Mythological Stories - Tamil
ராமாயணம் – ராமனை சந்தித்த அனுமன்
சீதை பத்திரமாக இருக்கிறாள் என்ற செய்தியை ராமருக்கு தெரிவித்தான்… அதற்கு அத்தாட்சியாக… சீதையின் நகையைப் பார்த்த ராமர் சந்தோஷத்தில் நகைத்தார்

ராமனை சந்தித்த அனுமன்
காட்சி-1
VOICEOVER: ராமரும், லஷ்மணனும் அங்கிருந்து ரிஷ்யமுகம் என்ற இடத்தை அடைகிறார்கள்… இது வானரர்கள் வாழ்ந்து வந்த மலைப் பகுதியாகும்.. அவர்களின் தலைவன் தான் சுக்ரீவன்… அவருடைய உதவியாளர்… மற்றும் நண்பனுமான அனுமான்… இவர் பலசாலி மட்டுமல்லாது புத்திசாலியான வானரர்…
VOICEOVER: அனுமான் இந்த சகோதரர்களிடம்… தன்னை வானர அரசர் சுக்ரீவரின் மந்திரியாக அறிமுகப் படுத்திக் கொண்டார்… இவர் ராம,லஷ்மணன் யார்? இவர்கள் எதற்காக இந்த காட்டுப் பகுதியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்… என்பதை வினவினார்…
VOICEOVER: ராமர் அனுமானிடம் அயோத்தியை பற்றியும், வனவாசத்தைப் பற்றியும், சீதை அபகரிக்கப் பட்டதையும்… கூறினார்…
VOICEOVER: அனுமான் ராமரையும், லட்சுமணரையும்… சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றார்… நடந்தவைகள் அனைத்தையும்.. அவருக்குத் தெரியப் படுத்தினார்கள்…
VOICEOVER: ராமர் ஒருவேளை வாலியை அழிப்பதற்கு… சுக்ரீவனுக்கு உதவி செய்தாரானால் சுக்ரீவன் வானரம், மற்றும் கரடியின் முழு சேனையையும், ஒன்று திரட்டி… சீதையை கண்டுபிடிக்க… ராமருக்கு உதவி செய்வேன் என்று.. சத்தியம் செய்தார்…
VOICEOVER: வாலி சுக்ரீவனுக்கு இழைத்த அநியாயத்தை கேட்டதும்… ராமர் அதற்கு ஒத்துக் கொண்டார்… வாலியும், சுக்ரீவனும் கடுமையான மல்யுத்தத்தில் மோதிக் கொண்டு இருக்கையில் … ராமர் வாலியை தனது கூர்மையான அம்பால் கொன்றார்…
VOICEOVER: சுக்ரீவர் கிஷ்கிந்தாவை ஆளும் பொறுப்பை ஏற்றார்… வாக்கைக் காப்பாற்றும் விதத்தில்.. முழு வானரக் கூட்டமும் சீதையை தேடும் பணியில் ஈடுபட்டனர்… தீவிரமாக வானர வீரர்கள்… வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்று நான்கு திசைகளிலும் சென்றனர்..
VOICEOVER: தெற்கு பக்கத்தில் சென்ற குழுவின் தலைவன் அனுமான்… முழுமையாக தேடியும் சீதையை கண்டுபிடிக்க முடியாமல் போனபட்சத்தில்… அவர்கள் கரைகளை வந்தடைந்தனர்… இதையும் தாண்டி எங்கே தேடுவது என்று குழம்பிப் போயிருந்தனர்…
VOICEOVER: ஜடாயுவின் சகோதரன் சம்பதி வாயிலாக… நடந்த முழுக் கதையையும் கேள்வியுற்றார்… ஜடாயுவைக் கொன்றது ராவணன் என்று கேட்டதும்… வருத்தத்தில் ஆழ்ந்தார்… அவரால் பறக்க இயலவில்லை என்றாலும்… கழுகிற்கே உரிய கூர்மையான பார்வை அவருக்கு இருந்தது… தொலைதூரத்தில் இருக்கும் இலங்கைத் தீவில் சீதை சோகமாக கடலைக் கடந்திருக்கும் காட்சியை இங்கிருந்த படியே அதை பார்க்க முயன்றது…
VOICEOVER: சீதை எங்கிருக்கிறார் என்ற செய்தி கேட்டதுமே, வானரங்கள் சந்தோஷம் அடைந்தார்கள்… ஆனால் இந்த மாபெரும் கடலைத் தாண்டி.. எப்படி இலங்கை சென்று அடைவது… என்பது அவர்களுக்கு மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.. அனுமான் ராமனிடத்திலே வேண்டிக் கொண்டார்…
