Connect with us

Mythological Stories - Tamil

ராமாயணம் – சித்திரக்கூடத்தில் ராமன்

அயோத்தியிலிருந்து ஒரு பெரும் படையை அழைத்துக் கொண்டு… காட்டிற்குள் நுழைந்தான், hanuman chalisa, kids bedtime stories, rama stories in tamil, ramayana characters, kids video, bedtime stories for kids in english, rama stories, ramayana story, #reading, stories for kids pdf, sri lanka, raman stories in tamil, ramayanam story in english, #tamil, stories for kids to read, ravanan, raman stories, ramayanam serial, stories, mythological stories, mythological stories for kids, hanuman stories, Ramayanam, tales, Ramayana stories in tamil pdf, stories for kids in english, hanuman stories for kids, PR046TA, Sri Rama And Vishwamitra, ramayana stories for kids, bedtime stories for kids, stories for kids in tamil

ராமாயணம் – சித்திரக்கூடத்தில் ராமன் PR046 03

சித்திரக்கூடத்தில் ராமன்

காட்சி-1

VOICEOVER: ராமர் காட்டிற்கு புறப்பட தயாரானதும்.. சீதை தன்னையும் அவரோடு அழைத்துச் செல்ல வேண்டிக் கொண்டாள்… ஏனென்றால் அவளால் இவர் இல்லாமல் வாழ முடியாது… ராமர் அவள் தன்னுடன் வருவதற்கு சம்மதித்தார்…

VOICEOVER: ஆனால் லஷ்மணரும் அவருடன் வருவேன் என்று அடம் பிடித்தார்… ராமன் இல்லாத அயோத்தியில் வாழ… அவருக்கு விருப்பம் இல்லை என்று அவர் கூறினார்… ராமர் தயங்கினார்… ஏனென்றால் அவருக்கும் லஷ்மணருக்கும் இடையே ஒரு பாசத்தின், அன்பின் கடுமையான பந்தம் இருந்தது…

VOICEOVER: இறுதியாக ராமர், லஷ்மணர் தன்னுடன் வர சம்மதித்தார்…

VOICEOVER: ராமர், சீதை மற்றும் லஷ்மணர் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசியைப் பெற்று… புறப்படத் தயாரானார்கள்… சந்நியாசிகளின் ஆடை அணிந்து… தேரில் ஏறி உட்கார்ந்தார்கள்..

VOICEOVER: தசரதர் அன்று இரவு முழுவதும் ராமரை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்… பிரிவு என்ற சோகத்தைத் தாங்க முடியாமல்… அவர் இறைவனை சென்று அடைந்தார்…

VOICEOVER: பரதனையும் சத்ருகனனையும் அழைத்து வர… கைகேயத்துக்கு தூதுவர்கள் அனுப்பப் பட்டனர்… அயோத்தி முழுவதும் துவண்டு இருப்பதைக் கண்டு பரதன் அதிர்ச்சி அடைந்தான்… நடந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேகமாக அரண்மனைக்குச் சென்றான்… தன் தாய் மற்றும் அவள் தாதி மந்தரையின் கொடுமையான தீய திட்டங்களை… பற்றிக் கேள்விப் பட்டான்… அதோடு தந்தையின் இழப்பையும் கண்டு அழுதான்… ராமர் வனவாசம் சென்றதும்.. தன் தாயினால் தான் என தெரிந்ததும்… அழுதான்… ஏனென்றால்… பரதனுக்கு அரசனாக வேண்டும் என்ற ஆசை இருந்ததே இல்லை…

Advertisement

VOICEOVER: கைகேயி தான் எவ்வளவு பெரிய தவறை இழைத்து விட்டோம் என்று புரிந்து கொண்டாள்… பரதன் ராமரை தேடியே ஆகவேண்டும் என்ற முடிவோடு புறப்பட்டான்… அயோத்தியிலிருந்து ஒரு பெரும் படையை அழைத்துக் கொண்டு… காட்டிற்குள் நுழைந்தான்… கைகேயியுடன் மற்ற ராணிகளும் உடன் வந்தனர்…

VOICEOVER: அதே சமயம் மற்றொரு பக்கம்… ராமர், சீதை மற்றும் லஷ்மணர் மூவரும்… கங்கை நதியைத் தாண்டி… யாரும் இல்லாத இடத்தைத் தேடிச் சென்றனர்…

VOICEOVER: ஒரு வழியாக அவர்கள் சித்திரக் கூடத்தை அடைந்தார்கள்.. இங்கு நிறைய மரங்களும், சிற்றாறுகளும் இருந்து இவ்விடத்தை.. அழகு படுத்தின…

VOICEOVER: இவர்கள் ஒரு சிற்றாற்றின் அருகில் ஓர் குடிலை அமைத்து அங்கு தங்கினார்கள்..

VOICEOVER: பரதன் ராமரைக் கண்டதும் ஓடிவந்து அவரது காலில் விழுந்தான்… சத்ருகனனும் ராமருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளித்தான்..

VOICEOVER: பரதன் தங்கள் தந்தை இறந்த செய்தியை ராமருக்கு தெரிவித்ததும்… ராமர் ஆடிப்போய்விட்டார்… பரதன் ராமரிடம் திரும்பி வந்து… அரசர் பதவியை ஏற்கவேண்டும் என்று கெஞ்சி மன்றாடினான்…

VOICEOVER: ஆனால் ராமர் அயோத்திக்கு திரும்பி விட்டால்… தசரதரின் மரணத்திற்கு அர்த்தமற்றுப் போய்விடும் என்றார்… பரதனிடம் அயோத்திக்கு சென்று ஆட்சிபுரியச் சொன்னார்… பரதன் எளிதில் விட்டுக் கொடுக்கவில்லை… ராமர் இல்லாமல் அவன் திரும்பி செல்வதாக இல்லை…

VOICEOVER: இறுதியாக பரதன் ராமர் சார்பாக… அடுத்த பதினான்கு வருடங்கள் நாட்டை ஆளுபவன் என்று முடிவு செய்யப் பட்டது…

Advertisement

VOICEOVER: பரதன் ராமரின் பாதணியைப் பெற்றுக் கொண்டு… அதைப் பத்திரமாக தன் சிரத்தில் வைத்துக் கொண்டு… அபாரமரியாதையைக்கொடுத்தான்

VOICEOVER: பரதன் விடைபெற்ற பின்… ராமர் சித்திரக்கூடத்தில் இனியும் தங்க விரும்பவில்லை… சித்திரக்கூடத்தின் காட்டுப் பகுதியை விட்டு…தண்டகா காட்டு பகுதிக்குள் செல்ல ஆயத்தமானார்கள்.. தண்டகாவின் காட்டுப் பகுதிகள்.. இருள் நிறைந்ததாகவும், ஆழமாகவும் இருந்தது… தெற்குபகுதிக்கு அவர்கள் பயணம் செய்து மாமுனிவர் அகத்தியரின் இடத்துக்கு சென்றார்கள்…

VOICEOVER: அகத்திய முனிவர் ராமரை, பஞ்சவடியில் கோதாவரியின் கரையில்… தங்கும் படி கூறினார்… பஞ்சவடியை சென்றடைந்ததும்… லஷ்மணன் ஒரு சாதாரண குடிலை எழுப்பினான்… இந்த இடத்தில் தான் கழுகுகளின் அரசன் ஜடாயுவை சந்தித்தார்கள்… ஜடாயு தசரதனின் நண்பனாக இருந்ததால்… அவரால் முடிந்தவரை… ராமருக்கு உதவி செய்ய எண்ணினார்…

Continue Reading
Advertisement