Connect with us

Mythological Stories - Tamil

ஸ்ரீ கிருஷ்ணர் – கிருஷ்ணரின் தோற்றம்

உன்னுடைய பாவங்களுக்குரிய தண்டனையை நீ அடைந்தே தீருவாய்

ஸ்ரீ கிருஷ்ணர் – கிருஷ்ணரின் தோற்றம் PR045 01

கிருஷ்ணரின் தோற்றம்

காட்சி-1

கம்சன், வசுதேவர், துர்காதேவி, VOICEOVER

VOICEOVER: முன்னொரு காலத்தில், உக்கிரசேனன் என்ற மன்னன் வசித்து வந்தான்… கம்சன் என்ற பெயருடைய மகன் இளவரசனாக மதுராவை ஆண்டு வந்தான்… கம்சன் குரூர புத்தியுள்ள, கொஞ்சமும் கருணையில்லாத… கொடூரமானவனாய் விளங்கினான்…

VOICEOVER: மதுரா நகர மக்கள் எல்லோரும்… அவனது கொடூரகுணத்திற்கு அஞ்சி வாழ்ந்து வந்தனர்… ஆயினும் கம்சன், தேவகி என்னும் தனது ஒன்று விட்ட சகோதரியை… அன்போடு நேசித்தான்…

VOICEOVER: அவள் பணிவும், பக்தியும் உள்ள நல்ல பெண் ஆவாள்… தேவகியின் திருமணம் வசுதேவர் என்ற பெயர் கொண்ட நல்லவருடன் நிச்சயமானது… திருமண வைபவம் கோலாகலமாக நடந்தது… எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து… தேவகியும் வசுதேவரும் தேரில் தேரில் புறப்பட்டனர்…

VOICEOVER: சகோதரியை மிகவும் நேசித்த கம்சன்… தானே இருவருக்கும் பாதுகாப்பாக… தேரை ஓட்டியபடி சென்றான்…

அவர்கள் செல்லும் வழியில்… திடீரென்று வானத்திலிருந்து பெருங்குரல் ஒன்று அசரீரியாக கேட்டது…

Advertisement

அசரீரி: கொடூர கம்சனே… எதற்காக ஆனந்தப் படுகிறாய்… நீ மிகவும் நேசிக்கும் சகோதரியான தேவகியின் மகன் உன்னைக் கொல்லப் போவது நிச்சயம்.. அவளது எட்டாவது குழந்தை… உன்னை நிச்சயம் கொல்லும்…

VOICEOVER: இதைக் கேட்டவுடன் கம்சன் கொதித்து எழுந்தான்…

கம்சன்: இவளது எட்டாவது குழந்தைப் பிறக்கும் முன்னரே இவளைக் கொல்வேன்…

வசுதேவர்: நீ என்ன செய்யப் போகிறாய் என்று உணர்ந்தாயா கம்சா… உன் சகோதரியின் திருமண நாளன்றே அவளைக் கொள்வது நீதியா… நீ அவளை விட்டு விட்டால்… நாங்கள் எங்களுக்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் உன்னிடமே தந்து விடுகின்றோம்… தயவு செய்து எங்களை நம்பு கம்சா…

கம்சன்: நான் தேவகியை விட்டு விடுகிறேன்… ஆனால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்…

VOICEOVER: பின்னர் அவன் திருமண ஊர்வலத்தை மதுராவை நோக்கி திரும்ப செல்லுமாறு ஆணையிட்டான்…

VOICEOVER: மதுராவை சென்றடைந்த உடனே… தேவகி வசுதேவர் இருவரையும்.. சிறையிலிட்டான்…

ஒரு நாள் கம்சன்… அரசவையில் இருந்த பொழுது.. தேவகி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்த செய்தி அவனுக்கு எட்டியது…

Advertisement

உடனே கம்சன் சிறைச்சாலைக்கு விரைந்து சென்றான்…

கம்சன்: தேவகி அந்த குழந்தையைக் கொடு…

VOICEOVER: கன்சன் தேவகியிடமிருந்து அந்த குழந்தையைப் பறித்து… அதன் இரண்டு கால்களையும் ஒன்றாக பிடித்து தலையில் ஓங்கி அடித்தான்… அடித்த கணத்திலேயே குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது…

VOICEOVER: இதற்கு பிறகு பிறந்த ஐந்து குழந்தைகளையும், கம்சன் இதுபோலவே அடித்துக் கொன்று விட்டான்…

இதற்கு பிறகு பிறந்த ஐந்து குழந்தைகளையும், கம்சன் இதுபோலவே அடித்துக் கொன்று விட்டான்…

இந்த நேரத்தில் தேவகி, ஏழாவது முறையாக கர்ப்பம் தரித்தாள்… அவளது ஏழாவது குழந்தை, மாயமான முறையில் கோகுலத்தில் வசித்து வந்த, வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணி என்பவளின் கர்ப்பப் பைக்குள் வைக்கப்பட்டது… பின்னாளில் இக்குழந்தை பலராமன் என அழைக்கப் பெற்றார்..

காவலாளி: மன்னா ஏழாவது குழந்தை இறந்தே பிறந்திருக்கிறது…

கம்சன்: ஹ… ஹ… ஹ…. ஹ… ஹ… ஹ….

