Moral Stories - Tamil
ஜாதகக் கதைகள் – முட்டாள் சீடர்கள்
பெரியோர் அறிவுரையைக் கேட்டு… நடந்து கொள்ளுங்கள்… உங்கள் சக்தியை ஆக்க பூர்வமாக செலவழியுங்கள்… ஒரு போதும் தீய செயல்களை செய்ய… உங்கள் சக்தியை உபயோகப் படுத்தாதீர்கள்

முட்டாள் சீடர்கள்
முனிவர், சீடர்கள் – 5 பேர், VOICEOVER
VOICEOVER: ஒரு மகா முனிவருக்கு… சீடர்கள் பலர் இருந்தனர்… முனிவர் பெருமைப் படும் விதத்தில்… சீடர்கள் கற்பதில் ஆவலுடனும்… கற்றதில் ஞானமுடனும் விளங்கினர்…
VOICEOVER: ஒரு நாள் அவர் தான் கற்றது முழுவதையும்… கற்பித்து விட்டதை உணர்ந்தார்… இப்போது அவர்கள் முழுமையாக கற்றவர்கள் ஆகி விட்டனர்… இறந்தவரை உயிர்ப்பித்து எழுப்பும் மிருத்யும்ஜெய எனும் முக்கியமான மந்திரத்தை மட்டும்… இன்னும் கற்றுத்தராமல் இருந்தார்… மிகுந்த பலனளிக்கக் கூடிய மந்திரம் என்றும்… அதை கற்றவர் ஞானமில்லாதவராய் இருப்பின்… அதனால் ஏற்படக்கூடிய பேராபத்தையும் உணர்ந்திருந்தார்…
VOICEOVER: ஞானியான முனிவர்… நீண்ட நாள் இதைப் பற்றி சிந்தனை செய்த படி இருந்தார்… இதை ரகசியமாக இதுநாள் வைத்திருந்த அவர்… கற்றுத் தராமல் இருந்தால் தன்னுடைய காலத்தோடு… அம்மந்திரம் பயன்படாமல் போகும் என்பதை உணர்ந்து… தனது புத்திசாலியான சீடனை அழைத்து…
முனிவர்: சீடனே… மிகச் சிறப்பான மந்திரம் ஒன்றை சொல்லித் தருவேன்… நீ இதை உச்சாடனம் செய்தால்… இறந்த மனிதரோ அல்லது பிராணியோ… உயிர் பெற்று எழும்… இதை தேவையான நேரத்தில் உச்சாடனம் செய்ய வேண்டும்… ஒருபோதும் தவறாகவோ… சோதிக்கவோ செய்து…இதன் பலனை வீணடிக்காதே…
VOICEOVER: மறுநாள் காலை தனது எல்லா சீடர்களையும் அழைத்துச் சொன்னார்…
முனிவர்: காட்டிற்குள் ஒரு நாற்பது நாட்களுக்கு உங்கள் எல்லோரையும் அனுப்பி வைக்கின்றேன்… நீங்கள் ஒன்றாக சென்று ஒன்றாகவே திரும்ப வேண்டும்…நீங்கள் ஒருவருக்கொருவர்… உதவியாக வழிகாட்டியாக… இருந்து நல்லதையே செய்யுங்கள்…
சீடர்கள்: ஆகட்டும் குருவே…
VOICEOVER: சீடர்கள் அனைவரும் ஒன்றாக… காட்டிற்குள் சென்றார்கள்.. ஒற்றுமையாக இருந்தனர்… அந்த புத்திசாலியான சீடன்… மற்றவர்களை காட்டிலும் தான் ஞானமுள்ளவன் என்பதை உணர்த்த விரும்பினான்… அவர்கள் மேலும் காட்டிற்குள்… சிறிது தூரம் நடந்ததும்… ஒரு இறந்து போன புலியின் சடலத்தைக் கண்டார்கள்..
