Connect with us

Mythological Stories - Tamil

ராமாயணம் – சீதாவை கடத்திச் சென்ற இராவணன்

தங்களுக்காக உயிரை தியாகம் செய்த… ஜடாயுவின் நல்ல ஆத்மாவிற்காக.. இவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்… இப்போது இராமனும் லஷ்மணரும்… சீதையை தேடிச்செல்ல ஆரம்பித்தார்கள்

ராமாயணம் – சீதாவை கடத்திச் சென்ற இராவணன் PR046 04

சீதாவை கடத்திச் சென்ற இராவணன்

காட்சி-1

VOICEOVER: இந்த காட்டுப் பகுதியில், இந்த சகோதரர்களுக்குத் தெரியாமல்.. ஒரு கொடூரமான அரக்கி… ராமரைப் பார்த்து அவர் மீது மோகம் கொள்கிறாள்… இவள் பெயர் சூர்ப்பனகை… பலம் வாய்ந்த இராவணனின் சகோதரிதான் இவள்…

VOICEOVER: இவள் ராமரிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்… சீதையை விட்டுவிட்டு ராமரை தன்னோடு வர அழைத்தாள்…

VOICEOVER: வலி தாங்கமுடியாமல் சூர்ப்பனகை காட்டிற்குள் ஓடி தனது சகோதர்களின் உதவியை நாடச் சென்றாள்… இரண்டு மானிடர்கள் தனக்கு இழைத்த கொடுமைக்காக… கரனையும், தூஷணனையும் அவர்களுக்கு தண்டனை அளிக்கக் கோருகிறாள்… தன்னுடைய ஆசைத்தங்கையின் இந்த நிலையைக் கண்டதும்… கரனின் கோபம் எல்லை மீறியது… அவன் உடனடியாக தனது சேனையுடன்… ராமரை எதிர்க்கச்சென்றார்…

VOICEOVER: ராமர் அவர்களிடம் போரிடும் நேரத்தில்… லஷ்மணன் சீதையை பாதுகாத்தான்..

VOICEOVER: ராமர் அந்த முழுப் படையையும் வென்று… கரனையும், தூஷணனையும் அழிக்கவும் செய்தார்..

VOICEOVER: தனது சகோதரர்களும், அவர்களது படைகளும் அழிந்து போன விதத்தை சூர்ப்பனகை பயத்துடன் பார்த்தாள்… அவள் உடனடியாக இலங்கைக்கு பறந்து சென்று இராவணனிடம் பாதுகாப்பை நாடினாள்…

Advertisement

VOICEOVER: தனது தங்கையின் உருவம் மாறியிருப்பதை, இராவணன் கண்டு அதிர்ச்சி அடைந்தான்… காரணம் என்ன என கேட்டதும்… சூர்ப்பனகை ராமனைப் பற்றியும்… லஷ்மணரைப் பற்றியும் கூறினாள்… சீதை எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்பதையும் இராவணன் காதில் போட்டு வைத்தாள்…

VOICEOVER: இராவணன் அந்த அழகான சீதையை அடைய ஒரு திட்டம் தீட்டினான்…

VOICEOVER: இராவணன் தன் புஷ்பக விமானத்தில் பறந்து… தாரகாவின் மகனான மாரீசனை சந்தித்தாள்… உருமாறும் சக்தி படைத்த ராட்சச மாரீசனிடம், ஒரு தங்க மானைப் போன்று உருவெடுக்க… இராவணன் கூறினான்..

VOICEOVER: ராமனால் தண்டிக்கப் பட்ட மாரீசன்… முதலில் மறுப்பு தெரிவித்தான்… ஆனால் மாரீசனுக்கோ ஒப்புக்கொள்ள வில்லை என்றாலும் மரணம் நிச்சயம் என்று தெரியும்… அவன் ராமனின் கையினால் இறக்க முடிவு செய்து… இராவணின் திட்டத்திற்கு உதவ ஒப்புக் கொண்டான்…

VOICEOVER: மாரீசன் ஒரு தங்க மானைப் போன்று வடிவெடுத்து சீதையின் குடிலுக்கு முன்னால் திரிந்தான்.. சீதை ராமரிடம் அதைப் பிடித்துக் கொடுக்க சொல்லி கூறினாள்… ராமன் லஷ்மணனிடம் சீதையை பார்த்துக் கொள்ளக் கூறி மானை தொடர்ந்து சென்றார்… இந்த மான் அவரை, அவரது மனைவிக்கும் சகோதரருக்கும்… கண்களில் படாதவாறு, காட்டின் முற்பகுதிக்கு.. அழைத்துச் சென்றார்…

