Mythological Stories - Tamil
ஸ்ரீ கிருஷ்ணர் – கிருஷ்ணனும், கோவர்த்தன மலையும்
கிருஷ்ணனால் பாடம் கற்பிக்கப் பட்ட இந்திரன்… சொர்க்கலோகத்திற்கு திரும்பிச் சென்றான்

கிருஷ்ணனும், கோவர்த்தன மலையும்
காட்சி-01 கிருஷ்ணன், VOICEOVER…
VOICEOVER: ஒவ்வொரு வருடமும் படையல் போடுவது பிருந்தாவனத்தில் வசிப்பவர்களின் வழக்கம்… இந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொருவரும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்..
VOICEOVER: கிருஷ்ணனின் இல்லத்திலும் எல்லோரும் மும்முரமாக இருந்தார்கள்… படையல் படைப்பது சம்பந்தமாக ஊர் பெரியவர்களிடம் நந்தகோபன் பேசிக்கொண்டிருந்த போது… கிருஷ்ணன் கேட்டான்..
கிருஷ்ணன்: அப்பா… நீங்கள் எல்லோரும் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்… அதைப் பற்றி எனக்கு விளக்கமாக கூறுங்களேன்
நந்தகோபன்: இந்திரன் என்னும் கடவுளை வணங்கவே… இந்த விழா ஏற்பாடுகள்… மழைக் கடவுளான இந்திரனின் ஆசியைப் பெறவே… இந்த நன்றி பாராட்டும் வைபவம் நடக்கிறது… புரிகிறதா…
கிருஷ்ணன்: நீங்கள் எதை வைத்து மழை தருபவன் இந்திரன் என்று தீர்மானித்தீர்கள்…
நந்தகோபன்: நிச்சயமாக… அவர்தான் நமக்கு நல்ல வளமான வாழ்வைத் தருபவர்… அவர் தான் மேகங்களை ஆளுகின்ற மழைக் கடவுள்… அதனால் அவரது ஆசியால் தான் நமக்கு வருடா வருடம் மழை கிடைக்கிறது..
கிருஷ்ணன்: இல்லை தந்தையே… அப்படி நினைப்பது தவறு… மேகங்களைத் தவிர… நமது ஊரிலிருக்கும் மலை தான் நமக்கு துணை புரிகின்றது.. பசுமையான மலைதான் மழைக்கு காரணமாக அமைகின்றது… ஆம் தந்தையே நமது கோவர்த்தன மலைதான்.. நல்ல மூலிகைகள், தாவரங்கள் தருகிறது.. . அது மட்டுமில்லாமல், தூய நீர், தூய காற்று… பசுக்களுக்கு புற்களை தருவதும் அது தான்… எனவே கோவர்த்தன மலையைத் தான் நாம் வணங்க வேண்டும்.. இந்திரனை அல்ல…
VOICEOVER: கிருஷ்ணனுடைய இந்த பேச்சு… கோபர்களை சிந்திக்க வைத்து… அதனால் இந்திரனுக்கு பதிலாக… கோவர்த்தன மலையை வணங்க முடிவெடுத்தார்கள்..
VOICEOVER: இது இந்திரனின் பெருமையை குறைக்க, அவனது கோபத்தை தூண்டிவிட்டது.. அவமானமடைந்த இந்திரன் கோபர்களை தண்டிக்க எண்ணினான்..
