Moral Stories - Tamil
ஜாதகக் கதைகள் – யானையும் நாயும்
உற்ற நண்பர்களுக்குள் பிரிவு ஏற்படாது… அப்படியே நிகழ்ந்தாலும்… அவர்கள் மீண்டும் இணைவது உறுதி… ஏனென்றால் நண்பர்களைப் பிரிந்து இருக்க முடியாதல்லவா…

யானையும் நாயும்
யானை,நாய், மன்னன்,மந்திரி, யானைப்பாகன், வழிப்போக்கன், முரசு அறிவிப்பவன், VOICEOVER
VOICEOVER: முன்னொரு காலத்தில் ஒரு அரசருக்கு சொந்தமான மாளிகை வளாகத்தில் யானை ஒன்று வசித்து வந்தது… அரசருடன் மிக.. மிக.. நெருங்கிய உறவு கொண்ட யானை… மிகவும் கவனமுடன் உணவளிக்கப் பட்டு.. பராமரிக்கப் பட்டு வந்தது…
VOICEOVER: அந்த மாளிகையின் அருகே… நாய் ஒன்று வசித்து வந்தது… அது மிகவும் பலவீனமாகவும்… எலும்பும் தோலுமாய் காணப்பட்டது… ஆயினும் அரண்மனையிலிருந்து… யானைக்காக செய்யப்படும் இனிப்பு சாதத்தின் மனம்… அதனை மிகவும் ஈர்த்தது…
VOICEOVER: ஒருநாள் அந்த நாயினால்… அரண்மனையிலிருந்து வெளிவரும் சாதத்தின் மனம்… மிகவும் ஈர்க்கவே… அதனால் தடுக்க முடியாத ஆவலுடன்… மெல்ல யானை வசிக்கும் கொட்டாரத்தில் நுழைந்தது…
VOICEOVER: தட்டு தட்டாய் சாதக் கவளங்களை கண்ட நாயோ… மெல்ல நகர்ந்து ஒரு கவளத்தை கவ்வி… ருசிப் பார்க்க துவங்கியது… யானை வேறு பக்கமாய் திரும்பியபடி… உயர்ந்த வகை… இனிப்பு சாதத்தின் கவளங்களை சுவைத்தபடி இருந்ததால், பல நாட்கள் இதை யானையும் கவனிக்கவே இல்லை…
VOICEOVER: ராஜ வம்சத்தின் உணவான படியால்.. நாய் நன்கு கொழுத்து… வளரத் தொடங்கியது…
VOICEOVER: ஒருநாள் இது யானையின் கவனத்திற்கு எட்டியது..
VOICEOVER: யானையும் நாயினுடைய வருகையையும், உறவையும் விரும்பி நட்புடன்… தினமும் ஒன்றாய் உணவருந்த தொடங்கியது… நண்பர்கள் இருவரும்… ஒன்றாக பொழுதைக் கழித்தனர்… ஒன்றாய் உணவுண்டு… உறங்கி எழுந்தனர்… விளையாடவும் செய்தார்கள்… ஒருவருக்கொருவர் பிரியாமல் மகிழ்வுடன் இருந்தனர்… மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகி… ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல்… இருந்து வந்தார்கள்…
VOICEOVER: ஒரு நாள் ஒரு வழிப் போக்கன்… இவர்கள் இருவரையும் ஒன்றாய் கண்டான்… யானைப் பாகனிடம்…
வழிப்போக்கன்: இந்த கொழுத்த நாய் எனக்கு வேண்டும்… என்ன விலை இது…
யானைப் பாகன்: தனக்கு சொந்தமில்லாத நாயை யானைப் பாகன்…நல்ல விலைக்கு விற்று விட்டு.. பணத்தைப் பெற்றுக் கொண்டான்…
VOICEOVER: அவன் தன் இருப்பிடத்திற்கு… அந்த நாயை கொண்டு சென்றான்… அவன் இருப்பிடம் வெகு தொலைவில் இருந்தது…
அரண்மனை யானை இந்த நிகழ்ச்சிக்கு பிறகு துக்கம் அடைந்தது…
தனது உயிர் நண்பனான நாயை பிரிந்த துக்கத்தில் வெறுப்புற்று… உண்ணவும், குடிக்கவும், குளிக்கவும், மறுத்துக் கிடந்தது…
இறுதியாக… இதனைக் கண்ட ஆனைப்பாகன்.. அரசருக்கு தகவல் தெரிவித்தான்… ஆனால் நாயைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லை…