Advertisement

VOICEOVER: ஆவணி மாதம் எட்டாம் நாளன்று… பெரும் புயல் காற்று மதுரா நகரத்தை சூழ்ந்து வீசிற்று… பெரும் கருமேகங்களின் கூட்டங்களின் இடையே… மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது…

VOICEOVER: தேவகி எட்டாவது முறையாக கர்ப்பம் தரித்தாள்… திடீர் என மகாவிஷ்ணு அவர்கள் முன் தோன்றி…

மகாவிஷ்ணு: தேவகி, வசுதேவரே… உங்களது விருப்பத்தை நிறைவேற்ற… உங்கள் இருவருக்கும் மகனாக பிறக்கப் போகிறேன்..

வசுதேவரே… நீங்கள் உடனே இந்த குழந்தையை கோகுலத்தில் நந்தன் இல்லத்தில் வைத்து விட்டு… அங்கிருக்கும் குழந்தையை இங்கே மாற்றி வையுங்கள்… இவ்வாறு கூறிவிட்டு… மகாவிஷ்ணு மறைந்து விட்டார்….

VOICEOVER: அன்று நள்ளிரவே தேவகி ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள்…

வசுதேவர்: என்ன அற்புதம்… என் கை விலங்குகள் தானாகவே கழன்று விட்டதே.. தேவகி… குழந்தையை சீக்கிரம் கொடு… நான் உடனே கோகுலத்தில் உள்ள நந்தன் இல்லத்திற்கு எடுத்து செல்கிறேன்…

VOICEOVER: வசுதேவர் புறப்பட தயாரான போது… சிறைக்கதவுகள் தானாக திறந்து கொண்டது… சிறைக்காவலர்கள் மயங்கி விழுந்தார்கள்… பத்திரமாக குழந்தையை ஒரு கூடையில் வைத்து… கவனமுடன் தலையில் சுமந்து சென்றார் வசுதேவர்…

VOICEOVER: கோகுலத்தை நோக்கி அவர் நடந்த போது. அவரை ஆதிசேஷன் பின் தொடர்ந்தார்… வைகுண்டத்தில் அவன் தானே விஷ்ணுவின் படுக்கை… வசுதேவரின் தலையிலிருந்த கூடையின் மேல்.. தனது படத்தை விரித்த படி தொடர்ந்து வந்தார்… யமுனா நதியின் கரையை அடைந்தார் வசுதேவர்…

Advertisement

VOICEOVER: அவரே ஆச்சரியப்படும் படியாக நதி இரண்டு பகுதிகளாக பிரிந்து… அவருக்கு வழி விட்டது…

VOICEOVER: வசுதேவர் கோகுலத்தை அடைந்தபோது… நந்தனின் மனைவி யசோதை ஒரு பெண் குழந்தையை பெற்று இருந்தாள்…

வசுதேவர் கிருஷ்ணனை அங்கே தொட்டிலில் கிடத்தி விட்டு… அருகில் இருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டார்…

கம்சன்: அந்த பெண் குழந்தையுடன் வசுதேவர், சிறைச்சாலைக்கு திரும்பிச் சென்றார்… அவர் பெண்குழந்தையுடன் சிறைச்சாலைக்கு வந்தவுடன்… சிறைக்கதவுகள் தானாக பூட்டிக் கொண்டன… காவலர்கள் எழுந்து கொண்டனர்… குழந்தையின் அழுகுரல் அவர்களின் காதுகளை எட்டியது… சிசுவின் அழுகையைக் கேட்டதும்… அரசனுக்கு செய்தியை அறிவித்தனர் காவலர்கள்…

வசுதேவர்: தேவகி… குழந்தையைக் கொடு…

கம்சா… உலகமே நடுங்கும் படியான போர் வீரன் நீ… உன்னை எப்படி இந்த சிறு பெண் குழந்தை கொல்லும்…

VOICEOVER: வசுதேவனின் வேண்டுகோளை கம்சன் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை… ஆனால் அந்த சிறு பெண் குழந்தை… கம்சனின் கைகளில் இருந்து நழுவி… காற்றில் பறந்து சென்று… அது துர்காதேவியின் வடிவம் எடுத்துக் கொண்டது…

துர்காதேவி: சூது மனம் கொண்ட கம்சனே… உனது பலத்தை எல்லாம் இது போன்று குழந்தைகளைக் கொல்வதில் காட்டுகிறாயே… தேவகியின் மகன் உன்னைக் கொல்பவர்…இப்பொழுது கோகுலத்தில் மிகவும் பாதுகாப்பாக உள்ளார்… தக்க நேரத்தில் அவர்… உன்னைத் தேடிக் கொள்வது உறுதி… உன்னுடைய பாவங்களுக்குரிய தண்டனையை நீ அடைந்தே தீருவாய்…

Advertisement

இவ்வாறு கூறிவிட்டு… துர்காதேவி மறைந்தாள்…

VOICEOVER: திகைத்துப் போன கம்சன் பயத்துடனே வாழ்வைத் தொடர்ந்தான்…

VOICEOVER: வசுதேவனும், தேவகியும், மகிழ்ச்சியுடன் இருந்தனர்…

VOICEOVER: வசுதேவனும், தேவகியும், மகிழ்ச்சியுடன் இருந்தனர்…

Continue Reading
Advertisement