Connect with us

Moral Stories - Tamil

ஜாதகக் கதைகள் – பேராசை காகம்

பேராசை கொள்ளக் கூடாது

புறா,காகம், VOICEOVER…

VOICEOVER: முன்னொரு காலத்தில் கருணை உள்ளம் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்த ராஜ்ஜியத்தில்… அவர்கள் தங்கள் வீடுகளில் பறவைகளும் பாதுகாப்புடன் அமைதியாக வாழ்ந்திட சிறு வீடுகளை ஏற்படுத்தி தந்தனர்…

VOICEOVER: பறவைகளும் அவற்றில் நன்றியுடன் அமைதியாக வாழ்ந்து வந்தன… கருணை உள்ளம் கொண்ட மக்களுக்கு… எவ்வித துன்பமும் தராமல்… அங்கு வசித்து வந்தன பறவைகள்…

VOICEOVER: அந்த சமயத்தில்… ஒரு உன்னத மனம் கொண்டவரின் மாளிகையில்… பறவைகளுக்காக உருவாக்கிய சிறு வீட்டில்… புறா ஒன்று வசித்து வந்தது… காலையில் அது வெளியே பறந்து சென்று… இங்கும் அங்கும் அலைந்து திரிந்து… தானியங்கள் மற்றும் பல உணவுகளை உண்டு மகிழ்ந்தது… மாலையில் தனக்காக உருவாக்கப் பட்ட வீட்டுக்கு… திரும்பி வந்து தங்கியது…

VOICEOVER: அதே ராஜ்ஜியத்தில் ஒரு காகம் வசித்து வந்தது… அது புறா மற்றும் மற்ற பறவைகளைப் போல் அல்லாமல்… தந்திரகுணமும்… நம்பிக்கை துரோகமும் செய்யும் மனம் கொண்டதாய் இருந்தது… எப்போதும் ஏதாவது… குறும்பினை செய்யும் எண்ணம் கொண்டிருந்தது…

VOICEOVER: ஒரு நாள் ஒரு புறா தனது கூட்டிலிருந்து வெளியே பறந்து செல்வதை கண்டது… அது தனக்குள்ளேயே இவ்வாறு கூறியது…

காகம்: இந்த புறாவை நாம் நண்பனாக்கிக் கொண்டால்… இது வசிக்கும் மாளிகைக்குள்… நாம் செல்வது சுலபமாகி விடும்… அங்கு சமையலறையில் விதவிதமான… பதார்த்தங்கள் தயாராகும்.. அவ்வப்போது அவற்றில் ஒரு சிறு துண்டை திருடித் தின்றால்… நன்றாக இருக்கும்… நிச்சயம் அவர்கள் அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள்…

VOICEOVER: அன்று முதல் அந்த புறாவை பின் தொடர்ந்து… காகமும் பறந்து வந்தது… தன்னை பின் தொடர்ந்த காகத்திடம்…

Advertisement

புறா: ஏன் என்னை பின் தொடர்ந்து வருகிறாய்…

காகம்: நான் பார்க்கும் பறவைகளில்… மிக நல்லவன் நீ… உன்னை தினமும் பின் தொடர்வதால்… உன்னிடமுள்ள நல்ல குணங்களை… நானும் கற்க முடியும்…

புறா: உண்மையிலேயே என்னிடம் நீ எதாவதுகற்றுக் கொள்ள நினைத்தால்… என்னுடைய வீட்டிற்கே வந்து… சில நாட்கள் என்னுடன் தங்கி… இருந்து கற்க முடியும்… உன்னை எச்சரிக்கை செய்கிறேன்… நீ உன் பழைய சேட்டைகளைக் காட்ட நினைத்தால்… மிகப்பெரும் துன்பத்திற்கு ஆளாவாய்… என்னுடைய எஜமானர் நல்லவர்… கருணை உள்ளம் படைத்தவர் தான்.. ஆனால்… திருடர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்…

காகம்: கவலைப் படாதே நண்பா… ஒரு போதும் நான் தவறு செய்ய மாட்டேன்…

புறா: சரி வா போகலாம்…

VOICEOVER: அன்று மாலையே… காகத்தை தன்னுடன்… அழைத்து சென்றது புறா…

VOICEOVER: தனது வீட்டின் அருகே இருந்த சமையலறையில் வித விதமான பதார்த்தங்கள் தயாராவதைக் கண்டது காகம்…

VOICEOVER: மறுநாள் காலையில் புறா வெளியே புறப்பட தயாரானது… அதைக் கண்ட காகம்…

Advertisement

காகம்: இன்று எனக்கு உடல் நலமில்லை.;. இங்கேயே தங்கி ஓய்வெடுத்து… நலமான பின்… நான் உன்னோடு சேர்ந்து கொள்கிறேன்…

புறா: சரி நான் புறப்படுகிறேன் நண்பா.. நீ உன்னை நன்றாக கவனித்துக்கொள்…

VOICEOVER: சமையலறைக்குள் விதவிதமான உணவு வகைகள் தயாராவதை பேராசையுடன் பார்த்துக் கொண்டிருந்தது காகம்…

VOICEOVER: மீன் கறியை சுவைக்கக் காத்திருந்தது… சமையற்காரன் அடுப்பில் பாத்திரத்தை வைத்து… மீன் கறியை அள்ளிப்போட்டான்… பின் அருகே இருந்த காய்கறி தோட்டத்திற்கு சென்று… காய்களைப் பறிக்கத் தொடங்கினான்… இந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த காகம்… சடாரென்று பறந்து… ஜன்னல் வழியாக புகுந்து… ஒரு மீன் துண்டை கவ்விப் பறக்க எத்தனித்தது… அருகில் இருந்த பீங்கான் ஜாடி… சிறகுகள் பட்ட வேகத்தில் படார் என்ற பெரிய சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது…

VOICEOVER: சத்தம் கேட்டு ஓடி வந்த சமையற்காரன் காகத்தைப் பிடித்து அதன் இறக்கைகளில் இருந்து… இறகு பிய்த்தெடுத்து… காகத்தை தோட்டத்துக்கு வெளியே… வீசி எறிந்தான்… ஒருவன் பேராசை கொள்ளவே கூடாது… பேராசை தாழ்வையே தரும்…

VOICEOVER: குழந்தைகளே… காகத்தின் நிலைமையைப்பார்த்தீர்களா…. இந்த கதையிலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்… பேராசை கொள்ளக் கூடாது… என்பது தான் இந்தக் கதையின் நீதியாகும்,..

Continue Reading
Advertisement