இந்திரன்: என்னுடைய பெருமைகளைப் பேசும் விழாவை… இந்த சூழ்ச்சி மிக்க சிறுவனா நிறுத்தினான்… கடும் மழையையும், இடிமின்னல்களையும், பிருந்தாவனத்திற்கு அனுப்புவேன்… அவைகள் பிருந்தாவனத்தையே நாசமாக்கும்… யார் அவர்களை காப்பாற்றுவார்கள் என பார்க்கிறேன்…
VOICEOVER: ஒளிமயமாக இருந்த பிருந்தாவனம்… இருண்டு போனது… எங்கிருந்தோ வந்த இடியுடன் கூடிய மழை மேகங்கள்… சூரியனை எங்கும் காணாமல் செய்து விட்டது… மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள ஓடி ஒளிந்து கொண்டார்கள்… தங்கள் குடும்பம் மற்றும் உடைமைகளைக் காக்க… எல்லா திசைகளிலும் பறந்தார்கள்…
நந்தகோபன்: கிருஷ்ணா… நாம் இந்திரனை ஒதுக்கி விட்டு கொண்டாடுவதால்.. அவன் நம்மை தண்டிக்கப் போகிறான்… உனது ஆலோசனையால் அப்பாவி மக்கள் துன்பப் படப்போகிறார்கள்… இப்பொழுது என்ன செய்வது…
கிருஷ்ணன்: மூன்று உலகங்களுக்கும் தானே அதிபதி என்று எண்ணுகின்றானா இந்திரன்… அவனது தகுதிக்கு இது கொஞ்சம் கூட அழகில்லை… என்னுடைய மக்களை நான் எப்படி தண்டனையிலிருந்து… காப்பாற்றுவேன் என்று… நான் அவனுக்குக் காட்டுவேன்…
VOICEOVER: கிருஷ்ணன் தனது இடுப்பில் செருகி இருந்த புல்லாங்குழலை எடுத்து ஊதத் தொடங்கினான்…
VOICEOVER: தெய்வீகமான நாதம் பிறந்தது… ஊர்மக்கள் தங்கள் பயத்தை மறந்து அமைதியுடன் காணப்பட்டார்கள்…
VOICEOVER: கிருஷ்ணன் நடந்து செல்ல… பெருங்கூட்டம் கால்நடைகளுடன் அவனது பின்னால் தொடர்ந்து சென்றது… ஆர்ப்பரிக்கும் மழை அந்த கூட்டத்தை கொஞ்சமும் பாதிக்க வில்லை… விரைவில் அனைவரும் கோவர்த்தன மலையடிவாரத்தை அடைந்தனர்…
VOICEOVER: கிருஷ்ணன் தன் சிறு விரலால் கோவர்த்தன மலையை பெயர்த்தெடுத்து. குடை போல் பிடித்தான்…
கிருஷ்ணன்: தாயே, தந்தையே, எனதருமை மக்களே… நீங்கள் அனைவரும் உங்கள் கால்நடைகளை அழைத்துக் கொண்டு இந்த மலைக்கு கீழ் வாருங்கள்… இந்த மழையோ, புயலோ உங்களை பாதிக்காது… வாருங்கள்… உங்களை அனைத்திலும் இருந்து பாதுகாக்க நான் இங்கு இருக்கிறேன்…
VOICEOVER: எல்லா மக்களும் கால் நடைகளும்… கிருஷ்ணன் உருவாக்கிய மலைக் குடையின் கீழ்… தஞ்சம் புகுந்தனர்…
VOICEOVER: மழை கோவர்த்தன மலையின் மேல் கொட்டித் தீர்த்தது… இந்திரனால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலவில்லை… மலையின் கீழே மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்…
VOICEOVER: தேவலோகத்திலிருந்து கீழே இறங்கி வந்த இந்திரன் கிருஷ்ணனிடம்…
இந்திரன்: கிருஷ்ணா என்னை மன்னித்துவிடுங்கள்… நான் பாடம் கற்றுக் கொண்டேன்…
கிருஷ்ணன்: உன்னுடைய பதவி பலத்தால்… ஏற்பட்டிருந்த உனது கர்வத்தைக் குறைக்கவே… நான் இவ்வாறு நடந்து கொண்டேன் இந்திரா…நீ இப்போது போகலாம்… உன் ஆணவத்தை விட்டு விட்டு… அடக்கமுடன் உனது பலத்தை தகுதியான வழியில் முறையாக பயன்படுத்து…
VOICEOVER: கிருஷ்ணனால் பாடம் கற்பிக்கப் பட்ட இந்திரன்… சொர்க்கலோகத்திற்கு திரும்பிச் சென்றான்…