VOICEOVER: சீக்கிரத்திலேயே… அனுமான் வளர ஆரம்பித்து… மலைகள் சிறிய பாறைகள் என்று தோன்றும் அளவுக்கு… பெரிய உருவமாக உருவெடுத்தார்… சீதையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள்… அவரது மனதில் ஆழமாக பதிந்திருக்கையில்… அவரது கால் மண்ணில் ஆழமாக பதித்து அவர் வானத்தில் பறந்தார்…
VOICEOVER: அவர் கடலின் மேல் பறக்க ஆரம்பித்தார்… இறுதியாக அவர் இலங்கையின் ஜொலிஜொலிக்கும் கரைகளில் இறங்கினார்…. இலங்கையில் இறங்கியதும்.. அவர் சீதையை தேடும் பணியிலும் இறங்கினார்…
VOICEOVER: அனுமார் அசோக வனத்துக்குள் நுழைந்தார்… பல மரங்களில் ஒன்றின் அடியில்.. இதுவரை பார்த்திராத அழகான பெண்மணி ஒருத்தி அமர்ந்திருந்தாள்.. அவள் தான் சீதை… சீதையை சுற்றி ராட்சசிகள் இருந்தனர்…
VOICEOVER: ராட்சசிகள் அனைவரும் உறங்கும் வரை காத்திருந்து… சீதையை நெருங்கினார் அனுமான்… ராமனின் மோதிரத்தை அளித்து தான் ராமதூதன் என்று சீதையிடம் கூறியதும் சீதையின் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போனது…
VOICEOVER: ராமர் எப்படி அனுமானையும், சுக்ரீவனையும் சந்தித்தார்கள்… எப்படி சீதையைத் தேடும் பணி ஆரம்பித்தது என்பதைப் பற்றிக் கூறினார்..
VOICEOVER: அவள் அணிந்திருந்த ஒரு நகையினை அளித்து… அதனை ராமர் தெரிந்து கொள்வார் என்றாள்… அனுமான் புறப்பட்டதும்… சீதை அவனுக்கு ஆசி வழங்கினாள்… திடீரென்று ராட்சசிகள் விழித்துக் கொண்டனர்… ஒரு குரங்கு செய்த நாசத்தைப் பற்றி ராவணன் கேள்விப் பட்டதும்.. அவன் தன் மகனான இந்திரஜித்தை… அக்குரங்கினை கைது செய்ய அனுப்பினான்…
VOICEOVER: இந்திரஜித் ஓர் தேர்ச்சி பெற்ற வீரன்… அவன் தன் மிக சக்தி வாய்ந்த அஸ்திரங்களில் ஒன்றை பயன்படுத்தி… அனுமானை கைது செய்து, அவனை ராவணனின் அரண்மனைக்கு இழுத்துச் சென்றான்…
VOICEOVER: அனுமான் அரசன் ராவணனுக்கு முன்னால் அழைத்து வரப்பட்டதும்… அவன் பத்து தலைகள் கொண்ட ராவணனைக் கண்டு ஆச்சரியப் பட்டான்… பிறகு அனுமான் ராவணனிடம்… சீதையை ராமரிடம் ஒப்படைத்து… அவரிடம் மன்னிப்பு கேட்காவிடில்… வரப்போகும் ஆபத்தைப் பற்றி… எச்சரிக்கை செய்தார்…
VOICEOVER: ராவணன் கோபத்தில் கொதித்தான்… அனுமானை உடனடியாக மரணப்படுக்கையில் தள்ளுமாறு உத்தரவிட்டான்.. ஆனால் அவனுடைய இளைய சகோதரனான.. விபீஷணன் இடையூறு செய்து ஒரு தூதுவனைக் கொல்வது நியாயமாகாது என்பதை ஊர்ஜிதப் படுத்தினான்…
VOICEOVER: பிறகு ராவணன் அனுமானின் வாலில் நெருப்பை வைக்குமாறு உத்தரவிட்டான்… அரசனின் வீரர்கள் அனுமாரின் வாலை துணியால் சுற்றி… அதற்கு நெருப்பு வைத்தார்கள்… அவனது நீண்டவாலில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் அனுமான் வானத்திற்கு பறந்தான்… ராவணனை தண்டிக்கும் வகையில் அவன் இலங்கை முழுவது நெருப்பால் ஆக்கிட முயன்றான்..
VOICEOVER: ஆகையால் அவன் நகரத்தை சுற்றி பறந்து… ஒவ்வொரு கட்டடத்திலும், அரண்மனையிலும் பூங்காவிலும், நெருப்பை வைத்தான்… நெருப்பு ஜ்வாலைகள் வானத்தை எட்டியது… அவரது கோபம் தீர்ந்ததும்… கடலில் இறங்கி அவரது வாலில் இருக்கும் நெருப்பினை… அணைத்தான்…
VOICEOVER: அனுமான் கிஷ்கிந்தாவை அடைந்து.. சீதை பத்திரமாக இருக்கிறாள் என்ற செய்தியை ராமருக்கு தெரிவித்தான்… அதற்கு அத்தாட்சியாக… சீதையின் நகையைப் பார்த்த ராமர் சந்தோஷத்தில் நகைத்தார்