விலங்குகளைப் பற்றி நன்கு அறிந்த மதியூகியான தனது அமைச்சரை அழைத்தான் அரசன்…
மன்னன்: மந்திரி அவர்களே… யானை கொட்டடிக்கு சென்று… யானையின் நிலைமையை ஆராய்ந்து என்னிடம் கூறும்…
VOICEOVER: யானை மிகவும் கவலையுடன் கொட்டடியில் இருப்பதைக் கண்டார் மதியூகியான அமைச்சர்.. யானையை உற்று நோக்கிய படி… ஆனைப் பாகனிடம்…
மந்திரி: யானையின் உடம்பில் எந்த அறிகுறியும் காணப்படவில்லை… பின் ஏன் இத்தனை சோர்வாக வாட்டத்துடன் காணப்படுகின்றது… யாரையோ பிரிந்த ஏக்கத்தில்… மிகவும்… மனவாட்டத்துடன் காணப்படுகின்றது… இந்த யானை யாரோடு நெருங்கிப் பழகியது… என்று தெரியுமா…
யானைப் பாகன்: இங்கு ஒரு நாய் ஒன்று நம் யானையுடன்.. உண்டு உறங்கி விளையாடி வருவது உண்டு…. அதை ஒரு வழிப்போக்கன் சிலநாட்களுக்கு முன்… கொண்டு சென்றான்…
மந்திரி: எங்கே அந்த நாய்…
யானைப் பாகன்: எனக்குத் தெரியாது…
மந்திரி: அரசே எனது கருத்துப்படி… நமது அரண்மனை யானை… ஒரு நாயின் பிரிவினால் தான்… வருத்தமாய் இருக்கின்றது…
மன்னன்: எங்கே இருக்கின்றது அந்த நாய்…
மந்திரி: யாரோ வழிப்போக்கன் கொண்டு சென்றதாக… யானைப் பாகன் சொன்னான்… போன இடம் தெரியவில்லை…
மன்னன்: எப்படி அதை அழைத்து வந்து எமது யானையை மகிழ்ச்சிப் படுத்துவீர்கள் சொல்லுங்கள்…
மந்திரி: அரசே… நாயை சிறைப் பிடித்தவர் யாராயினும்… அரச தண்டனையை அனுபவிக்க நேரும்… என்று ஆணையிடுங்கள்…
முரசு அறிவிப்பவன்: கேளுங்கள் கவனமாய்… எல்லோரும் கவனமாய்க் கேளுங்கள்… நாயை வைத்திருப்பவர் யாராயினும்… அவர்கள் அரசரின் தண்டனைக்கு… உள்ளாவீர்கள்… இது அரசரின் ஆணை…
VOICEOVER: அரசரின் ஆணையைக் கேட்டதும்… நாயை வாங்கியவன் மெல்ல அதனை கட்டிய கயிறுகளை அவிழ்த்து விட்டான்… கட்டுகளில் இருந்து விடுபட்ட நாய்… பாய்ந்து ஓடி… யானையின் கொட்டடிக்குள் சென்றது…
VOICEOVER: நாயைக் கண்ட யானை… மகிழ்ச்சியுடன் தனது தும்பிக்கையால் கட்டி அணைத்து.. அதனை தூக்கி தனது மேல் இருக்கும் படி செய்தது…
VOICEOVER: நாயின் வாலாட்டத்தைக் கண்ட யானையின் கண்களில்… மகிழ்ச்சி பொங்கியது… யானையின் மகிழ்ச்சியைக் கண்ட அரசனும்.. திருப்தி அடைந்தான்… மந்திரியின் மதியூகமான செயலை பாராட்டி… பரிசளித்தான்… யானையும் நாயும் எப்போதும் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தன…
VOICEOVER: குழந்தைகளே… என்ன புரிந்து கொண்டீர்கள் இந்த கதையிலிருந்து… யானையும் நாயும் எவ்வளவு நட்பாக இருந்தது பார்த்தீர்களா… நட்பைப் போல் ஓர் உயர்ந்த உறவு… இந்த உலகத்திலே இல்லை… உண்மையான நண்பர்கள்… என்றும் பிரிவதில்லை… இந்த கதையின் நீதி என்ன வென்றால்… உற்ற நண்பர்களுக்குள் பிரிவு ஏற்படாது… அப்படியே நிகழ்ந்தாலும்… அவர்கள் மீண்டும் இணைவது உறுதி… ஏனென்றால் நண்பர்களைப் பிரிந்து இருக்க முடியாதல்லவா…