VOICEOVER: ராமருக்கு அம்மானை உயிரோடு பிடிக்க முடியாது என்று தெரிந்த உடன்… அவர் அதி கூர்மையான அம்பை எய்து கொன்றார்.. அம்பு துளைத்ததும், மாரீசன் தன் உண்மையான உருவத்தில் வந்து ராமரின் குரலில்… கதறினான்… சீதையையும், லஷ்மணனையும் உதவி செய்யுமாறு அழைத்தான்… இராவணனின் திட்டம் வேலை செய்தது…

VOICEOVER: பிரச்சினை ராமரை சூழ்ந்தது என்று நினைத்த சீதை… லஷ்மணரை அவரது சகோதரருக்கு உதவி செய்யுமாறு வற்புறுத்தினாள்.. அதனால் லஷ்மணனும் புறப்படத் தயாரானான்… ஆனால் செல்வதற்கு முன்னால் அவன் குடிலைச் சுற்றி.. ஒரு வளையத்தை வரைந்து… அவன் திரும்பி வருவதற்கு முன்… எக்காரணத்தைக் கொண்டும் வெளியேறக் கூடாது என்று கூறினான்..

VOICEOVER: இராவணன் தன் திட்டம் வேலைசெய்வதைப் பார்த்து சந்தோஷம் அடைந்தான்… சீதை தனிமையில் இருந்தாள்… ஒரு சாதுவின் உருவத்தைத் தரித்து… சீதையை ஒரு பிச்சைப் பாத்திரத்துடன் சந்தித்தான்… இப்படி ஒரு சாதுவைக் கண்டதும்… சீதை.. சிறிது உணவை எடுத்து வந்து… லஷ்மணன் கிழித்தக் கோட்டிற்குள் நின்ற படி… அதை வழங்கினாள்… இதை வழங்க தயவு செய்து வெளியே வாருங்கள் என அழைத்தான்… என்ன நடக்கிறது என அவளுக்கு புரிவதற்கு முன்… இராவணன் அவன் கைகளை பிடித்த படி… அவளை தனது தேரில் ஏற்றினான்… சீதை கதறினாள்… ஆனால் நேரம் கடந்து விட்டது… அந்த தேர் வானத்தில் பறக்க ஆரம்பித்தது… வேகமாக இலங்கைக்கு சென்றது…

Advertisement

VOICEOVER: இராவணன் தெற்கு பக்கமாக சென்றிருக்கையில்… கழுகுகளின் அரசரான ஜடாயு சீதையைப் பார்த்தார்.… அவர் வேகமாக பறந்து வந்து… இராவணனிடம் போரிட்டார்… இராவணன் சற்றும் கருணை இல்லாமல்… ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி எறிந்து.. மின்னலின் வேகத்தில் அவனது தேரில் சீதையை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்…

VOICEOVER: இராவணனின் பராக்கிரமத்துக்கு முன் சீதையின் தப்பிக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாயின… மலைகளையும், காடுகளையும், அவர்கள் தாண்டி செல்கையில் சீதை தனது நகைகள் ஒவ்வொன்றாக போட்டுக் கொண்டே வந்தாள்… ராமர் அதைக் காண்பார் என்ற நம்பிக்கை கொண்டாள்…

VOICEOVER: இலங்கையை சென்றடைந்ததும்.. இராவணன் சீதையிடம் தனக்கு மனைவியாய் இருக்கும் படி… கூறினான்…

VOICEOVER: சீதை அதற்கு மறுப்பு தெரிவித்ததும்… அவன் அவளை அரண்மனை பூங்காவில்.. கோரமான ராட்சசிகளின் மத்தியில் விட்டுவிட்டு சென்றான்… சீதையோ பயந்து போய் சோகத்தில் ஆழ்ந்து… இந்த புனிதவதி தனிமையாக அமர்ந்திருந்தாள்…

VOICEOVER: இந்த நேரத்தில் பஞ்சவடிக் காட்டில் இராமரும், லஷ்மணரும்.. தாங்கள் ஏமாற்றப் பட்டதை உணர்ந்தனர்…

VOICEOVER: இறக்கும் நிலையிலிருந்த பருந்துகளின் அரசர் ஜடாயு மூலமாகத்தான்… இராவணன் சீதையை அபகரித்துச் சென்றுள்ளான் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியவந்தது.. தங்களுக்காக உயிரை தியாகம் செய்த… ஜடாயுவின் நல்ல ஆத்மாவிற்காக.. இவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்… இப்போது இராமனும் லஷ்மணரும்… சீதையை தேடிச்செல்ல ஆரம்பித்தார்கள்…

Continue Reading
Advertisement