Mythological Stories - Tamil
ராமாயணம் – இலங்கையை வென்ற ராமன்
ஜெய் ஸ்ரீராம்

இலங்கையை வென்ற ராமன்
காட்சி-1
VOICEOVER: இராவணன் தன் சகோதரனின் மரணத்தை கேட்டு அதிர்ச்சியில் மூழ்குகிறான்.. அவனுடைய கடைசி நம்பிக்கையான… தன் மகன் இந்திரஜித்தை… அவன் அழைக்கிறான்… இந்திரஜித் மாய சக்திகளை ஆட்கொண்டவன்… இந்திரஜித் போர்களத்தில் இறங்குகிறான்..
VOICEOVER: ஒரு வழியாக இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை ஏவி, போரில் லஷ்மணரை வீழ்த்தினார்…
VOICEOVER: ராமரும், வானரப் படையினரும் லஷ்மணனைக் கண்டு சோகத்தில் ஆழ்ந்தனர்… இதைக் கண்ட ஜாம்பவான் பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டு.. அனுமானை வரவழைத்தார்… இவர் அனுமானை இமயமலையில் இருக்கும் சஞ்சீவி மலைக்கு சென்று அனைவரையும் குணப்படுத்தக் கூடிய… நான்கு அற்புதமான மூலிகைகளை எடுத்துவரக் கூறினார்…
VOICEOVER: அனுமார் பூமியிலிருந்து எழுந்து வேகமாக பறக்க ஆயத்தமானார்… இமய மலைக்கு அவர் சென்றதும்… ஜாம்பவான் கூறியது போல அம்மலையினைக் கண்டார்… அவரால் மூலிகைகளை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை… அதனால் அந்த மூலிகைகள் இருந்த மலையை… வேறோடு பெயர்த்து… மூலிகைகளோடு சுமந்து இலங்கைக்கு சென்றார்.. அந்த மூலிகைகளின் சக்தி வாய்ந்த வாசம்… லஷ்மணனை உயிர்ப்பித்தது…
VOICEOVER: போர் தொடர்ந்தது… லஷ்மணன் இந்திர அஸ்திரத்தைப் பயன்படுத்தி.. இந்திரஜித்தை வீழ்த்தினான்… அவன் உடல் மட்டும் உயிர் அற்று வீழ்ந்தது…
VOICEOVER: இந்திரஜித்தின் மரணச்செய்தி இராவணனை தகர்த்தது…
VOICEOVER: வருத்தத்தில் அவன் கண்ணீரில் இருந்து வந்த கண்ணீர் அனைத்தும் கோபத்தில் இவனைக் கொதிக்கச் செய்தது…
VOICEOVER: போர்களத்தில் தானே இறங்க முடிவெடுத்தான்…
VOICEOVER: இராவணன் ராமனை நேருக்கு நேர் சந்திக்கவும் செய்தான்… ராமன், இராவணன் இருவருமே… பராக்கிரம சாலிகள்… இவர்களுக்கு இடையே நடந்த போர்.. மிகப் பயங்கரமாக இருந்தது…
VOICEOVER: ஒன்றின்பின் ஒன்றாக ராமன் இராவணனின் பத்து தலைகளையும் தனது அம்பினால் வெட்டி சாய்த்தார்… ஆனால் ஒரு தலை வெட்டப்பட்ட அடுத்த கணத்திலேயே… இன்னொன்று அதன் இடத்தைப் பிடித்தது… இறுதியாக விபீஷ்ணன் கூறியபடி… ராமர் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதத்தால்… இராவணனை வீழ்த்தினார்…
VOICEOVER: இராவணனின் மார்பு கிழிந்தது… இராவணன் தேரிலிருந்து உயிரற்ற உடலாக விழுந்தான்…
VOICEOVER: இராவணன் தனக்கிருந்த அனைத்தையும், கோவத்தினாலும், பெண்ணாசையினாலும் இழந்தான்…
VOICEOVER: இராவணனின் மரணத்திற்குப் பின்னால்… விபீஷ்ணன் இலங்கையின் அரசனாக முடிசூட்டப் பட்டான்…
VOICEOVER: சீதையின் கண்கள் ராமரைக் கண்டதும். ஆனந்த கண்ணீர் வைரம் போல் ஜொலித்தது..
VOICEOVER: பதினான்கு வனவாசம் முடிவடையும் நேரத்தில்… ராமர், லஷ்மணர், சீதை, அனுமான் மற்றும் சுக்ரீவன் புஷ்பக விமானத்தில் ஏறி… இலங்கையில் இருந்து புறப்பட்டார்கள்… VOICEOVER: புஷ்பக விமானம் அயோத்தியை அடைந்தது.. பரதன்..ராமரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்… ராமர் அயோத்தியின் அரசராக முடிசூட்டப் பட்டார்…
VOICEOVER: அனுமார் ராமரின் பரமபக்தரானார்.. அவர் ராமரின் சரணங்களுக்குப் பக்கத்தில் இடம் பிடித்தார்…
VOICEOVER: ராமர் அயோத்தியை பல ஆண்டுகாலம் ஆண்டு வந்தார்… அவருடைய ராஜ்ஜியத்தில் மக்கள் அனைவரும்… சந்தோஷத்தில் இருந்தார்கள்… நாடு முழுவதும் செழிப்பாக இருந்தது… இதை தான் நாம் ராமராஜ்ஜியம் என்று நாம் இன்றும் படித்துக் கொண்டிருக்கிறோம்…
VOICEOVER: ஜெய் ஸ்ரீராம்…