Mythological Stories - Tamil
ராமாயணம் – ராமன்-சீதா திருமணம்
ராமர் தாயின் எண்ணத்தையும், தாயின் ஆணையையும், சிரமேற்கொள்வதை தவிர இவ்வுலகில் புனிதமான காரியம் வேறு எதுவும் இல்லை என்று எண்ணினார்… அதனால் அவர் வனவாசம் செல்ல சம்மதித்தார்

ராமன்-சீதா திருமணம்
காட்சி-1 நெசவாளி, மனைவி, நண்பன்,வனதேவதை, VOICEOVER…
VOICEOVER: விஸ்வாமித்திரரும் இளவரசர்களும் பின் மிதிலைக்கு தொடர்ந்தார்கள்.. அந்த நாட்டை ஆண்ட அரசரின் பெயர் ஜனகர்… அவருடைய மகளின் பெயர் தான் சீதை… அரசர் ஜனகர் யார் இந்த சக்தி வாய்ந்த ருத்ரவில்லை எடுத்து… அதற்கு நாண் பூட்டுகிறாரோ… அவர் தன் மகள் சீதையை திருமணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார்…
VOICEOVER: அந்த வில் எட்டு சக்கரங்கள் கொண்ட ஒரு தேரின் மீது வந்தது…
VOICEOVER: பல வலுவான மாவீரர்கள்… இந்த வில்லினை உயர்த்த முயற்சித்தார்கள்… ஆனால் தோற்றார்கள்.. விசுவாமித்திரர், இராமரை அந்த வில்லினை உயர்த்த உத்தரவிட்டார்… இராமர் அந்த வில்லை சுலபமாக ஏற்றினார்… அதன் ஒரு முனையை தன் காலு நுனியில் வைத்து.. அவர் தன் முழு பலத்தை இட்டு நாணை ஏற்றி அவ்வில்லினை வளைத்த போது.. அது இரண்டாக உடைந்து விழுந்தது…
VOICEOVER: ஜனக மகாராஜாவின் சந்தோஷம் எல்லையை மீறியது… அவர் ராமரை ஆசிர் வதித்ததோடு… தன் அழகு மகளான சீதை, இந்த மாவீர இளவரசரை திருமணம் செய்து கொள்வார் என்று சபையில் அறிவித்தார்… அரசர் ஜனகர் அயோத்திக்கு தூதர்களை அனுப்பி… தசரத மகாராஜாவுக்கு இவ்விஷயத்தை தெரியப் படுத்தி… அவரையும் இந்த இந்த திருமணத்திற்கு வரவேற்க அனுப்பினார்…
VOICEOVER: அரசர் தசரதர் இந்த செய்தியைக் கேட்டதும்… புளங்காங்கிதம் அடைந்து… தன் மனைவிகள் மந்திரிகள்… முனிவர் வஷிஷ்டருடன்…மற்றும் அனைவருடனும், திருமணத்தில் பங்கேற்க வந்தடைந்தனர்…
VOICEOVER: ஜனகர் பிரம்மாண்டமான திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்… ராமர் சீதையை மணமுடித்தார்… அதே நேரத்தில் லஷ்மணர் சீதையின் சகோதரியான ஊர்மிளையையும், பரதனும், சத்ருகனனும் சீதையின் உடன் பிறவா சகோதரிகளான மாண்டவியையும், சுருதகீர்த்தியையும் மணம் முடித்தனர்… அங்கிருந்த அனைத்து மக்களுக்கும், ஒரு மாபெரும் விருந்து வழங்கப் பட்டது… புதுமணத் தம்பதியரை அனைவரும் வாழ்த்தி, ஆசி வழங்கினார்கள்… தசரதன் தன் மகன்களோடும், மருமகள்களோடும் … அயோத்தி திரும்பினார்…
VOICEOVER: அரசர் தசரதருக்கு வயதாகிக் கொண்டிருந்தது… அதனால் ராமரை அரசராக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்… தசரதன் இவ்விஷயத்தைப் பற்றி தன் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்… அவர்கள் அனைவரும் ஒரு மனதாக இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்கள்…
VOICEOVER: ஆனால் ராமரின் பட்டாபிஷேகத்தைப் பற்றி கேட்டதும்.. ஒரு பெண் வருத்தத்தில் ஆழ்ந்தாள்.. அவள் பெயர் மந்தரை… அவள் கைகேயியின் தாதி.. எப்படியாவது இந்த பட்டாபிஷேகத்தை தடுத்தாக வேண்டும் என்று.. அவள் யோசிக்கத் துவங்கினாள்..
