Connect with us

Mythological Stories - Tamil

ஸ்ரீ கிருஷ்ணர் – கிருஷ்ணரும், பழம்விற்கும் பெண்மணியும்

எவர் ஒருவர் அன்போடு கிருஷ்ணருக்கு எதைக் கொடுக்கின்றனரோ அது போலவே ஆயிரம் மடங்கு அவன் அதை அவர்களுக்கே திருப்பி அளிப்பான்

ஸ்ரீ கிருஷ்ணர் – கிருஷ்ணரும், பழம்விற்கும் பெண்மணியும் PR045 03

கிருஷ்ணரும், பழம்விற்கும் பெண்மணியும்

காட்சி-1

கிருஷ்ணர்,பழம்விற்கும் பெண்மணி , VOICEOVER…

VOICEOVER: ஒருநாள் கிருஷ்ணன், பலராமன் மற்றும் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது… தெருவில் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது…

பெண்மணி: பழம்மா… பழம்… பழம் வாங்கலியோ பழம்… பழம்மா…

வாழைப்பழம், மாம்பழம், கமலாப் பழம்… கொய்யாப் பழம்…

VOICEOVER: கிருஷ்ணன் அவற்றில் சிலவற்றை உடனே வாங்க விரும்பினான்… பழம் விற்பவள் கிருஷ்ணரை நேரில் கண்டதும்… அவன் தோற்றத்தில் மயங்கிப் போனாள்…

கிருஷ்ணன்: அன்பு பெண்மணியே… உண்ண எனக்கு பழங்கள் வேண்டும்… ஏதாவது பழங்கள் தருவாயா…

Advertisement

பெண்மணி: பதிலுக்கு நீ என்ன தருவாய்…

VOICEOVER: கிருஷ்ணன் உடனே சில பழங்கள் வாங்க விரும்பினான்… ஆனால் அவனிடம் பணம் ஏதும் இல்லை…

VOICEOVER: ஆவல் பொங்கும் அவனுடைய கண்களில் நெல்மணிகள் வைக்கப்பட்டுள்ள மூட்டைகள் தென்பட்டது…

VOICEOVER: கையளவு நெல்மணிகளை வாரிக்கொண்டு… தெருப்பக்கம் போனான்… பழம் விற்பவள் வெளியே வாசலில் காத்துக் கொண்டிருந்தாள்…

கிருஷ்ணன்: நான் உனக்காக நிறைய நெல்மணிகள் எடுத்து வந்திருக்கிறேன்… அதற்கு பதிலாக எனக்கு பழங்கள் தா…

பெண்மணி: சிறுவனே உன் கைகளில் நெல்மணிகள் ஏதுமில்லையே…

VOICEOVER: கிருஷ்ணன் தன் கைகளில் தான் கொண்டு வந்த நெல்மணிகள் இல்லாததை ஆச்சரியத்துடன் பார்த்தான்…

VOICEOVER: பழம் விற்பவள் கிருஷ்ணனின் முகத்தைப் பார்த்து…

Advertisement

பெண்மணி: என் மடி மேல் அமர்ந்து என்னை அம்மா என்று ஒருமுறை நீ அழைத்தால் போதும்.. எல்லாப் பழங்களையும் உனக்கே தருவேன்…

கிருஷ்ணன்: கிருஷ்ணன் சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான்…

VOICEOVER: உடனே தாவி ஏறி அவளது மடிமேல் அமர்ந்தபடி..

கிருஷ்ணன்: அம்மா…

VOICEOVER: அவன் உடனே மடிமேல் இருந்து கீழே தாவி கேட்டான்..

கிருஷ்ணன்: இப்பொழுது நீ எனக்குப் பழங்கள் தரவேண்டும்…

VOICEOVER: பழம் விற்பவள் உள்ளம் குளிர்ந்து… அவளது கூடையில் உள்ள எல்லாப் பழங்களையும் அவனுக்கு அளித்தாள்…

கிருஷ்ணன் எல்லாப் பழங்களையும் எடுத்து… மார்போடு அணைத்தபடி… சந்தோஷத்துடன் துள்ளிகுதித்துச் சென்றான்.. .

Advertisement

VOICEOVER: பழம் விற்பவள் தனது வீட்டிற்கு சென்று… அவளுடைய பழக்கூடையைப் பார்த்த போது… ஆச்சரியத்தில் அவளது கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை…

VOICEOVER: அவளது கூடை முழுவதும் தங்கமும், ஆபரணங்களும் நிரம்பி இருந்தன…

VOICEOVER: இந்த அற்புதத்தை கிருஷ்ணன் செய்ததிலிருந்து… எவர் ஒருவர் அன்போடு கிருஷ்ணருக்கு எதைக் கொடுக்கின்றனரோ.. அது போலவே ஆயிரம் மடங்கு… அவன் அதை அவர்களுக்கே திருப்பி அளிப்பான் என்பதும் புரிகின்றது…

 

Continue Reading
Advertisement