Mythological Stories - Tamil
ஸ்ரீ கிருஷ்ணர் – கிருஷ்ணனும் காளியன்
நண்பர்கள் ஆடிப் பாடிக்கொண்டு வர… கிருஷ்ணன் மாடுகளுடன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டான்

கிருஷ்ணனும் காளியன்
காட்சி-1
நெசவாளி, மனைவி, நண்பன்,வனதேவதை, VOICEOVER…
VOICEOVER: மாடு மேய்ப்பதை தொழிலாகக் கொண்ட யாதவர்களுக்கு… நந்தகோபர் தலைவன்… பெரிய அளவில் கால்நடைகளை மேய்த்து பசுக்களின் பால் மூலம்… ஜீவனங்களை பெற்றனர்.. இடையர்களின் மேய்ச்சல் தொழிலுக்கு… யமுனா நதி ஒரு ஜீவாதாரமாக விளங்கியது…
VOICEOVER: ஒரு நாள் ஒரு புதிய ஜந்தும் யமுனையை தன் இருப்பிடமாக… ஆக்கிக் கொள்ள வந்தது… பல தலைகளைக் கொண்ட கொடிய நாகமான அதன் பெயர் காளியன்… மிகவும் கொடிய விஷம் படைத்தவன்… விஷத்தின் வீரியம் அதிகம்…
VOICEOVER: ஆதலால் அவனது மூச்சுக் காற்றினாலே… பெரிதும் சிறிதுமான பல உயிரினங்கள் அழிந்து போனது… காளியன் யமுனையை தன் இருப்பிடமாக ஆக்கிய அந்த கணத்திலேயே… அந்த நதி.. விஷமுள்ளதாக ஆனது… அதிலிருந்த அனைத்து உயிரினங்களும் மடிந்து போயின…
VOICEOVER: மறுநாள் கிருஷ்ணன் யமுனை நதிக்கரையில்… மாடுகளுடன் வந்த நண்பர்களோடு… விளையாட சென்றான்… அவர்கள் விளையாட்டிலும், சிரிப்பிலும் பொழுதைக் கழித்தார்கள்.. அதிக நேரம் விளையாடி களைத்துப் போன சிறுவர்கள்…
VOICEOVER: தாகம் தீர்ப்பதற்காக… அருகில் உள்ள ஏரிக்கரைக்கு வந்தனர்… கிருஷ்ணன் ஏரி நீரைப் பார்த்தான்… நீல நிறமாய் விளங்கும் யமுனையின் நீர்… இங்கே பாம்பின் விஷத்தால் கருமையாக இருப்பதைக் கண்டான்.. கருத்த நாகத்தின் விஷத்தை நீக்கி… நீரை தூய்மையாக்க முடிவெடுத்தான்…
VOICEOVER: குழந்தைகள் வேகமாக விரைந்து சென்று… நதிக்கரையில் நடந்ததை யசோதையிடம் சொன்னார்கள்.. செய்தியை அறிந்த கோபர்களும் அதிர்ச்சியுடன் அந்த இடத்தை நோக்கிவந்தனர்…
VOICEOVER: காளியனின் மனைவிமார்கள்… கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டனர்…
கிருஷ்ணன்: நல்லது… உங்களில் யாரையும் நான் துன்புறுத்தப் போவதில்லை… ஆனால் நீங்கள் யாரும் இந்த ஏரியில் வசிக்கக் கூடாது… இங்குள்ள மக்களும், கால்நடைகளும் இந்த நீரை… குடிநீராக பயன்படுத்துவதால்… இதை விஷமாக்குவதை விரும்பவில்லை… நீங்கள் எல்லோரும் கடலுக்குள் சென்று உங்கள் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்…
VOICEOVER: யசோதையும், மற்ற கோபர்களும், மடுவின் உள்ளே இருந்து கிருஷ்ணன் ஒரு காயமும் இல்லாமல் வெளியே வருவதைக் கண்டார்கள்… நண்பர்கள் ஆடிப் பாடிக்கொண்டு வர… கிருஷ்ணன் மாடுகளுடன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டான்…