Connect with us

Moral Stories - Tamil

ஜாதகக் கதைகள் – மரம்கொத்தியும்,ஆமையும்,மானும்

நல்ல நண்பர்களைப் பெற்று இருப்பது நன்மையே கொடுக்கும் ஆபத்தில் உதவுபனே… ஆத்ம நண்பன் ஆவான்…

ஜாதகக் கதைகள் – மரம்கொத்தியும்,ஆமையும்,மானும் PR042 02

மரம்கொத்தியும்,ஆமையும்,மானும்

மரம்கொத்தி, ஆமை, மான், வேடன், VOICEOVER…

VOICEOVER: ஒரு அடர்ந்த காட்டில் மானும் ஆமையும் ஒரு மரம் கொத்தியும் நல்ல நண்பர்களாக வசித்து வந்தனர்… அவர்கள் எப்பொழுதும் ஒன்றாகவே காணப்பட்டார்கள்…

VOICEOVER: ஒருநாளின் பெரும்பொழுதை ஏரிக்கரையின் அருகிலே… பேசுவதிலும் விளையாடுவதிலுமே… கழித்து வந்தார்கள்… ஒரு நாள் ஒரு வேடன் அங்கு வந்து… வலையொன்றை விரித்து… ஏரிக்கரையின் புதர்களுக்குள்… புகுந்து மறைந்து கொண்டான்…

VOICEOVER: தற்செயலாக அங்கு வந்த மான்… அந்த வலைக்குள் சிக்கிக் கொண்டது… வலியில் துடித்த அந்த மான்… தன் நண்பர்களை உதவிக்கு அழைத்தது…

மான்: நான் வலையில் மாட்டிக் கொண்டேன்… என்னைக் காப்பாற்றுங்கள்…

VOICEOVER: மானின் கூக்குரல் கேட்ட

VOICEOVER: தங்களின் நண்பனான மான் வலைக்குள் சிக்கித் தவிப்பது கண்டு… மிகவும் வருந்தினார்கள்… ஒரு திட்டம் போட்டார்கள் இருவரும்…

Advertisement

VOICEOVER: ஆமை உடனே ஒரு வளையில் வசித்த எலியை அழைத்து வந்தது.. எலியும் ஆமையும் வேடனின் வலையை… கடித்து நாசப்படுத்த தொடங்கின…

VOICEOVER: இதே நேரத்தில் மரங்கொத்தி வேகமாய் பறந்து சென்று… வேடனின் குடிசையை நெருங்கி வந்தது…

VOICEOVER: மானின் குரலைக் கேட்டு வெளியே வந்து கொண்டிருந்த வேடனின் தலையை… தனது கூரான அலகுகளால்… இரு முறை தாக்கியது…

வேடன்: ஆ… ஆ….

VOICEOVER: வலியால் துடித்தான் வேடன்… மரங்கொத்தியின் தாக்குதலால் நிலைகுலைந்த வேடன்… தன் குடிசைக்குள் ஓடி ஓய்வெடுக்கத் தொடங்கினான்…

VOICEOVER: மரங்கொத்தி மானை நோக்கி… விரைந்து பறந்து வந்தது… மரங்கொத்தியின் எண்ணம் ஈடேறியது…எலியும் ஆமையும்… வலையைப் பிய்த்து… மானை விடுதலை செய்தது… மூன்று நண்பர்களும் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்… மிகவும் சந்தோஷமாக காட்டில் அலைந்து திரிந்தனர்…

VOICEOVER: என் இனிய நண்பர்களே… என்ன கற்றுக் கொண்டீர்கள் இந்த கதை மூலம்… நல்ல நண்பர்களைப் பெற்று இருப்பது… நன்மையே கொடுக்கும்… ஆபத்தில் உதவுபனே… ஆத்ம நண்பன் ஆவான்…

Advertisement
Continue Reading
Advertisement