Mythological Stories - Tamil
ஸ்ரீ கிருஷ்ணர் – கிருஷ்ணனும் இரட்டை மரங்களும்
பெரும் சத்தத்தை கேட்டு வந்த யசோதை… கிருஷ்ணன் மரக்கிளைகளில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள்

கிருஷ்ணனும் இரட்டை மரங்களும்
காட்சி-1
கிருஷ்ணன், யசோதை, தோழி, தேவர்கள், VOICEOVER…
VOICEOVER: கிருஷ்ணன் விளையாடும் போது.. நிறைய தந்திரங்களை செய்து… எல்லா சிறுவர்களையும் விட.. குறும்புக் காரனாக திகழ்ந்தான்…
VOICEOVER: அந்த யசோதைக்கு அவனை சமாளிப்பதும் மிகவும் கடினமாக இருந்தது… அவன் பேரில் நிறைய புகார்கள் வந்த வண்ணம் இருந்தன…
யசோதை தோழி: யசோதா என்வீட்டில் கிருஷ்ணன் வெண்ணெயை திருடி விட்டான்…
கிருஷ்ணன்: அம்மா… நானோ குள்ளமானவன்… வெண்ணைப் பானையோ உயரத்தில் இருந்தது… நான் எப்படி திருடமுடியும்…
யசோதை: கிருஷ்ணா… நாளுக்கு நாள் உன் குறும்புத் தனம் அதிகரித்து வருகிறது… நான் உன்னை தண்டிக்கப் போகிறேன் பார்…
VOICEOVER: அவள் உடனே ஒரு துண்டுக் கயிற்றை எடுத்து… இடுப்பிலே கட்டி மறு முனையினை… ஒரு உரலில் கட்ட எண்ணினாள்… ஆனால் அதன் அளவு சரியாக இல்லை.. மீண்டும் ஒரு துண்டை இணைத்துக் கட்டிப் போடப் போனாள்… மறுபடியும் கயிறு இரண்டு அங்குலம் குறைந்தே காணப்பட்டது…
VOICEOVER: யசோதாவின் முயற்சி தோற்றதையும், அவளது சோர்வையும் கண்ட கண்ணன்… அவளுக்காக மனமிறங்கி கயிற்றில் கட்டுப் பட்டான்…
VOICEOVER: கிருஷ்ணரைக் கட்டிப் போட்ட பின்னர் தன் வீட்டு வேலைகளை கவனிக்க சென்றாள் யசோதை…
VOICEOVER: கிருஷ்ணன் மெல்ல நடந்து வர.. தன்னுடன் உரலும் உருண்டு வருவதைக் கண்டான்…
VOICEOVER: மெல்ல வீட்டை விட்டு வெளியே வந்து… இரண்டு மரங்கள் அருகருகே இருப்பதையும்… அவற்றிற்கு இடையில் சிறு இடைவெளி இருப்பதையும் கண்டான்… உரலில் இருந்து விடுவித்துக் கொள்ள… ஒரு யுக்தி தோன்றியது… அவன் தனக்குள்ளாகவே…
கிருஷ்ணன்: இப்போது நான் இந்த இரு மரங்களுக்கு இடையே நான் புகுந்தால்… என்னுடன் கட்டிய உரல் வெளியே வரமுடியாது… எனது முழு பலத்தையும் உபயோகித்து உரலை இழுப்பேன்… அப்போது கயிறும் அறுபடும்… நானும் விடுதலை ஆவேன்…
VOICEOVER: உரலை இழுத்தான் கிருஷ்ணன்… அவன் நினைத்தது போல கயிறு அறுபட வில்லை… மறுபடியும் பலமுடன் இழுத்தான்… இம்முறை கயிறு அறுபடாமல் இரண்டு மரங்களும்… பெரும் சத்தத்துடன் கீழே சாய்ந்தன…
VOICEOVER: என்ன ஆச்சர்யம்… இரண்டு மரங்களிலில் இருந்து இரண்டு தேவர்கள் வெளியே வந்தார்கள்…
தேவர்கள்: நாங்கள் குபேரனுடைய குமாரர்கள் ஆவோம்.. நாங்கள் செய்த தவறுக்கு நாரதர் எங்களை மரமாக நிற்க சாபம் தந்தார்… அது மட்டுமில்லாமல் கிருஷ்ணர் பாதம் எப்பொழுது படுகிறதோ.. அப்பொழுது எங்கள் சாபம் தீரும் என்றார்… இவ்வாறு சொல்லிய படியே.. தேவர்கள் இருவரும்… கிருஷ்ணரை வணங்கி விட்டு சென்றனர்…
VOICEOVER: பெரும் சத்தத்தை கேட்டு வந்த யசோதை… கிருஷ்ணன் மரக்கிளைகளில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள்… எப்படி அந்த சிறு குழந்தை பல்லாண்டு காலமாக வளர்ந்த பெருமரங்களை சாய்த்திருப்பான் என்பது… அவளுக்குப் புரியவே இல்லை…