாக.. முடிவு எடுக்கத் தெரிய வேண்டும்

ஜாதகக் கதைகள் – புத்தியுள்ள பெண் ஆடு PR042 01

புத்தியுள்ள பெண் ஆடு

காட்சி-1

பெண்ஆடு, ஆண் நரி, பெண் நரி, VOICE OVER

VOICE OVER: ஒரு சமயம் ஒரு அடர்ந்த காட்டு குகையின் அருகே…. சில ஆடுகள் வசித்து வந்தன… தினமும் அவை குகையின் அருகே… வளர்ந்திருந்த பசுமையான புல்லை மேய்ந்தன…

VOICE OVER: நன்கு பசுமையாக வளர்ந்திருந்த புற்கள்… ஆண்டு முழுவதும் ஆடுகளுக்கு அவை இரையாக உபயோகமானது…ஆடுகளும் அவைகளை தின்று கொழுத்து வளர்ந்திருந்தன…

VOICE OVER: ஒரு நாள் ஒரு நரியும், அதன் மனைவியும் ஆட்டு மந்தை அருகே சென்று பார்த்தன… பார்த்த மாத்திரத்தில்… நரிகளுக்கு ஆனந்தம் உண்டானது… ஆடுகளோ மேய்வதில் கருத்தாய் இருந்தது… நரியோ பாய்ந்து ஆடு ஒன்றை கவ்விட துடித்தது… ஆனால் மனைவி நரி…அதை தடுத்து நிறுத்தியது..

பெண்நரி: அதிகம் ஆவல் காட்டாதே… நாம் மந்தை அருகே இருப்பதை அவை அறிந்தால்… அவை ஓடி விடும்… ஏதாவது ஆடு நம் அருகே வரும் வரை… காத்திருப்போம்… பிறகு ஒவ்வொன்றாய் கொள்வது.. நமக்கு எளிது… ஒரு நாளைக்கு ஒன்று…

VOICE OVER: உடனே ஆண் நரி..

Advertisement

ஆண்நரி: ஆஹா… இது நல்ல யோசனை… அப்படியே செய்யலாம்

VOICE OVER: என்றது… சிறிது நேரம் ஆனதும், அந்த வழியே வந்தது ஒரு ஆடு… உடனே அதை தாக்கியது நரிகள்… பாவம் அந்த ஆடு… கத்தவும் முடியாமல், மற்றவர்களையும் எச்சரிக்கை செய்ய முடியாமல்… இறந்து போனது… அன்று நரிக்கும், அதன் மனைவிக்கும் நல்ல விருந்து கிடைத்தது… அது முதலாகவே நரியும் அதன் துணையும், மந்தைக்கு வருவதும்… ஆடுகளை கொன்று தின்பதுமாக இருந்தது… அவர்களின் வாழ்வு மிக வசதியானதாய் இருந்தது…

VOICE OVER: மெதுவாக நாட்கள் நகர்ந்தன… ஆடுகளின் எண்ணிக்கை… குறைந்து வந்தது… இறுதியில் ஒரு பெண் ஆடு மட்டும் உயிரோடு இருந்தது… புத்திசாலியான அந்த பெண் ஆடு… தன்னோடு இருந்த அத்தனை ஆடுகளும்… நரிகளால் கொல்லப் பட்டு விட்டதை… அறிந்திருந்தது… மிகவும் எச்சரிக்கை உணர்வுடன்… குகையை விட்டு வெளியே செல்லாமல் இருந்தது… மேய்ச்சலுக்கு செல்லவும் இல்லை… ஆனால் குகை அருகில் வளர்ந்திருந்த புற்களை மட்டும்… மேய்ந்து தன் பசியை போக்கிக் கொண்டது…

VOICE OVER: இதற்கிடையில் ஆடுகளை தின்று வந்த நரிகள்… இனிமேல் ஆடுகள் ஏதும் இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்தது… வேறிடத்திற்கு சென்று தங்களுக்கான உணவை தேட முடிவு செய்தன… அப்படி முடிவெடுத்து செல்லும் வழியில் குகையருகே பெண் ஆடு மேய்வதைக் கண்டு பதுங்கின..

