Connect with us

Mythological Stories - Tamil

ராமாயணம் – கும்பகர்ணனை வீழ்த்தியது

வானரங்கள் இந்த வெற்றியைக் கண்டதும்.. பேரானந்தம் அடைந்தனர்

ராமாயணம் –  கும்பகர்ணனை வீழ்த்தியது PR046 06

கும்பகர்ணனை வீழ்த்தியது

காட்சி-1

VOICEOVER: இந்நேரத்தில் இலங்கையில் ராவணன் இளைய சகோதரரான விபீஷ்ணரின் அறிவுரைக்கு செவி சாய்க்க வில்லை… விபீஷ்ணனுக்கு ஒருவேளை போர் மூண்டால்… அரக்கர் குலமே அடியோடு அழிந்து விடும் என்பது நன்றாக தெரிந்தது… ஆனால் விபீஷ்ணனின் வார்த்தைகள் ராவணனின் கர்வத்தைக் காயப் படுத்தியதால்… அவன் விபீஷ்ணனை குல துரோகி என்று… அவதூறு கூறினான்…

VOICEOVER: வார்த்தையிலான காயத்திற்கு விபீஷ்ணன் ராமரிடம் சென்று… அவரிடம் தஞ்சம் புகுந்தான்… ராமர் விபிஷ்ணனை ஏற்றுக் கொண்டு, ராவணனின் மரணத்திற்கு பின்னால் அவன் இலங்கையின் அரசனாக ஆக்கப் படுவான் என்று சத்தியம் செய்து கொடுத்தார்…

VOICEOVER: விபீஷ்ணன் ராமரிடம் கடல் கடவுளை ஒரு பாலம் கட்டக் கோரி… வேண்டிக் கொள்ளும்படி கூறுகிறான்… பல நாட்கள் பிரார்த்தனைக்குப் பிறகு.. ராமர் மனமுடைந்து கடல் கடவுளை தாக்க முயற்சிக்கும் போது.. கடல் கடவுள் ராமர் முன் தோன்றி கடல் மீது பாலம் கட்டிக் கொள்ள அனுமதிக்கிறார்…

VOICEOVER: கடல் வழியில் கற்களையும், மரங்களையும், மணல்களையும் வைத்து வானரங்கள் ஒரு பாலத்தைக் கட்டுகிறார்கள். …

VOICEOVER: இந்தப் பாலம் வெறும் ஐந்து நாட்களில் தயார் செய்யப் பட்டது… சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த வானரப் படையினர் கடலைக் கடந்து இலங்கையை அடைந்தனர்…

VOICEOVER: இராவணன் தேர்ச்சிப் பெற்ற பல கொடூர ராட்சசர்களை அனுப்பினான்… வானரங்களுக்கும் ராட்சசர்களுக்கும் இடையே பயங்கரமான போர் நடந்தது…

Advertisement

VOICEOVER: ஒவ்வொரு வானரனும் பிரமாதமாக போரிட்டு… அரக்கர்களை காயப்படுத்தியோ இல்லை கொல்லவோ செய்தார்கள்…

VOICEOVER: ராவணன் வெட்கத்தால் தலை குனிந்தான்… உறங்கும் மலையான கும்பகர்ணனை அவன் எழுப்பினான்…இவன் ராவணனின் இன்னொரு சகோதரன்… இவன் முதல் ஆறுமாதம் உண்ணுவதிலும், அடுத்த ஆறுமாதம் உறங்குவதிலும்… நாட்களைக் கழித்தான்…

VOICEOVER: இலங்கையை நாசத்திலிருந்து காப்பாற்ற… இவன் ஒருவனால் தான் முடியும் என்று… இராவணனுக்கு நன்றாகத் தெரியும்… கும்பகர்ணன் போர் மூண்டதால் மட்டுமே… இவன் எழுப்பப்பட்டான் என்ற விஷயம் தெரிய வந்ததும் அவன் நேரடியாக போர்க்களத்திற்கு சென்றான்…

VOICEOVER: இவன் மாபெரும் மலைபோன்று காட்சி அளித்தான்… இவனது உயரத்தையும், உடல் பலத்தையும் கண்டதும் வானரங்கள் பயந்து போயினர்… அவனுக்கு இவர்கள் ஈடே இல்லை…

VOICEOVER: வானர வீரர்களின் முகத்தில் பயத்தைக் கண்டதும்.. ராமர் கும்பகர்ணனை சந்திக்கச் சென்றார்… ஒரு கொடுமையான போர் இருவருக்கும் நடுவில் மூண்டது… ராமர் தனது அபாரமான அஸ்திரங்களில் ஒன்றினை பயன்படுத்தி… கும்பகர்ணனின் கைகளையும், கால்களையும், வெட்டி எறிந்தார்… கும்பகர்ணன் இறந்தார்…

VOICEOVER: வானரங்கள் இந்த வெற்றியைக் கண்டதும்.. பேரானந்தம் அடைந்தனர்

Continue Reading
Advertisement