Connect with us

Moral Stories - Tamil

ஜாதகக் கதைகள் – முயலின் கனவு

நீங்கள் எதையும்… கண்மூடித்தனமாக நம்பக் கூடாது… அது என்ன… ஏன்… எப்படி என்று ஆராய்ந்து பார்க்க… கற்றுக் கொள்ளுங்கள்

ஜாதகக் கதைகள் – முயலின் கனவு PR042 05

முயலின் கனவு

காட்சி-01 முயல்,சிங்கம், VOICEOVER…

VOICEOVER: ஒரு நல்ல வெயிற்கால பகல் பொழுதில்… ஒரு முயல்

தென்னை மரம் ஒன்றின் நிழலில் படுத்துறங்கியது…

VOICEOVER: பகலில் நிறைய கேரட்டுகள் சுவைத்து பகல்

உணவாக்கியது… குறட்டையுடன் ஆழ்ந்த உறக்கத்தில் விபரீதமான கனவு ஒன்றைக் கண்டது…

Advertisement

VOICEOVER: இந்த உலகமே நொறுங்கிப் பொடிப் பொடியானது…

திடீரென்று ஒரு கூரிய சத்தம்… கனவுகண்டபடி மரத்தடியில் படுத்திருந்த முயலின் பக்கத்தில்… காய்ந்த தேங்காய் ஒன்று விழுந்தது…

VOICEOVER: சடாரென்று எழுந்த முயல் ஓலமிட்டது… காதில் விழுந்த

சத்தம் உண்மையிலேயே உலகம் பொடிப் பொடியானதாக கருதி… உலகம் அழியப் போவதாக… உரத்தக் குரலில் கூவியது… முயலின் இந்த கூக்குரலைக் கேட்டதும்… மற்ற விலங்குகளும் வந்து சேர்ந்து கொண்டு… உலகமே அழியப்போவதாக… ஒருமித்த குரலில் சத்தம் போட்டன…

VOICEOVER: கடைசியில் எல்லா மிருகங்களும்… காட்டின் நடுப்பகுதியை

Advertisement

வந்தடைந்தன… அங்கு தான் காட்டின் அரசனான சிங்கத்தின் வசிப்பிடம் இருந்தது…

VOICEOVER: சிங்கம் அப்போது தான் தனது உணவை முடித்து விட்டு…

உறங்கத் தொடங்கி இருந்தது…

\VOICEOVER: விலங்குகளின் கூப்பாடு சத்தம் அதன் தூக்கத்தை கலைத்து

விட்டது… உடனே குகையில் இருந்து வெளியே வந்து…

Advertisement

சிங்கம்: ஏன் இப்படி… கத்துகின்றீர்கள்… உங்களுக்கு பைத்தியமா

பிடித்தது…

யானை: அரசே… இந்த உலகம் அழியப் போகின்றது… அதுதான்…

நாங்கள் கதறி ஓடக் காரணம்…

சிங்கம்: என்ன உளறுகின்றீர்கள்… யார் சொன்னது அப்படி…

Advertisement

VOICEOVER: யானை உடனே கரடியையும், கரடி காட்டெருமையையும்,

கை காட்ட… ஒருவரை ஒருவர்… சுட்டிக் காட்டிக் கொண்டனர்… சிங்கமோ கோபமாக… யார் இந்த வதந்தியை பரப்பியது என்று அறிவதில் கவனமாய் இருந்தது… கடைசியில் மான் முயல் தான் இதை தொடங்கியது என்று சொல்ல…

நடுக்கத்துடன் சிங்கத்தின் முன் நின்றது முயல்…

சிங்கம்: எதனால் நீ உலகம் அழியப் போவதாக கருதுகின்றாய்…

சொல்…

Advertisement

முயல்: நா… நான்… தென்னை மரத்தடியில் உறங்கிய போது…

கனவில் ஒரு பெரும் சத்தம்… அதை வைத்து தான்…

VOICEOVER: சிங்கம் உடனே தெளிவுடன் எல்லா மிருகங்களையும்…

சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது…

சிங்கம்: இந்த சிறு முயல் மேலிருந்து விழுந்த தேங்காயின் சத்தத்தை

கேட்டு… அதிர்ந்து இந்த வதந்தியைப் பரப்பியுள்ளது… நீங்களும் அதை நம்பி விட்டீர்கள்… இனிமேலாவது வதந்திகளை நம்ப மாட்டேன் என்று… முடிவெடுங்கள்…

Advertisement

VOICEOVER: எல்லா மிருகங்களும்… வெக்கத்துடன் தலை குனிந்தபடி…

எதையும் இனிமேல் கண்மூடித் தனமாக நம்பக் கூடாது என முடிவெடுத்தன…

VOICEOVER: குழந்தைகளே.. மிருகங்கள் கண்மூடித்தனமாக…

வதந்தியை நம்பி ஏமாந்ததை… ஒரு சிறு முயலின் வார்த்தையை ஏமாந்தது தெரிகிறதா… இந்த கதையின் நீதி என்னவென்றால்… இனிமேல் நீங்கள் எதையும்… கண்மூடித்தனமாக நம்பக் கூடாது… அது என்ன… ஏன்… எப்படி என்று ஆராய்ந்து பார்க்க… கற்றுக் கொள்ளுங்கள்..

Continue Reading
Advertisement