Mythological Stories - Tamil
ராமாயணம் – ராமனும், விஸ்வாமித்திரரும்
இராமர் அமைதியாக பிரார்த்தனை செய்து… புதிதாக கிடைத்த அஸ்திரத்தை ஏவினார்… முதல் அம்பினால் அவர் மாரீசனை பல மைல்கள் தாண்டி… கடலில் வீசினார்… இரண்டாவதை வைத்து சுபாகுவைக் கொன்றார்… விஷ்வாமித்திரரும், பூஜையை முடித்தார்… அங்கிருந்த முனிவர்கள் அனைவரும் சந்தோஷப் பட்டு… இந்த இளவரசர்களுக்கு ஆசி வழங்கினார்கள்…

ராமனும், விஸ்வாமித்திரரும்
காட்சி-1
நெசவாளி, மனைவி, நண்பன்,வனதேவதை, VOICEOVER…
VOICEOVER: சரயு நதிக்கரையில் இருந்த பிரம்மாண்டமான நகரம் தான் அயோத்தி… தசரதன் என்ற அற்புதமான அரசர்.. அந்நாட்டை ஆண்டு வந்ததால்… அதன் பிரஜைகள் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்..
VOICEOVER: தசரத மகாராஜாவுக்கு மூன்று மனைவிகள்… கௌசல்யா, சுமித்ரா, கைகேயி… ஆனால் தனக்கு வயதாகியும் பிள்ளைகள் பிறக்க வில்லை என்ற காரணத்தினால்… இவர் சோகமாக இருந்தார்…
VOICEOVER: அவருடைய வருத்தத்தைப் பார்க்க முடியாமல்… முனிவர்கள் பிள்ளைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு… ஒரு யக்ஞத்தை செய்யவேண்டும் என்று.. அரசருக்குக் கூறுகிறார்கள்.. அவர்கள் கூறியது போல்… இவர் புத்திர காமேஷ்டி யாகத்தை செய்தார்…
VOICEOVER: இந்த யக்ஞத்தின் போது… ஒரு மாய ரூபம் புனித நெருப்பிலிருந்து… தோன்றி.. ஆன்மீக சக்தி வாய்ந்த… இனிப்பான பாலினை.. தசரதனுக்கு வழங்கி… அதை தன் மனைவிமார்களுக்கு அளிக்கக் கூறியது… அந்த பால் மாயத்தைக் காட்டத் தொங்கியது…
VOICEOVER: தசரதனுக்கு நான்கு அழகான பிள்ளைகள் பிறந்தனர்… கௌசல்யா ராமரையும், கைகேயி பரதனையும், சுமித்ரா லக்ஷ்மணன், சத்ருகனனையும் பெற்றெடுத்ததால் அரசர் சந்தோஷம் அடைந்தார்…
VOICEOVER: இந்த இளவரசர்கள் நல்ல பண்புகளோடு வளர ஆரம்பித்தார்கள்… வில்வித்தை, படித்தல் மற்றும் வேட்டையாடுதலில் திறமைசாலி ஆனார்கள்…
VOICEOVER: அவர்கள் புனித நூல்களைப் பற்றியும்.. மக்களை எவ்வாறு சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பதையும் அறிந்தார்கள்..
VOICEOVER: தங்களது குருவையும், மற்றவர்களையும், மதித்தார்கள்… அயோத்தி மக்களின் பாசத்தையும், அன்பையும் வென்றார்கள்…
VOICEOVER: ஒரு நாள் புகழ்பெற்ற விஸ்வாமித்திர முனிவர்… அயோத்திக்கு வந்தார்… அவர் சகல மரியதையுடன் வரவேற்கப் பட்டார்…
VOICEOVER: முனிவர் விஸ்வாமித்திரர் அரசர் தசரதனிடம் … யட்சர்களிடமிருந்து தன்னையும், தன் பூஜையையும் காப்பாற்ற… ராமரை அனுப்புமாறு கேட்டார்…
VOICEOVER: அரசர் தசரதர் விஸ்வாமித்திரரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு… அதிர்ச்சி அடைந்தார்… அவருக்கு மிக முக்கியமான் விஷயம் என்று ஒன்று இருந்தால்… அது ராமன் தான்… ஆனால் அதே நேரத்தில் விஸ்வாமித்திரரைப் போன்ற பெருமை மிக்க முனிவரிடம் மறுப்பு தெரிவிக்க முடியாததால், அவரோடு ராமரை அனுப்ப சம்மதித்தார்..
VOICEOVER: தசரதரின் ஆசியோடு ராமரும், லட்சுமணரும் விஸ்வாமித்திர முனிவரோடு… காட்டுக்குள் சென்றார்கள்… அவர்கள் சென்ற காட்டின் பெயர் தண்டகா… அங்கு தாடகா என்ற ஒரு ராட்சசி… தன் மகன் மாரீசன் என்பவனுடன் வாழ்ந்து வந்தாள்… அவளுக்கு ஆயிரம் யானைகளின் சக்தி இருந்ததாம்… அவள் தன் இரையை மயக்கி.. மாந்த்ரீகம் செய்து விடுவாள்… இவள் மீதுள்ள பயத்தினாளேயே… எவரும் இக்காட்டிற்குள் நுழைவதில்லை….
VOICEOVER: விஸ்வாமித்திரர் ராமனிடம் அவளைக் கொல்ல உத்தரவிட்டார்… ராமர் பயங்கர அம்பினால் அவள் இதயத்தை துளைத்தார்… தாடகியும் இறந்து மண்ணோடு மண் ஆனாள்..
VOICEOVER: ராமரின் இந்த அபார திறமை கண்டு.. விஸ்வாமித்திரர் பேரானந்தம் அடைந்தார்… தனது புனிதத்தினால் பெற்ற சக்தி வாய்ந்த அஸ்திரங்களை…அவர் ராமருக்கும், லஷ்மணருக்கும் அளிக்க முடிவு செய்தார்…
VOICEOVER: பிறகு மூவரும் விஸ்வாமித்திரரின் ஆசிரமமான சித்தாஸ்ரமத்திற்கு சென்றார்கள்.. அங்குள்ள முனிவர்கள்.. ராமரை, பூஜையினை பாதுகாக்கும் படி வேண்டிக் கொண்டார்கள்..
VOICEOVER: மாரீசன், சுபாகு என்ற இரண்டு பெரிய ராட்சசர்கள் பூஜையை தடுக்க வருவார்கள் என்று… அவர்கள் அஞ்சினார்கள்… விஸ்வாமித்திரர் அமைதியான பூரணமான ஒரு பூஜையை நடத்துவேன் என்று… சபதம் மேற்கொண்டார்… ராமரும், லட்சுமணரும் இரவும் பகலுமாக… இவ்விடத்தினை பாதுகாத்தார்கள்…
VOICEOVER: ஏழாவது நாள் பூஜை முடிவடையும் நேரத்தில் … ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது… ராமர் மேல் நோக்கிப் பார்த்ததும், மாரீசனும் சுபாகுவும் இருந்தார்கள்… இராமர் அமைதியாக பிரார்த்தனை செய்து… புதிதாக கிடைத்த அஸ்திரத்தை ஏவினார்… முதல் அம்பினால் அவர் மாரீசனை பல மைல்கள் தாண்டி… கடலில் வீசினார்… இரண்டாவதை வைத்து சுபாகுவைக் கொன்றார்… விஷ்வாமித்திரரும், பூஜையை முடித்தார்… அங்கிருந்த முனிவர்கள் அனைவரும் சந்தோஷப் பட்டு… இந்த இளவரசர்களுக்கு ஆசி வழங்கினார்கள்…