VOICEOVER: பயங்கரமான பெரிய உருவம் கொண்ட புலி… அது இறந்து கிடந்தது… சீடன் – 1: நான் இப்போது ஆசிரியர் எனக்கு மட்டும் சொல்லித்தந்த… உயிர்ப்பிக்கும் மகா மந்திரத்தை சொல்லி… எப்படி இறந்தவர்களை உயிரோடு எழுப்புவது என்பதை உங்களுக்குக் காட்டுவேன்… இந்த புலியினை உயிரோடு எழுப்பிக் காட்டி… நிரூபணம் செய்வேன்…
சீடன் – 2: உங்களை நிரூபிப்பதற்காக இந்த செயலை செய்யாதீர்கள்… மேலும் புலி உயிரோடு எழுந்தால்… நிச்சயம் நாம் அனைவரும் கொல்லப் படுவோம்… இது சரி அல்ல… இது முறையும் அல்ல…
VOICEOVER: இறந்து போன புலியின் முன்பாக அமர்ந்து… புத்திசாலியான சீடன்… மந்திர உச்சாடனம் செய்யத் தொடங்கினான்…
VOICEOVER: மற்றவர்கள் மரங்களின் உச்சியில் ஏறி… பதுங்கத் தொடங்கினார்கள்…
VOICEOVER: மிக முக்கியமான மிருத்யுஜய மந்திரத்தை உச்சரித்தான்… முதலில் ஒன்றும் நிகழவில்லை… மெல்ல மெல்ல புலியின் சுவாசம் கேட்டது… புலி கண்களைத் திறந்தது… தனக்கு முன் ஒரு மனிதன் தாவிக் குதிப்பதையும் கண்டது… புலி பாய்ந்து சீடனை தாக்கி…கொன்றது…
VOICEOVER: சிறிது நேரம் சென்றபின்… மற்ற சீடர்கள் இறங்கி வந்து… இறந்த சீடனைத் தூக்கிக் கொண்டு… குருவின் இருப்பிடம் சென்றார்கள்…
முனிவர்: என்ன ஆயிற்று இவனுக்கு…
சீடன் – 2: குருவே இறந்த புலிக்கு உயிர் கொடுத்தான்… அவன் அந்த புலி அடித்து மாண்டான்…
VOICEOVER: உயிர் கொடுக்கும் மந்திரத்தை முனிவர் சொல்ல… சீடன் உயிர் பெற்று எழுந்தான்…
சீடன்-1: குருவே என்னை மன்னியுங்கள்…
முனிவர்: சீடனே சக்தியை தவறாக பயன்படுத்தினால் உண்டாகும் விளைவை அறிந்தாயா…
சீடன் – 2: உணர்ந்தேன்… இனி எப்போதும்… நல்லவற்றுக்கே பயன்படுத்துவேன்…
முனிவர்: இது உங்கள் எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்… இப்போது இந்த மந்திரத்தை எல்லோருக்கும் கற்றுத் தருகின்றேன்…
VOICEOVER: மந்திரத்தைக் கற்றுத்தந்த முனிவர்… எல்லோரையும் நன்மை செய்ய உலகிற்கு அனுப்பி வைத்தார்… நிச்சயம் தவறு செய்யமாட்டார்கள்… சீடர்கள் அறிவோடு செயலாற்றுவார்கள் என்று… உறுதியாக நம்பினார்…
VOICEOVER: குழந்தைகளே பார்த்தீர்களா… எப்பொழுதெல்லாம் நீங்கள் சக்தி படைத்தவர்களாக இருக்கின்றீர்களோ… அறிவுடன் செயலாற்றுங்கள்… தன்னிச்சையாக செயல்படாமல்… பெரியோர் அறிவுரையைக் கேட்டு… நடந்து கொள்ளுங்கள்… உங்கள் சக்தியை ஆக்க பூர்வமாக செலவழியுங்கள்… ஒரு போதும் தீய செயல்களை செய்ய… உங்கள் சக்தியை உபயோகப் படுத்தாதீர்கள்… இதுவே.. இந்த கதையின் நீதியாகும்…