VOICEOVER: கைகேயிக்கு முதல் முதல் இந்த பட்டாபிஷேகச் செய்தியை அளித்தவளும் இவள் தான்… முதல் கணத்தில் ராமர் அரசராகப் போகிறார் என்ற செய்தியைக் கேட்டதும் கைகேயி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள்… அவளுக்கு ராமர் மீது அவ்வளவு பாசம்… ஆனால் மந்தரை… அவள் மனதில் விஷத்தை விதைத்தாள்… VOICEOVER: அவள் கைகேயியிடம் ஒருவேளை ராமர் அரசராக ஆனால்… பரதனை தன் சேவகனாக்கி… கைகேயி, கௌசல்யா, மகாராணியின் தாசியாக மாற்ற வாய்ப்பிருக்கிறது… என்று கைகேயியிடம் கூறினாள்…
VOICEOVER: என்ன தான் ராமரின் மீது பாசம் வைத்திருந்தாலும், ராணி கைகேயி தன் பதவியினை நினைத்து.. பயந்து போனாள்… விஷச்செடி அவள் மனதில் முளைத்தது… கைகேயியும், மந்தரையும், ஒரு தீய திட்டம் தீட்டினார்கள்…
VOICEOVER: அரசர் தசரதர்… கைகேயியின் இல்லத்திற்கு சென்று… ராமரின் பட்டாபிஷேக செய்தியை தெரிவிக்க வந்த போது… அவர் கண்ட காட்சியை அவரால் நம்ப முடியவில்லை… கைகேயி தன் அனைத்து ஆபரணங்களையும்… துறந்து விட்டாள்… அவர் அவளிடம் என்ன பிரச்சினை என்று கேட்டாள்…
VOICEOVER: கைகேயி யட்சர்களுடன் நடந்த ஒரு கொடுமையான போரில்… தசரதரை காப்பாற்றிய அந்த நாளை… அவருக்கு நினைவூட்டினாள்… அந்த நேரத்தில் அவர் கைகேயிக்கு… இரண்டு வரங்கள் அளிப்பதாக வாக்களித்திருந்தார்… அதை எப்போது வேண்டுமானாலும்… பெறலாம் என்று கூறியதால்…அவள் அதை இப்போது பெறவேண்டும் என்று நினைத்தாள்… அதில் முதல் வரமானது… பரதனை அரசனாக அறிவிக்க வேண்டும்… இரண்டாவது, ராமரை பதினான்கு வருடங்கள் வனவாசம் அனுப்பவேண்டும்… என்பவைகள் தான்… தசரதரால் அவரது செவிகளை நம்ப முடிய வில்லை…
VOICEOVER: அவர் முகம் வாடி நாவினில் பேச்சு வரவில்லை… அவர் கைகேயியிடம் மண்டியிட்டு… வேறு ஏதாவது கேளேன் என்று கெஞ்சினார்… ஆனால் அவள் மனம் மாறவில்லை.. ஒருவழியாக தசரதருக்கு கைகேயி கேட்ட வரங்களை அளிப்பதை தவிர… வேறு வழியில்லை என்று உணர்ந்தார்…
VOICEOVER: உடனேயே கைகேயி… ராமரை தன் இல்லத்திற்கு அழைத்து… இந்த வரங்கள் பற்றி அனைத்தையும் அவரிடம் கூறினார்… ராமர் பொறுமையாக அவள் கூறிய அனைத்தையும் கேட்டார்… அவளுடையை வார்த்தைகள் அவளுக்கு கோபத்தையும் வரவழைக்க வில்லை… வருத்தத்தையும் கொடுக்க வில்லை… ராமர் தாயின் எண்ணத்தையும், தாயின் ஆணையையும், சிரமேற்கொள்வதை தவிர இவ்வுலகில் புனிதமான காரியம் வேறு எதுவும் இல்லை என்று எண்ணினார்… அதனால் அவர் வனவாசம் செல்ல சம்மதித்தார்…