Mythological Stories - Tamil
ஸ்ரீ கிருஷ்ணர் – கிருஷ்ணனும் அவரது பிரபஞ்சமும்
கிருஷ்ணர் தன் சிறு வாயை மூடிக் கொண்டார் அவள் பயத்தோடும் ஆச்சரியத்தோடும்.. கலங்கிப் போனாள்

கிருஷ்ணனும் அவரது பிரபஞ்சமும்
காட்சி-1
யசோதை, VOICEOVER…
VOICEOVER: கோகுலம் என்பது யமுனா நதிக்கரையில் ஒரு சிறு கிராமம்… கோகுலத்தில் பெரும்பாலும் மாடுமேய்க்கும் இடையர்களே வாழ்ந்து வந்தனர்…
VOICEOVER: நந்தகோபால் இடையர்களுக்கெல்லாம் தலைவன்… குழந்தையாக வளர்ந்த கிருஷ்ணனின் வளர்ச்சி… யசோதையும், நந்தகோபாலும் கனவு கண்டது போலவே அமைந்திருந்தது…
VOICEOVER: ஒரு நாள் கிருஷ்ணனை அவனது விளையாட்டுப் பொருட்களுடன்… விளையாடசொல்லிவிட்டு சமையலறை பக்கம் போனாள் யசோதை…
VOICEOVER: சுற்றும் முற்றும் பார்த்த குறும்புக்கார கிருஷ்ணன்… மெல்ல மெல்ல நடந்து சென்று… கதவுகளைத் தாண்டி தோட்டத்திற்குள் மண்ணில் விளையாட சென்று விட்டான்…
VOICEOVER: சமையலறையிலிருந்து வெளியே வந்த யசோதை கிருஷ்ணனை வீட்டினுள்ளே எங்கே தேடியும் காணாமல்… வெளியே வந்து பார்த்தாள்…
யசோதை: கிருஷ்ணா… குறும்பு செய்யும் கிருஷ்ணா… அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்…
VOICEOVER: அவளது குரலைக் கேட்ட கிருஷ்ணன்… மெல்ல அவளருகே வந்தான்..
யசோதை: வாயில் என்ன வைத்திருக்கிறாய்…
VOICEOVER: அவளை பார்த்தபடி கிருஷ்ணன் தலையை மெல்ல இருபுறமும் அசைத்தான்…
யசோதை: இப்பொழுதே வாயை திறந்து காட்டு கிருஷ்ணா…
VOICEOVER: யசோதை பூமியையும், ஏழுகடல்களையும், மலைகளையும், பாலைவனங்களையும், சூரிய சந்திரர்களையும், வான் வெளியில் நட்சத்திரக்கூட்டங்களையும், முடிவில்லாத விண்வெளியையும், அகில உலகத்தையும் கண்டாள்…
VOICEOVER: கிருஷ்ணர் தன் சிறு வாயை மூடிக் கொண்டார்…
அவள் பயத்தோடும் ஆச்சரியத்தோடும்.. கலங்கிப் போனாள்…
யசோதை: என் கண்களை திறந்த படியே நான் ஒன்றும் கனவு காணவில்லையே… என் முன் நடப்பவைகளை தானே நான் கண்கிறேன்…
அப்படியானால் என் மகனின் தெய்வாம்சத்தினால் தான் இந்த காட்சிகளைக் கண்டிருக்க கூடும்…
VOICEOVER: தாய் யசோதா நடந்தவைகளை எல்லாம் மறந்தே போனாள்…
தன் குழந்தையை வீட்டிற்குள்ளே அழைத்துச் சென்றாள்..