VOICE OVER: பெண் ஆடும் நரிகளைக் கண்டதும்… குகைக்குள் ஓடிப் பதுங்கிக் கொண்டது…

VOICE OVER: பல நாட்கள் வெளிவராமல்… உள்ளேயே வளர்ந்த புற்களைத் தின்று பசியாறியது…

VOICE OVER: பலநாட்கள் காத்திருந்த நரிகளால்… பெண் ஆடை தொட முடியவில்லை.. கடைசியில் இரண்டும்… ஒரு திட்டம் தீட்டியது… பெண் நரி குகை வாயில் வரை சென்று… உரக்கப் பேசியது…

பெண்நரி: இனிய தோழியே… உன்னை தோழியாக்கிக் கொள்ளவே வந்தேன்… நான் மிகவும் தனிமையில் உள்ளேன்… எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை… எனது ரகசியங்களை பங்கிட ஆள் இல்லை… உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்… நீ என் தோழியாய் இரு… என்னுடன் உனது துன்பங்களையும், சந்தோஷங்களையும் பரிமாறிக் கொள்ளலாம்… எனக்குத் தெரியும் நீ என்னை வெறுப்பாய் என்று .. ஏன் என்றால் எனது கணவர் மிகக் கொடூரமானவர்… எனது கணவர் தவறுகளுக்கு இப்போது வருந்துகின்றார்… தற்போது திருந்தி வழிமாற நினைக்கின்றார்… எந்த உயிருள்ள இனங்களையும்… கொள்வதில்லை என்று உறுதி பூண்டுள்ளார்… நாங்கள் பசும்புல், தாவரங்கள் என்று மாறி விட்டோம்… இன்று பகல் உணவினைத் தர மிகவும் விரும்புகின்றார்… உன்னை வரவேற்கவே என்னை இங்கு அனுப்பி உள்ளார்… தயவு செய்து மறுக்காதே…

Advertisement

VOICE OVER: பெண் ஆடு குகைக்குள்ளிருந்து பதில் சொன்னது…

பெண்ஆடு: இது தான் அழைப்பு என்றால்… நான் நிச்சயம் பகல் உணவுக்கு வருகின்றேன்… ஆனால் இங்கு சில விருந்தாளிகள் வந்து உள்ளார்கள்… நகரத்திலிருந்து வந்து இங்கு என்னோடு தங்கி உள்ளார்கள்… அவர்களையும் என்னோடு அழைத்து வர விரும்புகின்றேன்… உங்களால் பகல் உணவை தந்து எங்களை சமாளிக்க முடியுமா…

VOICE OVER: பெண் நரி மேலும் பல ஆடுகள் உள்ளே இருப்பதாக கருதியது.. அது பெண் ஆட்டிடம்…

பெண்நரி: யார் அவர்கள்… எத்தனை பேர் உள்ளார்கள்…

பெண்ஆடு: எனது ஒன்று விட்ட சகோதர சகோதரிகள்… அவர்கள் எல்லோரும் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள்…

VOICE OVER: நரியும் அதன் துணைவியும் நாய்கள் என்றதும்.. நடுங்கிப் போயின… அவைகள் காட்டின் வேறொரு பகுதிக்கு குடிபெயர…தீர்மானித்தன… அங்கிருந்து இருவரும் ஓட்டம் பிடித்தனர்… மீண்டும் திரும்பும் எண்ணம் அவர்களுக்கு இல்லை… பெண் ஆடு அந்த குகையிலேயே வசித்தபடி… குட்டிகளை ஈன்றெடுத்து… தனது குடும்பத்தை உருவாக்கிக் கொண்டது…

VOICE OVER: எனது குழந்தைகளே… நீங்கள் பார்த்தீர்கள்… ஆட்டின் அறிவுத் திறமையை… அது போல் தான் ஆபத்தான தருணங்களில்… நீங்களும் அறிவோடு நடக்க முற்பட வேண்டும்… நீங்கள் துன்பப் பட மாட்டீர்கள்… இந்த கதையின் நீதி என்னவென்றால்… துன்பமான நேரங்களில்… தெளிவான சிந்தனையோடு தெளிவாக.. முடிவு எடுக்கத் தெரிய வேண்டும்…

 

Advertisement
Continue Reading
Advertisement